தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 augustus 2014

தமிழ் மாணவன் தனக்குத் தானே காயம் ஏற்படுத்தினாராம்: உயர்கல்வி அமைச்சரின் கண்டுபிடிப்பு !

இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் மீண்டும் நெருக்கடிகளை தோற்றுவித்து அதனை இனவாத மோதலாக மாற்றும் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தம்புள்ளையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டதாக கூறப்படும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
இந்த மாணவர் பற்றிய தகவல்கள் அறியப்பட்டிருந்த போதிலும் பரீட்சைகள் முடியும் வரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் தனக்கு தானே காயத்தை ஏற்படுத்தி கொண்டு அதனை தாக்குதலாக காட்ட முயற்சித்துள்ளார்.
இதன் மூலமாக இனவாத மோதல் ஒன்றை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர் எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ள போதிலும் விடுதியில் தங்கியிருந்த மாணவரை வெளியில் இருந்து வந்த குண்டர்கள் சிலர் தாக்கியுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்தது.
அரசாங்கத்தின் குண்டர்களே மாணவரை தாக்கியதாகவும் விடுதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு தரப்பினரின் உதவியின்றி எவரும் பல்கலைக்கழக விடுதிகளுக்குள் பிரவேசிக்க முடியாது எனவும் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடனேயே மாணவர் தாக்கப்பட்டதாகவும் மாணவர் ஒன்றியம் கூறியிருந்தது.
அரசாங்கம் மாணவர்கள் மத்தியில் இனவாதத்தை தூண்டி பிரச்சினைகளை வேறு பக்கம் திசை திருப்ப முயற்சித்து வருவதாகவும் ஒன்றியம் குற்றம் சுமத்தியிருந்தது.
சப்பிரகமுவ பல்கலைகழக மாணவன் குற்றத்தடுப்பு பொலிசாொல் கைது
கொழும்பு- சப்ரகமுவ பல்கலைக்கழத்தில் மாணவர்களுக்கிடையில் கடந்த வாரம் இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்த கிளிநொச்சியை சேர்ந்த மாணவனை இன்றைய தினம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் கைதசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி பல்கலைக்கழகத்தில் கடந்தவாரம் தமிழ்-சிங்கள மாணவர்களுக்கிடையில் உருவான மோதலில் கிளிநொச்சியை சேர்ந்த ச.சுதர்ஷன் என்ற மாணவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் நேற்றய தினம், குறித்த மாணவன் வைத்தியசாலையிலிருந்து திரும்பிய நிலையில் வைத்தியசாலை பொலிசார் மாணவனை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை மாணவனை பலாங்கொடை பொலிசார் பொறப்பேற்றுச் சென்றிருந்தனர்.
இதன்பின்னர், இன்றைய தினம் காலை 9மணிக்கு குறித்த மாணவனை பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிசார் கைதுசெய்து கொண்டு சென்றுள்ளதாக பெற்றோர் தெரிவித்திருக்கின்றனர்.
சம்பவத்தின்போது மாணவனுடன் பெற்றோர் மற்றும் சகோதரன் இருந்துள்ளனர்.
எனினும் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறிவிட்டு மாணவனிடம் விசாரணைகள் நடத்தவுள்ளதாக கூறி கைதுசெய்து கொண்டுசென்றுள்ளனர்.
குறித்த மாணவன் சம்பரகமுவ பல்கலைக்கழகத்தின் புகுமுக மாணவன் என்பதுடன், பல்கலைக்கழகத்தில் 20நாட்கள் மட்டுமே கற்றலில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.
மேலும் குறித்த மாணவன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டமையினை பளை பொலிசார் எழுத்து மூலமாக இன்று காலை முகமாலையில் உள்ள மாணவனின் வீட்டுக்கு தெரியப்படுத்தியிருக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmr5.html

Geen opmerkingen:

Een reactie posten