தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 augustus 2014

இலங்கையில் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியே!: ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை!

சோபித தேரரை வாகன விபத்துக்குள்ளாக சதித் திட்டம்- அமைச்சரின் நடை பவனியைத் தடுத்த பொலிஸார்
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 04:13.43 PM GMT ]
நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் மாதுலுவே சோபித தேரரை வாகன விபத்துக்குள்ளாக்க சதித் திட்டமொன்று தீட்டப்பட்டு வருவதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் சோபித தேரர் பயணம் செய்த வாகனம் மற்றுமொரு வாகனத்தில் மோதுண்டது.
கொழும்பு ஹோர்டன் பிரதேசத்தில் வைத்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தை வெறும் ஒர் விபத்தாக கருத முடியாது எனவும் இதனை ஓர் சதித்திட்டமாக கருதப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மற்றும் சோபித தேரர் ஆகியோர் பயணம் செய்த வாகனங்கள் விபத்துக்குள்ளாகியிருந்தன.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையில் தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் அவரை விடுதலை செய்வதற்காக சோபித தேரர் முயற்சி எடுத்ததாகவும் அந்தக் காலத்திலும் இவ்வாறான ஓர் வாகன விபத்தின் மூலம் தேரருக்கு சேதம் விளைவிக்க முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக சோபித தேரருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சரின் நடை பவனியைத் தடுத்த பொலிஸார்
இலங்கையின் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஏற்பாடு செய்திருந்த சமாதான நடை பவனி பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளது.
பாணந்துறையில் இந்த சமாதான நடை பவனி இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நடை பவனியில் பங்கேற்றோர் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் பொலிஸார் அதனை தடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அமைச்சரும் நடை பவனியில் பங்கேற்றிருந்தார்.
இந்த நடை பவனி, சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் அதற்கு பொலிஸாரும் அரசாங்கமும் எதிராக உள்ளது என்று அமைச்சர் குற்றம் சுமத்தினார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfr4.html
புலம்பெயர் தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலிட ஆர்வம்! பாதுகாப்புக்கு அரசாங்கமே பதில் கூறவேண்டும்!- விந்தன்
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 04:23.11 PM GMT ]
பிரான்ஸில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் வடக்கு கிழக்கில் உள்ள வறிய மாணவர்களுக்கு கற்கை உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் அவர்களின் உயர்தரக்கல்வி வரை உதவி செய்வதற்கும் உறுதியளித்துள்ளதாக வடமாகாணசபையின் உறுப்பினர் கே என் விந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
ரெலோ ஸ்தாபகர்களின் நினைவு தின நிகழ்வுக்காக ஜெர்மனுக்கு சென்றிருந்த தாமும் வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோர் பிரான்ஸ_க்கு சென்றிருந்த வேளையிலேயே இந்த உறுதிமொழியை பிரான்ஸில் உள்ள இலங்கை தமிழர்களின் பிள்ளைகள் வழங்கியதாக விந்தன் குறிப்பிட்டார்.
இந்த வகையில் யாழ்ப்பாணத்தின் 1000 மாணவர்களின் விபரங்களை தமக்கு தருமாறு அவர்கள் கோரியுள்ளதாகவும் விந்தன் தெரிவித்தார்.
அத்துடன் வடக்;கு கிழக்கு மாகாணங்களில் நலிவடைந்துள்ள விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கவும் அவர்கள் உறுதியளித்துள்ளதாக விந்தன் கூறினார்

இதேவேளை சுவிஸில் தாம் இலங்கையின் அரசியல் நிலவரம் குறித்தும் ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்று இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
எனினும் இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் அதற்கு இடம்தரவில்லை என்று புலம்பெயர்ந்த தமிழர்கள் சுட்டிக்காட்டினர்.
எனவே அதற்கு இலங்கை அரசாங்கமே பதில் கூறவேண்டும் என்று விந்தன் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் வடமாகாணசபை உரிய சேவைகள் எதனையும் செய்யவில்லை என்று யாழ்ப்பாண மாநகர மேயர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை விந்தன் மறுத்தார்.
அரசாங்கத்தின் பல்வேறு முட்டுக்கட்டைகளுக்கு மத்தியில் வடமாகாணசபை மக்களுக்கு தேவையான யோசனைகளை மாகாணசபை நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம் மாநகரசபையில் 12கோடி ரூபா ஒதுக்கம் இருந்தபோதும் அவை வீணடிக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணை செய்யப்படவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் வடமாகாண முதலமைச்சர் மாநகரசபையின் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் விந்தன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfr5.html
வட மாகாணசபைக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவு திட்ட நிதி ஒதுக்கீடு
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 04:58.25 PM GMT ]
வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவு திட்ட நிதியை பெற்றுக்கொள்ள  எட்டு உறுப்பினர்கள் மட்டுமே தங்கள் திட்டங்களை வழங்கியுள்ளனர்.
வட மாகாணசபை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னர், முதற்தடவையாக பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவு திட்ட நிதி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
இதில் மாகாணசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 4 மில்லியன் ரூபா நிதியும், அமைச்சர்களுக்கு 5 மில்லியன் ரூபா நிதியும், முதலமைச்சருக்கு 6 மில்லியன் ரூபா நிதியும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைவாக உறுப்பினர்கள் மேற்படி நிதிக்கான தங்கள் திட்டங்களை வழங்கும்படி அண்மையில் கேட்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் 8 உறுப்பினர்கள் மட்டுமே அந்த திட்டத்தை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஆளும் கட்சியை சேர்ந்த 5 உறுப்பினர்களும், எதிர்க்கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்களுமாக 8 உறுப்பினர்களின் திட்டங்களே மாகாணசபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீ.வி.கே. சிவஞானம், த.சித்தார்த்தன், ம.தியாகராசா, இந்திரராசா, ப.அரியரட்ணம் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த சி.தவராசா, ஜெயதிலக்க, திலக்கரட்ண ஆகிய 8 உறுப்பினர்களே தங்கள் நிதி திட்டங்களை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மற்றய 25 உறுப்பினர்கள் தமது நிதி ஒதுக்கீட்டிற்குரிய திட்டங்களை இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை. என மாகாணசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfr6.html

இலங்கையில் ஊடக சுதந்திரம் கேள்விக்குறியே!: ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 05:21.27 PM GMT ]
மன்னாரில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகையான புதியவன் தனது 150 இதழை வெளியிட்டு மகிழ்ச்சி கண்டுள்ளது.
இதன் விழா மன்னாரில் புதியவனின் துணை ஆசிரியர் மக்கள் காதர் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக மன்னார் ஆயர் பேரருட் தந்தை கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா ஆகியோர்  கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமெல், வடமாகாண சுகாதார திணைக்கள பணிப்பாளர் திருமதி யூட்ரதனி ஆகியோர் கலந்துகொண்டனர். மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்கள், வாழ்நாள் பேராசிரியர் சிற்றம்பலம், மன்னார் நகரபிதா, பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
புதியவன் நாளிதழின் கடந்தகால பணிகள், செய்திகள், அதன் வளர்ச்சியை பிரமுகர்கள் வாழ்த்தியும் பாராட்டி பேசினர். நிறைவுரையை பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிவகரன் நிகழ்த்தினார்.
புதியவனுக்கான தனது ஆசிச்செய்தியில் மன்னார் ஆயர் ஆண்டகை இராயப்பு யோசப் ஆண்டகை அவர்கள்,
ஊடகம் என்பது உண்மைகளை வெளிக்கொண்டு வருதே. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் ஊடகசுதந்திரம் என்பது கேள்விக்குறியே. பல ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுவதும் காணாமல் போவதும் ஊடக அலுவலகங்கள் தாக்கப்படுவதும் என நீண்டகாலமாக இருந்துவரும் துர்ப்பாக்கிய நிலை தொடர்ந்த வண்ணமே உள்ளது. உண்மைகள் வெளிவந்துவிடும் எனும் அச்சத்தினாலேயே அரச கையாட்கள் இவ்வாறான தீயகாரியங்களை மேற்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
புதியவனுக்கான தனது வாழ்த்துச்செய்தியில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,
நினைத்துப்பார்த்தால் ஆச்சரியம். இந்த நாட்டில் ஊடகம், ஊடகசுதந்திரம் என்பவற்றிற்கு இருக்கக்கூடிய கடந்த கால, சமகால அணுமுறைகள் என்பற்றில் இருந்து எழுந்து ஒரு பீனிக்ஸ் பறவையாக ஒரு ஊடகங்கள் இயங்கி வருவது. ஊடகக்காரனுக்கு இருக்கக்கூடிய வெளி இங்கு இருக்கிறதா எனில் அது மிகப்பெரிய கேள்விக்கு உள்ளாகும் விடயம். ஆனால் குறிப்பாக தமிழ் ஊடகங்கள் எப்படி இத்தனை சவால்களுக்கு மத்தியில் பயணிக்கின்றன. பேனாக்கள் விழுந்துவிடாமல் எழுதுகின்றன என்றால் அதற்கு ஏதோ ஒரு பொதுமைப்பட்ட இழை பின்னப்பட்டிருக்கின்றது என்பதே உண்மையாகலாம். அதனுடாக மன்னார் மண்ணில் இருந்து வெளிவரக்கூடிய புதியவன் நாளிதழையும் அதன் ஊடக குழாமையும் நோக்கினால், அவர்கள் வெற்றி பெற்றவர்களே என குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,
ஊடகம் என்பது என்பது எவருடைய தவறையும் தவறின்றி சுட்டிக்காட்டுவது கடமையாகும். அதை புதியவன் சரியாக செய்கின்றது என்றும்.
பேராசிரியர் சிற்றம்பலம் இன்று தமிழ் தேசியம் பற்றி பலவாறு பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்தாலும் அதன் தூய்மையை வழிப்போக்கர்கள் கையிலும் தேர்தல் வியாபாரத்திலும் தேசியம் சிறை வைக்கப்பட்டும் வந்தாலும், காலத்தின் தேவையாகின்றது. நாம் நேர்மையாக விசுவாசத்துடன் செயற்படாது விட்டால் எமது மக்கள் பட்ட அவலங்கள் எல்லாம் விழலுக்கிறைத்த நீராகிவிடும். மக்களோடு மக்களாக நின்று மனச்சாட்சியை விலைபோகாது நாளும் பொழுதும் மக்கள் பணியே தமது பணி எனத் செயலாற்றக்கூடியவர்களே இன்று தமிழ் தேசியத்தை வழி நடத்துபவர்களே அதன் காவலர்களாக செயற்பட வேண்டும். இத்தகைய பணியில் தமிழ்த் தேசியத்தை முறையாக நெறிப்படுத்தும் புதியவனின் பணி போற்றத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfr7.html

Geen opmerkingen:

Een reactie posten