தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

மாவீரர் தின பீதி காரணமாக வடக்கில் பாதுகாப்பு அதிகரிப்பு!

வரவு செலவுத் திட்ட விருந்துபசாரத்தை புறக்கணித்த ஆளும் கட்சியினர் குறித்து கவனம்!
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 11:27.25 PM GMT ]
2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் பங்கேற்காத ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டதன் பின்னர் சபாநாயகரினால் இந்த விருந்துபசாரம் வழங்கப்படுவது வழமையாகும்.
இம்முறை சபாநாயகர் சமல் ராஜபக்சவினால் வழங்கப்பட்ட மரபு ரீதியான விருந்துபசாரத்தில் 100க்கும் மேற்பட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
சபாநாயகர் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறும் விருந்துபசாரத்தில் ஆளும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பது வழமையானதாகும்.
இம்முறை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட விருந்துபசாரத்தில் ஆளும் கட்சியின் 40க்கும் குறைவான உறுப்பினர்களே பங்கேற்றுள்ளனர்.
இதனால் விருந்துபசார மண்டபத்தின் பல மேசைகள் காலியாக இருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
கடந்தகாலங்களில் சபாநாயகரின் விருந்துபசாரத்தின் போது ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர் எனக் குறிப்பிடப்படுகிறது.
ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் குறைந்தளவானவர்களே விருந்துபசாரத்தில் பங்கேற்றனர் என்ற செய்தி, ஆளும் கட்சியை சிந்திக்கத் தூண்டியுள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான ஆளும் கட்சி உறுப்பினர்கள் விருந்துபசாரத்தை புறக்கணித்தமைக்கான காரணங்களை கண்டறிய அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYer1.html
அரசாங்கத்தை விட்டு எவரும் வெளியேறப் போவதில்லை!– டிலான்
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 11:33.43 PM GMT ]
அரசாங்கத்தை விட்டு எவரும் வெளியேறப் போவதில்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரோரா தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியை விட்டு விலக போவதாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
எனினும், அவ்வாறு ஆளும் கட்சியை விட்டு எவரும் வெளியேறப் போவதில்லை.
10 முதல் 15 வரையிலான ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக முதலில் அறிக்கப்பட்டது.
எனினும், ஆளும் கட்சியிலிருந்து மொத்தமாகவே ஆறு பேர் மட்டுமே விலகிச் சென்றுள்ளனர்.
மாகாணசபைகளின் ஆட்சியைக் கைப்பற்றப் போவதாக ஓர் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
இவ்வாறான போலிப் பிரச்சாரங்களின் அடிப்படையில் மட்டும் அரசியல் செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்றே;ற போது அமைச்சர் டிலான் பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYer2.html
மாவீரர் தின பீதி காரணமாக வடக்கில் பாதுகாப்பு அதிகரிப்பு!
[ செவ்வாய்க்கிழமை, 25 நவம்பர் 2014, 11:39.36 PM GMT ]
மாவீரர் தின பீதி காரணமாக வடக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழந்த போராளிகளை நினைவு கூரும் வகையில் நடத்தப்பட்டு வரும் மாவீரர் தின நிகழ்வுகள் இம்முறை பிரமாண்டமான முறையில் வடக்கில் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
வடக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இன்றும் நாளையும் சில இடங்களில் மாவீரர் தின அனுட்டானங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டியுள்ளனர்.
மாவீரா தின அனுட்டானங்களில் ஈடுபட ஆயத்தமாகுமாறு கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது என சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
திடீர் வீதிச் சோதனைகள், இரவு நேர ரோந்து சேவை மற்றும் வாகன சோதனை போன்ற விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRZKYer3.html

Geen opmerkingen:

Een reactie posten