தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 2 augustus 2014

யுஎன்எச்சிஆர் மற்றும் இலங்கை பரஸ்பர குற்றச்சாட்டு!!

அச்சுவேலியில் வெடிபொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர் முன்னாள் ஈபிடிபி உறுப்பினர்
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 04:00.11 PM GMT ]
யாழ்.புத்தூர் பகுதியில் அபாயகரமான வெடிபொருட்களை வீட்டினுள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் ஈ.பி.டி.பி அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த வெடிபொருட்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்டவை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் அபாயகரமான ரி.என்.ரி வெடிபொருட்களை வைத்திருந்தாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த புதன்கிழமை ஆ.சசீந்திரன் (வயது36) என்பவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபர் முன்னாள் ஈ.பி.டி.பி அமைப்பின் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் 2010ம் ஆண்டு உள்ளுராட்சி சபையில் ஈ.பி.டி.பி கட்சியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு, கட்சி மாறிய நிலையில் ஈ.பி.டி.பி அமைப்பிலிருந்து நீக்கப்பட்டதுடன், பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்தும் நீக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்துள்ளார்.
இவர் அபாயகரமான ரி.என்.ரி வெடிபொருட்களை வைத்து உள்ளூரில் வெடிபொருட்களை, தயாரிப்பதாக கிடைத்த தகவலையடுத்தே அச்சுவேலி பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக் கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfr2.html
யுஎன்எச்சிஆர் மற்றும் இலங்கை பரஸ்பர குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2014, 04:03.44 PM GMT ]
இலங்கையில் அடைக்கலம் கோரியோர் தொடர்பாக இலங்கை அரசாங்கமும், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான பேரவையும் (யுஎன்எச்சிஆர்) மாறி மாறி குற்றம் சாட்டியுள்ளன.
இலங்கை மீது யுஎன்எச்சிஆர் குற்றச்சாட்டு
அகதி அந்தஸ்து கோரிக்கை ஆய்வு செய்யப்படும் முன்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அகதிகளை இலங்கை வெளியேற்றுவது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த ஜூன் 9 ஆம் திகதி முதல் இலங்கையில் அடைக்கலம் கோரியிருந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிய அகதிகள் 214 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதில் 18 பாகிஸ்தானியர்கள் ஏற்கனவே நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 10பேர் நாடு கடத்தப்படவுள்ளனர்.
இந்த செயல்கள் சர்வதேச சட்டத்தை மீறும் செயல்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனம் தம்முடன் ஒத்துழைக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ள நிலையிலேயே அந்த நிறுவனம் இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
யுஎன்எச்சிஆர் மீது இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான பேரவை (யுஎன்எச்சிஆர்) மீது இலங்கை அரசாங்கம் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஊடாக இலங்கையில் அடைக்கலம் கோரியுள்ளவர்களை வெளியேற்றுவதற்கு இலங்கை அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
எனினும் இந்த விடயத்தில் யுஎன்எச்சிஆர் நிறுவனம் ஒத்துழைக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன்காரணமாக இலங்கையில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் குறித்த அகதிகளை மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற்றுவது தொடர்பில் யுஎன்எச்சிஆர் நிறுவனம் உரிய கவனத்தை செலுத்தவில்லை என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக நாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் சுகாதார நிலைமைகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன அத்துடன் பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyITWLcfr3.html

Geen opmerkingen:

Een reactie posten