குவைத்தில் இருந்துவந்த குறுஞ்செய்தியால் வந்த வினை: 4 பேரை கைதுசெய்துள்ள சிங்களம் !
[ Aug 07, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 4820 ]
இதன்போது குவைத்தில் உள்ள இலங்கைப் பிரஜையான ரிஸ்வான் என்பவரால் இந்த குறுந்தகவல் நீர்கொழும்பில் உள்ள ஒருவருக்கு முதலில் அனுப்பட்டுள்ளதோடு, பின்னர் அவரால் மேலும் மூவருக்கு பரப்பப்பட்டமை தெரியவந்தது. இதன்படி நேற்று முன் தினம் (05.08.2014) குறித்த நான்கு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டனர். அலபோடகம - பன்னல பகுதியைச் சேர்ந்த மொஹமட் சிராஸ் மொஹமட், கொழும்பு - 14ஐச் சேர்ந்த மொஹமட் ஜவூபர் மொஹமட் ரீலா, கொழும்பு - 04ஐச் சேர்ந்த முஹம்மத் நஸ்லும் மற்றும் தெஹிவளையைச் சேர்ந்த அப்துல் லதிப் மொஹமட் கியாஸ் ஆகியோரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை எதிர்வரும் 18ம் திகதிவரை வரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
http://www.athirvu.com/newsdetail/700.htmlதமிழகத்தில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கை இளைஞன் கைது !
[ Aug 07, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 6990 ]
மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, தினகரை கைது செய்தனர். தமிழக பொலிசார் அவரை விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் குறித்த மாணவி இந்த இளைஞரோடு காதல் கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. பெற்றோர் இல்லாத நேரத்தில் தினகரை வீட்டிற்கு வருமாறு மாணவி அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/701.htmlஇவர்கள் தான் சாதுவான பிக்குகளா ? சண்டித்தன காட்சிகளை வெளியிட்டது BBC வீடியோ !
[ Aug 07, 2014 05:09:19 AM | வாசித்தோர் : 7755 ]
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, இணையத்தின் ஊடாக ஐ.நா விற்கு சாட்சியமளிப்பதற்காக அரச சார்பற்ற அமைப்புக்களும் சில வெளிநாட்டுக்குழுக்களும் காணாமல் போன விடுதலைப்புலிகளின் உறவினர்களை கொழும்புக்கு அழைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. காணமல் போன நபர்களோடு கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்திக்கொண்டு இருந்த வெளிநாட்டு தூதுவர்களை, அக்கூட்டத்தை நடத்த விடாது பிக்குகள் தடுத்துள்ளார்கள். அதில் இருந்த பிக்குகளில் ஒருவர் இது கோட்டபாயவின் அரசாங்கம் என்று கூறியுள்ளார்கள். இதேவேளை ஏனைய புத்த பிக்குகள், தமது சண்டித்தனத்தை காட்டியுள்ளார்கள். இதனால் அங்கே கூடி நின்ற தமிழர்கள் என்ன செய்வது என்று தெரியாது திகைத்துப்போனார்கள்.
இங்கே நடந்த களோபரத்தை எவரோ வீடியோ பிடித்து, BBC சிங்கள செய்திச் சேவைக்கு கொடுத்துவிட்டார்கள். அவர்கள் அதனை வெளியிட்டுள்ளார்கள். (காணொளி இணைப்பு)
இங்கே நடந்த களோபரத்தை எவரோ வீடியோ பிடித்து, BBC சிங்கள செய்திச் சேவைக்கு கொடுத்துவிட்டார்கள். அவர்கள் அதனை வெளியிட்டுள்ளார்கள். (காணொளி இணைப்பு)
http://www.athirvu.com/newsdetail/702.html
கட்டுரை சரியானதாம் ! ஆனால் போட்ட படம் தான் பிழைத்து விட்டது என்கிறார்கள் மகிந்த தொண்டர்கள் !
[ Aug 07, 2014 05:21:20 AM | வாசித்தோர் : 3685 ]
இணைய தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையின் உள்ளடக்கடத்தை விடவும், கட்டுரை தொடர்பில் வெளியான படம் காரணமாகவே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த கட்டுரையின் ஆசிரியருக்கும் இணையத்தில், கட்டுரையுடன் இணைத்து வெளியிடப்பட்ட கேலிச்சித்திர படத்திற்கும் பொறுப்பில்லை என அவர் சுட்டிக்காட்யுள்ளார். இணைய தளத்தின் பராமரிப்பாளர்களே இவ்வாறு கேலிச்சித்திர படத்தை பிரசூரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆக மொத்தத்தில் இக் கட்டுரையை எழுதிய ஆசிரியரை இலங்கை அரசு ஒன்றும் செய்யப்போவது இல்லை என்பது தற்போது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. யாரோ ஒருவரைப் பிடித்து இவரே இந்த கேலிச் சித்திரத்தை போட்டார் என்று சொல்லப்போகிறார்கள்.
http://www.athirvu.com/newsdetail/703.html
Geen opmerkingen:
Een reactie posten