தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 november 2014

பொலிசாரை அவமானப்படுத்த இடமளிக்க முடியாது: ஜனாதிபதி!



இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தல்: முக்கிய புள்ளி சென்னையில் கைது- வர்த்தக நிலையத்தை கொள்ளையிட்ட பாகிஸ்தானியர்கள் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 08:32.26 AM GMT ]
இலங்கையிலிருந்து தங்கம் கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புடைய முக்கிய புள்ளி ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத தங்கம் கடத்தல் தொடர்பில் தமிழ்நாடு பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் முடிவிலே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபருக்குச் சொந்தமான சென்னை அண்ணா நகர் வீட்டில் இருந்து ஒன்பது கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் இலங்கை மதிப்பு ஐந்து கோடி ரூபாவாகும்.
இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வரை கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் எடுத்துவரப்படும் தங்கம்,அங்கிருந்து தரைமார்க்கமாக சென்னைக்கு எடுத்துவரப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாக பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, வரும் 11ம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக நிலையத்தை கொள்ளையிட்ட பாகிஸ்தானியர்கள் கைது
கண்டியில் வர்த்தக நிலையமொன்றைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் பேரில் ஆறு பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி தெல்தெனிய பிரதேசத்தில் இன்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
வாகனம் ஒன்றில் குறித்த வர்த்தக நிலையத்துக்கு வருகை தந்த பாகிஸ்தானியர்கள், 40 ஆயிரம் பணத்தை அங்கிருந்து கொள்ளையடித்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
வர்த்தக நிலையத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யும் சாக்கில் இவர்கள் அங்கிருந்த பணத்தைக் கொள்ளைடியத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பெண்களும் உள்ளடங்குவதாக மேலும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களை தெல்தெனிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXip1.html

பொலிசாரை அவமானப்படுத்த இடமளிக்க முடியாது: ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 02 நவம்பர் 2014, 08:07.47 AM GMT ]
நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் பொலிசாரை அவமானப்படுத்த இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற பொலிசாருக்கான வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த வைபவத்தில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து ஐந்தாயிரத்துக்கும் அதிகமான பொலிசார் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
பொலிஸ் திணைக்களம் என்பது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு திணைக்களமாகும்.
நாட்டின் பிரச்சினைகளை மட்டுமன்றி வீடுகளில் உள்ள பிரச்சினைளைத் தீர்த்து வைப்பதற்கும் பொலிஸ் திணைக்களம் தலையிட வேண்டியுள்ளது.
இரவு பகலாக பொலிசார் அதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றார்கள். இந்நிலையில் பொலிசார் சிறிய தவறுகளை இழைத்து விடும்போது ஒரு சிலர் அதனை ஊதிப் பெருப்பிக்கின்றார்கள்.
சிறு சிறு தவறுகள் கூட பெரும் சம்பவங்கள் போன்று பேஸ்புக்கில் தரவேற்றப்படுகின்றன. இதன் மூலம் பொலிசார் அவமானப்படுத்தப்படுகின்றனர்.
இனிவரும் காலங்களில் இவற்றுக்கு இடமளிக்க முடியாது.பொலிசாரின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும். கடந்த காலத்தில் ஜனாதிபதி பிரேமதாச 600 பொலிசாரை பயங்கரவாதிகளிடம் சரணடையச் செய்திருந்தார்.
அதன் மூலம் அநியாயமாக 600 பேரின் உயிரும் பயங்கரவாதிகளால் பறிக்கப்பட்டிருந்தது.
உலக வரலாற்றில் எங்குமே பொலிசார் பயங்கரவாதிகளுக்கோ, வேறு எவரிடமோ சரணடைந்ததில்லை. இலங்கையில் மட்டுமே அவ்வாறான சம்பவம் நடைபெற்றுள்ளது.
இனி வரும் காலங்களில் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் இந்த அரசாங்கம் பயங்கரவாதிகளை முற்றாக அழித்து விட்டது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTWKXip0.html

Geen opmerkingen:

Een reactie posten