தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 25 november 2014

ஒழுகும் வீட்டில் சகதிக்குள் வாழ்க்கை நடத்தும் வலி.வடக்கு மக்கள்-அவல நிலைக்கு தீர்வு கிடைக்குமா?

கல்முனை மாநகர சபையில் அடிதடி: ஒருவர் வைத்தியசாலையில்
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 12:59.18 PM GMT ]
கல்முனை மாநகர சபையில் ஆளும் கட்சியின் உறுப்பினருக்கும் எதிரணியின் உறுப்பினருக்கும் இடையில் இன்று கைகலப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்வத்தில் காயமடைந்தவர் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.ஐ.எம் பிரதௌஸ் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினரான ஏ.எம்.ரியாஸ்க்கும் இடையிலேயே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான எம்.ஐ.எம் பிரதௌஸே காயமடைந்துள்ளார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிஸ் காங்கிரஸை கண்டித்து உரையாற்றியதையடுத்தே இவ்விருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை மாநகர சபையில் மாநகரசபை உறுப்பினர்களிடையே அடிதடி
கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வானது இன்று மாலை மாநகரமுதல்வர் நிசாம் காரியப்பர் தலமையில் ஆரம்பமானது.
இதன்போது ஐ .மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் உறுப்பினரான ஏ.எம.றியாஸ் வீதிக்கு பெயர் வைப்பது தொடர்பான கருத்தினை முன்வைத்து உரையாற்றிக் கொண்டிருக்கும்போது அதனை ஏற்க மறுத்த மாநகர முதல்வர் அப்படியானவற்றை செய்யமுடியாது எனக்கூறியபோதே வாய்த்தர்க்கம் அதிகரிக்க ஆரம்பமானது.
பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம்கட்சியின் உறுப்பினர்களுக்கும் றியாஸிக்கும் இடையே கைகலப்பு மிகவும் உக்கிரமாக தொடர்ந்து கொண்டிருக்கும்போதே தனது ஆசனத்தினை தூக்கி ஆளும் தரப்பினருக்கு வீசியபோது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான எம்.ஐ.எம்.பிரதௌஸஸின் தலையில் பட்டதுடன் அவரது கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
அதன்பின்னர் அங்கு நின்றவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்டவரை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதித்தார்கள். காயமடைந்தவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYeq3.html

ஒழுகும் வீட்டில் சகதிக்குள் வாழ்க்கை நடத்தும் வலி.வடக்கு மக்கள்-அவல நிலைக்கு தீர்வு கிடைக்குமா?
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 01:22.34 PM GMT ]
எங்களை சொந்த மண்ணின் மீள்குடியேற அனுமதிக்காமல் ஒழுகும் வீட்டில் சகதிக்குள் இன்னும் எத்தனை வருடங்கள் வாழ விடப்போகிறார்கள், சொந்த மண்ணில் மீள்குடியேற்றுங்கள் அல்லது நின்மதியாக வாழ ஒரு வீட்டையா வது பெற்றுக் கொடுங்கள் என வலி.வடக்கு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ்.குடாநாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான மழை பெய்து வருகின்ற து. இதனால் சபாபதிப்பிள்ளை, கோணப்புலம், நீதிவான் ஆகிய முகாம்களில் மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளது.
மேலும் பாதுகாப்பு மற்றும் வசதிகளற்ற வீட்டின் கூரைகளில் ஒழுக்கு மற்றும் நிலம் ஊறும் நிலையும் காணப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பிரச்சினைகளை தீர்த்துக் கொடுக்குமாறு மக்கள் உருக்கமான வேண்டுகோளினை விடுத்துள்ளனர்.
இது குறித்து மக்கள் தெரிவிக்கையில்,
20வருடங்களு க்கு முன்னர் எங்களை இங்கே குடியேற்றும்போது கொடுத்த தகர வீட்டிற்கு மண் சுவர்களை அமைத்துக் கொண்டு வாழ்கிறோம்.
ஒவ்வொரு மழை காலமும் எமக்கு பெரும் நரகமாகவே மாறுகின்றது. மழை பெய்யத் தொடங்கினால் எமக்கு கூலிவேலை கிடைக்காது. அதுபோதாதென கூரை ஒழுகும், நில ம் ஊறும் அதே பிரச்சினை இப்போதும் தொடர்கின்றது.
இது குறித்து நாங்கள் ஒவ்வொரு வருடமும் கூறிக்கொண்டிருக்கிறோம். ஆனால் எமக்கு மட்டும் எவ்விதமான பயனும் கிடைக்கவில்லை. தற்போது மழை பெய்கி றது. மழை பெய்தால் வெளியில் நிற்பதை போன்று எங்கள் வீட்டுக்குள் தண் ணீர் நிற்கும்.
இதனால் கடந்த 3 தினங்களாக வீட்டில் நின்மதியாக சமைக்க முடியாமல், உறங்கள் முடியாமல், அவல வாழ்வு வழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எங்கள் பிரச்சினைகளை உற்றுப் பாருங் கள். எமது பிரச்சினைகளையும் மனிதாபிமான அடிப்படையில் எங்களை சொந்த மண்ணில் மீள்குடியேற்றுங்கள் என அந்த மக்கள் கண்ணீர்மல்க உரு க்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYeq4.html

Geen opmerkingen:

Een reactie posten