ஹிருனிகாவின் ஐஸ் பக்கெட் சவால்! ஏளனமாக நிராகரித்த லால்காந்த - ஹரினுடனான தொடர்பை நிறுத்துங்கள்! ஆளும்கட்சியினர் எச்சரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 11:30.35 PM GMT ]
மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா அண்மையில் தன் மீது விடுக்கப்பட்டிருந்த ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக்கொண்டிருந்தார். அதனையடுத்து அவர் தனது மூன்று நண்பர்களுக்கு சவால் விடுக்க வேண்டியிருந்தது.
அதன்போது ஹிருணிக்காவின் காதலன் என்றழைக்கப்படும் ஹரின் பெர்னாண்டோ, ஹிருணிக்காவைக் காதலிக்கும் மேல் மாகாண சபை உறுப்பினர் சேனால் வெல்கம ஆகியோருடன் லால்காந்தவுக்கும் ஹிருணிக்கா சவால் விட்டிருந்தார்.
இந்நிலையில் ஹிருணிக்காவின் சவாலை லால்காந்த ஏளனத்துடன் நிராகரித்துள்ளார். எங்கேயோ ஒரு நாட்டில் உருவான விடயமொன்றை கண்மூடித்தனமாக பின்பற்ற தான் தயாரில்லை என்று அவர் மறுத்துள்ளார்.
மேலும் ஐஸ் பக்கெட் சவாலுக்கு பணத்தை செலவழிப்பதை விட ஊவா மாகாணத்திலுள்ள ஏழைகளுக்கு செலவழிப்பதே சிறந்தது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தவிரவும் இன்டர்நெட்டில் பிரபல்யமடைவதற்காக இதுபோன்ற கிறுக்குத்தனமான காரியங்களை மேற்கொள்வதை விட்டு, இலங்கையின் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக பாடுபடுவதே அரசியல்வாதிகளின் கடமை என்றும் லால்காந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹரினுடனான தொடர்புகளை நிறுத்திக் கொள்ளுமாறு ஹிருனிகாவிற்கு ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் எச்சரிக்கை
ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் ஹரின் பெர்னாண்டோவுடனான உறவுகளை நிறுத்திக் கொள்ளுமாறு, மேல்மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவிற்கு ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
ஆளும் கட்சியில் அதி உயர் பதவியை வகிக்கும் ஒருவரே இவ்வாறு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ஹரின் பெர்னாண்டோ விவாகமானவர், இதற்கு முன்னர் வேறும் ஒருவரின் மனைவியுடனும் தொடர்புகளைப் பேணியிருந்தார்” என ஹிருனிகாவிடம் அவர் தெரிவித்துள்ளார்.
“ ஹரின் பெர்னாண்டோ உங்களுக்கு கட்டாயம் தேவையா?, உங்களது தந்தை இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை பாரதூரமானதாக அமைந்திருக்கும்” என அவர் எச்சரித்துள்ளார்.
ஹரின் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் குறித்த முக்கியஸ்தர் ஹிருனிகாவிற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹரின் - ஹிருனிகாவிற்கு இடையில் தொடர்பு காணப்படுவதாக ஏற்கனவே ஊடங்களில் அண்மைக் காலமாக தாகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இவ்வாறு ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் ஹிருனிகாவை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfv5.html
மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவையில்லை!- சுப்பிரமணிய சுவாமி
[ ஞாயிற்றுக்கிழமை, 24 ஓகஸ்ட் 2014, 11:39.46 PM GMT ]
இந்திய ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தர் சுப்பிரமணிய சுவாமி வாரஇறுதி சிங்களப் பத்திரிகையான இரிதா திவயின பத்திரிகைக்கு நேர்காணல் வழங்கியிருந்தார்.
அவர் தனது பேட்டியின் போது,
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னும் திருப்திகரமான சமாதான சூழல் இன்னும் கட்டியெழுப்பப்படவில்லை. இந்தியாவை எடுத்துக் கொண்டால் புதுடில்லி உள்ளிட்ட இன்னும் இரண்டு மாநிலங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படவில்லை. அப்படியிருக்க இலங்கையில் மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரம் தேவையில்லை.
இலங்கைக்கு எதிரான நவநீதம்பிள்ளை விசாரணைக்குழுவை இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு அனுப்புமாறு கோரிக்கை வைப்பதற்கு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களுக்கு எந்த அருகதையும் இல்லை. மோடி அரசாங்கம் அதற்கெல்லாம் இடமளிக்காது. இலங்கைக்கு எதிரான விசாரணைக்குழுவே முறைகேடானது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை விரும்புவதில்லை. அவர்கள் மீண்டும் விடுதலைப் புலிகளின் கால வாழ்க்கைக்கு பொதுமக்களை இழுத்துச் செல்ல முயற்சிக்கின்றார்கள்.
இலங்கையில் சீன அரசாங்கத்தின் தலையீடு காரணமாக இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை. சீன இராணுவத்தினர் எவரும் இலங்கையின் இராணுவ முகாம்களில் இல்லை. அப்படியிருக்க இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக பேசுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு தகுதி இல்லை.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருந்தது. இந்தியா தொடர்பான தகவல்களை அவர் விடுதலைப் புலிகளுக்கு வழங்கியிருந்தார். அதன் காரணமாக நான் சட்டத்துறை அமைச்சராக இருந்தபோது கருணாநிதியின் அரசைக் கலைத்துள்ளேன்.
தற்போது இலங்கையில் வருவதற்கு பிரதமர் மோடி மற்றும் பாரதீய ஜனதாக் கட்சியின் அனுமதி பெற்றே வந்துள்ளேன். இலங்கையுடனான உறவில் தமிழ்நாட்டின் எதிர்ப்பை நாங்கள் பொருட்படுத்துவதில்லை..
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்துகின்றார்கள். அப்படியெனில் நடைபெற்ற இரண்டு உலகப் போர்களிலும் பொதுமக்கள் கொல்லப்படவில்லையா,? உலக நாடுகளுக்கிடையிலான போர்களில் பொதுமக்கள் கொல்லப்படவில்லையா?
எங்களது அரசாங்கம் அதிகப் பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம். இலங்கைக்கு எதிரான எந்தவொரு செயற்பாட்டையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது விடயத்தில் தமிழ் நாட்டின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கும் அவசியம் எங்களுக்கில்லை என்றும் சுப்பி்ரமணிய சுவாமி மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRYLdfv6.html
Geen opmerkingen:
Een reactie posten