தனது ராஜினாமா கடிதத்தை முறையாக மகிந்தரிடம் சமர்பிக்கச் சென்றவேளை, மகிந்தர் என்னைப் பார்த்து படு கெட்டவார்த்தையால் திட்டினார் என்று மனம் நொந்து மைத்திரிபால சிறிசேன தனது உற்ற நண்பர் ஒருவருக்கு தெரிவித்துள்ளாராம். மகிந்தர் நேபாளம் புறப்பட முன்னர் அவரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிததை முறைப்படி கொடுக்க மைத்திரிபால முனைந்துள்ளார். அவரைக் கண்டதும் மேசையில் அமர்ந்திருந்த ராஜபக்ஷ கோபமாக எழுந்து, வே*** மனனே என்னை அழிக்கவேண்டும் என்று புறப்பட்டாயா ? வாடா வந்து இங்கே ஒளிந்துகொள்ளு என்று காட்டக்கூடாத இடத்தைக் காட்டி திட்டியுள்ளார்.
இதனை பார்த்து மிரண்டுபோன மகிந்தரின் காவலாளிகள் , நீங்கள் இங்கே நின்றால் ஏதாவது விபரீதமாக ஆகிவிடும் என்று சொல்லி மைதிரிபாலவை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்கள். கடிதத்தை வாங்கி விட்டு, மைதிரிபாலவை அவர்கள் அனுப்பியுள்ளார்கள். கடிதத்தை கொண்டுபோய் காவலாளிகள் கொடுத்து அதனைப் பாராமல் அப்படியே குப்பை தொட்டியில் வீசியுள்ளார் மகிந்தர் என்ற செய்திகளும் சிங்கள இணையம் ஊடாக வெளியே கசிந்துள்ளது. அதன் பின்னரே அவர் நேபாளம் கிளம்பிச் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/1516.html
Geen opmerkingen:
Een reactie posten