[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 11:44.59 PM GMT ]
புதுடெல்லியில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக விக்னேஸ்வரன் நாளை இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் முதலமைச்சரின் இந்திய விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் விக்னேஸ்வரன் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லியில் நடைபெறவுள்ள நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் முக்கிய இந்திய தலைவர்கள் சிலருடன் விக்னேஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு நடத்துவார் எனவும் அதற்கான நேரத்தை ஒதுக்கீடு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், பிரதமர் மோடியுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு நடத்துவாரா என்பது பற்றிய உத்தியோகபூர்வ தகவல்களை எதனையும் இந்திய அதிகாரிகள் வெளியிடவில்லை.
வட மாகாண முதலமைச்சர் தரப்பிலும், மோடியுடனான சந்திப்பு பற்றி எவ்வித விடயங்களையும் குறிப்பிடவில்லை.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgry.html
அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு நோய் கிடையாது!– அசோக அபேசிங்க
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 11:50.45 PM GMT ]
நான் கட்சியை விட்டு வெளியேறப் போவதாக வெளியான தகவல் போலியானது.
சிலருக்கு என்னை விரட்டியடிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.
கட்சியின் வெற்றிக்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன்.
கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டுமாயின் கட்சியை மறுசீரமைக்க வேண்டியது அவசியமானது என்பதே எனது நிலைப்பாடாகும்.
கட்சி மறுசீரமைப்பினை ஏற்றுக்கொள்ள விரும்பாத சிலர் என்னை ஆளும் கட்சிக்கு அனுப்பி வைக்க முயற்சிக்கின்றனர்.
ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அமைச்சர்கள் பல கோரி நிற்கின்ற போதிலும், கட்சியின் ஆதரவாளர்களை நிர்க்கதியாக்கி ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் அளவிற்கு நான் சுயநலவாதியல்ல.
கட்சியை வெற்றியீட்டச் செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கமாக அமைந்துள்ளது.
கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டும், இதன் மூலம் கட்சியை வெற்றியடையச் செய்ய முடியும்.
தனிப்பட்ட நலன்களை கருத்திற்கொள்ளவில்லை, தேவையென்றால் எப்போதோ ஆளும் கட்சியுடன் இணைந்திருக்க முடியும்.
எந்த காரணத்திற்காகவும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க சிங்கள பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXgrz.html
கிருஷ்ணராசாவின் கைது - ஐ.நா. பிரதிநிதிகளுக்கு இலங்கை விளக்கம்
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 12:27.40 AM GMT ]
மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் இலங்கை மீதான விசாரணைகளை மேற்கொண்டு தீர்மானம் எடுக்கும் விசாரணைக்குழுப் பிரதிநிதிகளையும், தூதுவராலயங்களின் அதிபர்களையும், அவுஸ்திரேலிய தூதுவரையும் பேராசிரியர் பீரிஸ் சந்தித்தார்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்ட பிரதி வதிவிடப் பணிப்பாளரும் இதில் கலந்து கொண்டார்.
புனர்வாழ்வு செய்யப்படாத எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தவரான சின்னத்தம்பி கிருஷ்ணராஜாவின் சமீபத்தைய கைது தொடர்பாக அமைச்சர் இங்கு விபரித்தார்.
பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நபர்களின் கையொப்பங்கள் அடங்கிய வெற்றுப் பத்திரங்களை இதன் மூலம் கண்டுபிடிக்க முடிந்தது.
இவர் ஆழ்வாப்பிள்ளை விஜேந்திரகுமார் என்றழைக்கப்படும் சண் மாஸ்டரினால் தொழிலில் அமர்த்தப்பட்டுள்ளார். இவர் ரீ.என்.ஏ. உடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார்.
ஐ.நா.விடமிருந்து நிதி பெறுவதற்காக வெற்றுப்பத்திரத்தில் கையொப்பமிடுவதற்கு இந்த முயற்சி பயன்படுத்தப்பட்டது.
யுத்தத்தின் கடைசிக்கட்டத்தில் காலமானவர்களின் மரணச்சான்றிதழையும், தேசிய அடையாள அட்டை விபரங்களையும் சேகரிக்க அவர் உத்தரவு பெற்றிருந்தார்.
யுத்த விதவைகள், வலது குறைந்தோர் ஆகியோரின் தனிப்பட்ட விபரங்களைப் பெறுமாறும் கோரப்பட்டிருந்தது. திரித்துக் கூறப்பட்ட கண்களால் கண்டதாக தெரிவிக்கப்படும் அறிக்கைகளைக் கொண்டு கையொப்பங்களுடன் பத்திரங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென கிருஷ்ணராசா தெரிவித்தார். இத்தகவல்களை திரட்டுவதற்காக பலர் வேலையில் அமர்த்தப்பட்டனர்.
காணாமல்போன, மரணமான அல்லது காயமுற்ற 400 பேரின் பெயர் விபரங்களைக் கொண்ட டயரியையும் கிருஷ்ணராஜா வைத்திருந்தார்.
சண் மாஸ்டரும் ரீ.என்.ஏ.யின் முக்கியஸ்தவர்களுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதை இது தெளிவாக்குகின்றன. சண் மாஸ்டர் வெளிநாட்டில் புகலிடம் கோர உள்ளார். இது தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன. விஜேந்திரகுமார் என்றழைக்கப்படும் சண் மாஸ்டர் ரீ.என்.ஏ. அதிகாரி என்பதை அறிக்கை ஒன்றில் ரீ.என்.ஏ. மறுத்துள்ளது.
அவர் ரீ.என்.ஏ. அரசியற் கட்சியில் முக்கிய பங்கேற்றவர். கடந்த இரு மாதங்களாக கிருஷ்ணராசாவுக்கும் சண் மாஸ்டருக்கும் இடையில் ஏராளமான தொலைபேசி உரையாடல்கள் நடைபெற்றுள்ளமை தெளிவாகத் தெரிகிறது.
இந்த சம்பாசணைகள் நாளாந்த அடிப்படையில் நடைபெற்றுள்ளன.
இந்த மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக விசாரணைகளை திரிவுபடுத்திக் கூற நலனுள்ள கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு தொடர்பாகப் போலி வாக்குறுதிகளையும் கொடுத்து அவர்களின் துன்பங்களிலிருந்து ஆதாயம் தேடப் பார்க்கின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு சர்வதேச விசாரணைகளை நடத்துவதை இலங்கை நிராகரித்துள்ளது. இந்த விசாரணை சில அடிப்படைக் கோட்பாடுகளையும், நியாயத்தையும் கொண்டதாக அமைவதே நியாயமானதென சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது.
இவ்வாறு அமைச்சர் பீரிஸின் நீண்ட அறிக்கையில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgr0.html
Geen opmerkingen:
Een reactie posten