[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 11:55.45 PM GMT ]
கடுவெல ரங்கடு பத்தினி தேவாலயத்தின் வருடாந்த நீர்வெட்டு வழிபாட்டு நிகழ்வுகள் நேற்று நடைபெற்றது.
இதன்போது எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா ஆகியோர் ஒன்றாக வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
இருவரும் அங்கு வரப்போவது குறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படாத நிலையில், இருவரும் இணைந்து வந்திருந்தமை குறித்து அனைவரும் ஆச்சரியம் கொண்டனர்.
ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மீண்டுமொரு தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமிடும் வகையில் இவர்கள் இருவரும் அவ்வாறு விகாரையின் வழிபாடுகளில் இணைந்து கலந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த வழிபாட்டு நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfwy.html
மருத்துவரை அச்சுறுத்திய பிரித்தானிய பிரஜை கைது (செய்தித் துளிகள்)
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 12:04.46 AM GMT ]
இந்த சம்பவம் இலங்கையின் தென்பகுதி ஹிக்கடுவ, ஆராச்சிகந்த என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரித்தானிய பிரஜை, திரானகம என்ற இடத்தில் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார்.
இந்தநிலையில் அவரை சுகவீனம் என்றுகூறி இளம்பெண் ஒருவர் ஆராச்சிகந்த அரச மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது குறித்த பிரித்தானிய பிரஜை அதிகம் மதுபோதையில் இருந்ததாக கடமையில இருந்து மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இந்தவேளையில் பிரித்தானிய பிரஜை மருத்துவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததுடன், அவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வண்ணம் நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரித்தானிய பிரஜை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
யாழ்.மக்களுக்கு பௌத்த மதம் தொடர்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும்
யாழ்ப்பாண மக்களுக்கு பௌத்த மதம் தொடர்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென யாழ்ப்பாண பௌத்த மதச் சங்கத்தின் தலைவர் ரவி குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
பௌத்த தர்மம் உலக தர்மநெறி என்பதனால் அது குறித்து யாழ்ப்பாண மக்களுக்கு கூடுதல் விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பௌத்த அறநெறிப் பாடசாலையில் 64 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பௌத்த மதம் சார்பான நூல்கள் அதிகளவில் தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.
அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பௌத்த மதத்தில் அடிப்படைவாதம் கிடையாது என ரவிகுமார் அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனையில் இடம்பெற்ற கொலை தொடர்பில் 3 பெண்கள் கைது
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீராவோடை பவுசி மாவத்தையில் நேற்று முன்தினம் இரவு ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
காவத்தமுனை பாடசாலை வீதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான அசனார் நாசர் (வயது 38) என்பர் மீராவோடை பவுசி மாவத்தை வீதியில் வைத்து ஐந்து பேர் சேர்ந்து தாக்கியதில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிர் இழந்துள்ளார்.
மீறாவோடை பவுசி மாவத்தையில் உள்ள தனது அம்மம்மாவின் வீட்டுக்கு வந்து விட்டு அருகில் உள்ள சில்லறைக் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற போதே குறித்த சந்தேக நபர்கள் கோடாரிப் பிடியால் தாக்கியதால் இவர் உயிரிழந்துள்ளார் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
மூன்று பெண்களும், இரண்டு ஆண்களுமாக ஐந்து பேர் சேர்ந்து தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்ததையடுத்தே குறித்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களான ஆண்கள் தலைமறைவாகி உள்ளதாகவும், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் வாழைச்சேனை பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
யாசகரிடம் மாட்டிய அமைச்சர் மைத்திரிபால! மகரகமையில் சம்பவம்
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன யாசகர் ஒருவரிடம் மாட்டிக் கொண்டு விழிபிதுங்கிய சம்பவம் மகரகமையில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சிங்கள மொழியின் பிரபல இசையமைப்பாளரான பண்டித் அமரதேவ மகரகமையில் வசிக்கின்றார். தற்போது இவர் சுகவீனமுற்றுள்ள நிலையில் அவரைப் பார்த்து நலம் விசாரிக்க அமைச்சர் மைத்திரிபால சிரிசேன மகரகமைக்குச் சென்றுள்ளார்.
இடைவழியில் தனது வாகனத்தை நிறுத்திய அமைச்சர், அங்கிருந்த சுப்பா் மார்க்கட் ஒன்றில் நோயாளியின் வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு பழங்கள் வாங்கியுள்ளார, தானே கியூவில் நின்று அதற்கான பணத்தையும் செலுத்தியுள்ளார்.
சுப்பர் மார்க்கட்டை விட்டு வெளியே வரும்போது அங்கிருந்த யாசகர் ஒருவர் அமைச்சரிடம் கையேந்தியுள்ளார்.
ஆனால் அமைச்சர் அவரிருந்த மனோநிலையில் யாசகரைக் கவனிக்காது சென்று வாகனத்தில் ஏறிக்கொண்டுள்ளார்.
இதனால் கோபமுற்ற யாசகர் ‘‘ சுகாதார அமைச்சர் என்னைக் கண்டு பயந்து ஓடிவிட்டார், எனக்குத் தருவதற்குக் கூட அவரிடம் காசு இல்லை, பாவம் அமைச்சர் பரம ஏழையாகி விட்டார்’’ என்று உரத்த குரலில் ஏளனம் செய்துள்ளார்.
இதனைச் செவியுற்ற அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கொல்லென்று சிரித்துள்ளனர்.
அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவும் அசௌகரியத்துக்குள்ளான நிலையில் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அறிந்து கொண்ட அமைச்சர் விமல் வீரவங்ச இதனை ஜனாதிபதி உள்ளிட்ட ஆளும் தரப்பு முக்கியஸ்தர்களிடம் போட்டுக் கொடுத்துள்ளார்.
இது அமைச்சர் மைத்திரிபாலவுக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக அவர் அமைச்சர் விமல் வீரவங்சவைக் கண்டாலே மைத்திரிபால சிரிசேன மெதுவாக நழுவிச்சென்று விடுவதாக இரிதா திவயின சிங்கள ஞாயிறு வாரப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdfwz.html
அடிவாங்கிய ஐந்து பேர்! குடிபோதையில் நான்கு பேர் சஸ்பெண்ட்! பொலிசாரின் கெட்டகாலம்
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 12:10.37 AM GMT ]
இலங்கையில் கடந்த சில நாட்களாகவே பொலிசாருக்கு கெட்ட காலம் ஆரம்பித்துள்ளது. சில மாதங்களுக்கு முன் குருநாகல் பிரதேசத்தில் ராணுவத்தில் இருந்து தப்பி வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்ட பொலிஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து வரிசையாக பொலிசார் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
அண்மையில் பிரதி அமைச்சர் ஒருவரிடம் தண்டப்பணம் அறவிட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
மேலும் பொதுபல சேனாவின் பிக்குமாரின் அச்சுறுத்தல் போன்ற பாதிப்புகளையும் பொலிசார் எதிர்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று கண்டி, ஊருபொக்கை, கித்துல்கல, மூதூர் போன்ற பிரதேசங்களில் கடமையில் இருந்த பொலிசார் மீது பொதுமக்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவங்களில் பொலிசார் ஐவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தம்புள்ளை பகுதியில் குடிபோதையில் கடமையில் இருந்த சார்ஜண்ட் ஒருவர் உள்ளிட்ட நான்கு பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
எப்படியோ இலங்கையில் பொலிசாருக்கு கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdfw0.html
வட மாகாணத்துக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்படாது! இந்திய வலியுறுத்தலின் பின்னர் இலங்கை கருத்து
[ திங்கட்கிழமை, 25 ஓகஸ்ட் 2014, 12:20.28 AM GMT ]
உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வடமாகாண சபைக்கு வழங்கினால் அங்கு மற்றும் ஒரு ஆயுதப் போராட்டமும் விடுதலைப் புலிகளின் மீளெழுச்சியும் இடம்பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஊவா மாகாண தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய அமைச்சர், விடுதலைப் புலிகள் ஐரோப்பியாவில் முழுமையான இயக்கத்தை கொண்டிருக்கின்றனர்.
இந்தநிலையில் அவர்களை யாழ்ப்பாணத்துக்குள் அனுமதித்தால் அங்குள்ள மக்களே பாதிக்கப்படுவர்.
எனவே மீண்டும் பயங்கரவாதம் உருவாகுவதற்கு இடமளிக்க முடியாது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வடமாகாண சபையும் கோருவதை கொடுக்க முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் அடங்கிய 13வது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ள நிலையிலேயே அமைச்சர் எஸ்.பியின் கருத்து வெளியாகியுள்ளது.
எனினும் இது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தா? என்பது தெரியவில்லை
http://www.tamilwin.com/show-RUmsyIRZLdfw1.html
Geen opmerkingen:
Een reactie posten