[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 03:26.01 AM GMT ]
தமிழக மீனவர்களைப் பாதுகாக்கக் கோரி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதங்களைக் கொச்சைப்படுத்தியிருக்கிறது இலங்கை அரசின் அந்த இணையதளம்.
கொதித்து எழுந்த எதிர்ப்புகளால், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டு, கட்டுரையை நீக்கியிருக்கிறார்கள்.
எனினும் நிகழ்ந்தது, சாதாரணத் தவறா என்ன?
இந்தியாவை இலங்கை எந்த அளவுக்கு உதாசீனமாகக் கருதுகிறது என்பதற்கான உதாரணம் இது.
இலங்கை அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியான கருத்தை, அந்த நாட்டின் அதிகாரபூர்வக் கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும்.
கட்டுரையைத் திரும்பப் பெற்றிருக்கலாம்; ஆனால், விஷக் கருத்து பரப்பப்பட்டு விட்டதே!
தன் அண்டை நாட்டுத் தலைவர்களை அநாகரிகமாகச் சித்திரிக்கும் மனத்துணிவு இலங்கைக்குத் திடீர் என்று வரவில்லை.
அநாகரிகமாக நடந்துகொண்ட முந்தைய தருணங்களில் கறாராகக் கண்டிக்காமல், மென்மையாகக் கையாண்டதன் விளைவு தான் இது.
அதனால்தான் பிரதமரையும் முதலமைச்சரையுமே போகிற போக்கில் இழிவுபடுத்தி உள்ளனர்.
மனித உரிமை அமைப்புகளின் கள ஆய்வு, ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை... என அனைத்தையும் ஆணவத்துடன் புறக்கணிக்கும் இலங்கை, அதே அணுகுமுறையுடன் இந்தியாவையும் கையாள்கிறது.
சீனாவை ஒரு கேடயம் போல முன்வைத்து இந்தியாவைப் பயமுறுத்துகிறது.
இந்தப் பூச்சாண்டிக்கு அஞ்சினால், இத்தகைய குயுக்தியான வழிமுறையைத் தொடர்ந்து அனுமதித்தால், இந்தியாவின் இறையாண்மை கேலிக்கு உள்ளாகும், தெற்காசியப் பிராந்தியத்தில் அதன் ஆளுமையும் கேள்விக்கு உள்ளாகும்.
இலங்கையுடனான அயலுறவுக் கொள்கைகளை மறுசீரமைக்க வேண்டிய தருணம் இது.
கச்சதீவு திரும்பப் பெறப்படுவதில் இருந்து, கூலிப்படையைப் போல செயல்படும் இலங்கைக் கடற்படையைத் தடுத்து நிறுத்துவது வரை அனைத்தும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஒப்பந்தங்களில் மட்டுமல்ல... நடைமுறையிலும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
'இந்திய மீனவன் மீது கை வைத்தால், இலங்கையின் மீது பொருளாதாரத் தடையே வந்துவிடும்’ என்று அஞ்சும் அளவுக்கு நடவடிக்கைகள் கடுமையாக வேண்டும்.
இலங்கையின் மன்னிப்பும், இந்தியாவின் பெருந்தன்மையும் இராமேஸ்வர மீனவனின் காயங்களுக்கு மருந்து போடாது.
அவர்களுக்குத் தேவை, அமைதியான வங்கக் கடல். அதைச் சாத்தியப்படுத்த வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு!
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnsy.html
எதிர்க்கட்சியில் இணைய இதுவே சிறந்த சந்தர்ப்பம்: பஷீர் சேகுதாவூத்
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 05:28.19 AM GMT ]
பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற நூல் வெளியிட்டு விழா ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி அரசியல் அணியில் இணைய பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
தற்போதுள்ள சூழ்நிலைகளுக்கு அமைய அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளுடன் இருக்க வேண்டும்.
இதற்காக எந்த சந்தர்ப்பத்திலும் நான் எனது அமைச்சு பதவியை விட்டு விலக தயாராகவே இருக்கின்றேன்.
இதற்கு முன்னர் மூன்று முறை நான் வகித்த பிரதியமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்திருக்கின்றேன்.
எனினும் இந்த சந்தர்ப்பத்தில் நான் அமைச்சர் பதவியை விட்டு விலகி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை அசௌகரியத்திற்கு உள்ளாக்க விரும்பவில்லை எனவும் பஷீர் சேகுதாவூத் குறிப்பிட்டுள்ளார்.
ஊவா மாகாண தேர்தலுக்காக ஐ.தே.கட்சி குழுவொன்றை நியமனம்
ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசாரங்களை வழி நடத்துவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதில் தலைமைத்துவச் சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அங்கம் வகிக்கின்றனர்.
தேர்தல் பிரசாரங்களுக்கான முழு பொறுப்பு மற்றும் இறுதி தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் இந்த குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தில் வறுமையை போக்குவோம் என்ற கருப் பொருளில் ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க உள்ளது.
பதுளை மாவட்டத்தின் தேர்தல் பிரசாரம் எதிர்வரும் 16 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமாக உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdns0.html
எமது உறவுகளுக்கு என்றும் துணையிருப்போம்: சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றிய நிர்வாகி
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 05:41.11 AM GMT ]
பா.உறுப்பினரின் செயலாளரும் கட்சியின் கிளிநொச்சி கிளையின் உபதலைவருமான பொன்.காந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றிய நிர்வாகி கந்தையா சிங்கம் ஜெயபுரம் பிரதேச கட்சியின் செயற்பாட்டாளர் மத்தியூஸ், ஜெயபுரம் வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவி, மாற்றுவலுவுள்ளோர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட 20மாணவர்களுக்கு உதவிகளை வழங்கிவைத்தனர்.
இதில் உரையாற்றிய சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றிய நிர்வாகி கந்தையா சிங்கம்,
எமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பெற்றோர்கள் சிந்திப்பதுபோல எமது ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தொண்டர்கள் சிந்திக்கின்றார்கள். அவர்களின் ஒத்தாசையுடன் தான் இந்த உதவிகளை வழங்கி இருக்கின்றோம்.
கல்வி விளையாட்டு மற்றும் துறை ரீதியான வளர்ச்சிகளுக்கு எமது ஆதரவு என்றும் இருக்கும்.
இங்கு வந்திருக்கும் மாணவர்களின் நிலைமைகளை என்னால் உணரமுடிகின்றது. அதற்கேற்பவும் எங்களால் எதிர்காலத்தில் உங்களுக்கு பா.உறுப்பினர் சி.சிறீதரனூடாக உதவிகளை நாம் வழங்கி மாணவர்களின் எதிர்காலம் சிறக்க உதவ நினைக்கின்றோம்.
நீங்கள் தன்னம்பிக்கையுடன் கல்வி செயலில் ஈடுபடவேண்டும் அதுவே மனிதனுக்கு மிகப்பிரதானமான மூலதனம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdns2.html
அவுஸ்திரேலியாவில் சிங்கள புகலிட கோரிக்கையாளர்கள் உண்ணாவிரதம்!
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 06:03.08 AM GMT ]
தமது அகதி அந்தஸ்து கோரிக்கை நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டு வருவதை எதிர்த்தே இந்த போராட்டத்தை அவர்கள் ஆரம்பித்துள்ளனர்.
13 சிங்கள புகலிட கோரிக்கையாளர்கள் வெளியில் இருப்பதுடன் 21 சிங்கள புகலிட கோரிக்கையாளர்கள் கடந்த இரண்டு வருடங்களாக கேர்டின் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரத்துவ கால தாமதம் செயலாக்கம் தொடர்பாக அதிர்ச்சி அளிக்கின்றது எனவும், அகதிகள் கட்டாய தடுப்பில் வைக்கப்பட்டிருப்பது அநீதியானது எனவும் அகதிகளுக்கான அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
அகதி அந்தஸ்து கோருவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய தக்க நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விளக்கமளிக்க அதிகாரிகள் தவறி விட்டனர் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdns3.html
Geen opmerkingen:
Een reactie posten