[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 01:23.36 PM GMT ]
குறித்த பொலிஸ்காரர் குடிபோதையிலேயே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது தமது உறுப்பினர் ஒருவர் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ்காரர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி நாளை பிரதேசத்தின் சகல தோட்ட தொழிலாளர்களும் பணிப்புறக் கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளரை கேட்டபோது, தொழிலாளர்களில் இரண்டு குழுவினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலை தடுக்க சென்ற போது பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன்போது பொலிஸார் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியபோது பொதுமகன் ஒருவரும் பொலிஸாரில் மூவரும் காயமடைந்ததாக பேச்சாளர் அஜித ரோஹன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmt7.html
நாட்டின் அன்பான தந்தை என்று தம்மை தாமே இனிமேலும் மஹிந்த ராஜபக்ச அழைக்க முடியாது!- ஐதேக
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 03:02.23 PM GMT ]
அனுபவம் மற்றும் திறமைகள்�� அடிப்படை புலனாய்வு என்பன பக்கசார்புக்கு உட்பட்டவையாக மாறியுள்ளதாக அந்தக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் இந்திய பிரதமர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோருக்கு எதிராக எழுதப்பட்டு கட்டுரையும் அதன் பின்னர் அதற்காக மன்னிப்பு கோரியமையும் நாட்டுக்கு அவமானமான விடயங்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சி தமது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவு நடவடிக்கை மற்றும் பெறுமதிமிக்க இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் யாவும் ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் கசப்பான ஒன்றாக மாறியுள்ளன.
இந்தநிலையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அதாவது பாதுகாப்பு அமைச்சரான மஹிந்த ராஜபக்ச, தமக்கு எதிராக விசாரணையை ஏற்றுக்கொள்வாரா? அல்லது தமது அதிகாரம் மிக்க சகோதரர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிடுவாரா? என்று ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
ஏற்கனவே தண்ணீருக்காக போராட்டம் நடத்திய போது வெலிவேரியாவில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் இராணுவத்தினர் நடத்திய விசாரணையின் முடிவு இதுவரை வெளியாகவில்லை.
இந்த கொலைகளுக்கு காரணம் என்று கூறப்படும் பிரிகேடியர் ஒருவர் இராஜதந்திர சேவையில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச துரதிஸ்டவசமாக தமது அதிகாரத்தை இழந்தவராக உள்ளார்.
இது அவரின் சகோதரரான உத்தியோகபூர்வமற்ற பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் கோத்தபாயவினால் மாத்திரம் அல்ல. அனுபவமற்ற இளைஞர்களின் அரசியல்; காரணங்களும் காரணமாக அமைந்துள்ளன.
அண்மையில் தமது கால்ட்டன் விளையாட்டு கழகத்தை பிரசித்திபடுத்துவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரபல பாடகர் ஒருவருடன் மாணவிகள் பயிலும் பாடசாலைகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இதன்போது நாமல் ராஜபக்சவும் அவரின் குழுவினரும் மகளிர் பாடசாலைகளில் நடந்துகொண்ட விதம் குறித்த பாடசாலைகள் கட்டிக்காத்து வரும் உயரிய ஒழுக்கங்களை கேள்விக்குரியதாக்கியுள்ளது.
இந்தநிலையில் அனைத்து சமய தலைவர்களுக்கும் தாம் வேண்டுகோள் விடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அராஜக நிலைமை முடிவுக்கு வரவேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் தாம் நாட்டின் அன்பான தந்தை என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
அவரின் உற்றார் உறவினர்கள் நாட்டின் பெறுமதியை உயிருடன் அழித்துக் கொண்டிருக்கும் போது தாம் நாட்டின் அன்பான தந்தை என்று மஹிந்த ராஜபக்ச கூறமுடியாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmu2.html
Geen opmerkingen:
Een reactie posten