[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 07:20.39 AM GMT ]
சிங்கள நாளேடு இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது யாழ் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதுடன், பாடசாலை மாணவர்கள் மத்தியில் இனிப்பு பண்டமாக மாற்றி (டொபி) அறிமுகபடுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வட பகுதி இளைஞர்கள் இந்த விடயத்தில் அவதானமாக இருப்பது அவசியமென புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnp3.html
ஆபத்தில் நான்கு இலங்கையர்! தாய்வானில் சம்பவம்
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 07:42.04 AM GMT ]
புத்தளம் மற்றும் சிலாபம், கலேவெல பிரதேசங்களைச் சேர்ந்த நான்கு இளைஞர்களே இவ்வாறு தொழில் தேடி தாய்வான் சென்றுள்ளனர்.
இவர்களில் ஒருவர் தற்போது உயிரிழந்துவிட்டதாக அறியக் கிடைத்துள்ள நிலையில், அவரது சடலம் கூட கிடைக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏனைய மூன்று இளைஞர்கள் தொடர்பிலும் தகவல்கள் இல்லை என்றும் அவர்களது உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த இளைஞர்களை திருப்பி அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்களின் உறவினர்கள் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
குறித்த நான்கு இளைஞர்களும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்திருக்கவில்லை என்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கை -தாய்வானுக்கிடையில் இராஜதந்திர தொடர்புகளை கொண்டிராத நிலையில், அவர்களை திருப்பி அழைப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளும் சாத்தியமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnp4.html
ஐ.எஸ்.ஐ.எஸ், போக்கோ ஹராம் பற்றி முஸ்லிம் அமைப்புகளின் நிலைப்பாடு என்ன? பொதுபல சேனா கேள்வி
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 08:45.47 AM GMT ]
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலாந்த வித்தானகே,
இந்த அமைப்புகள் ஆபிரிக்காவில் இயங்கி வரும் போக்கோ ஹராம் பயங்கரவாத அமைப்பு பற்றிய தமது நிலைப்பாட்டையும் தெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் மேற்கொண்டுள்ள கொடிய பயங்கரவாத குற்றங்கள் குறித்து மௌனமாக இருக்கும் இந்த அமைப்புகளை பயங்கரவாத ஆதரவாளர்கள் மற்றும் அனுதாபிகள் என்றே கருத்தில் கொள்ள வேண்டும்.
இலங்கையில் உள்ள அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா மற்றும் ஷூரா அமைப்புகள் தீவிரவாத முஸ்லிம் அமைப்புகள்.
தற்போதைய அரச நிர்வாகத்தில் உள்ள சில மேல் மட்டத்தினருக்கு முதுகெலும்பில்லை.
இதன் விளைவாக முஸ்லிம் தீவிரவாதம் இலங்கையில் தனது தலையை உயர்த்தியுள்ளது எனவும் டிலாந்த வித்தானகே குற்றம் சுமத்தியுள்ளார்.
அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா மற்றும் ஷூரா ஆகிய அமைப்புகள் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உயர் மட்ட அமைப்புகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnp6.html
Geen opmerkingen:
Een reactie posten