தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 augustus 2014

கச்சதீவு விவகாரம், யுத்தமொன்றுக்கு வழிவகுக்கும்! இந்திய சட்டமா அதிபர்



யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தில் விக்கியுடன் இணைந்து அடிக்கல் நாட்டிய பஸில்- அச்சுவேலி கைத்தொழில் பேட்டை திறந்து வைப்பு
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 06:56.53 AM GMT ]
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் சர்வதேச அரங்காகப் புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.
முற்பகல் 10.30 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னோஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா, வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற அனைவரும் தீவிர சோதனைகளுக்குப் பின்னர் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த இந்தியத் துணைத் தூதரக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தியும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை - இந்திய நட்புறவின் கீழ், இந்திய அரசாங்கமும் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து 145 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கை புனரமைப்பு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். அச்சுவேலி கைத்தொழில் பேட்டை திறந்து வைப்பு
யுத்தத்தினால் சேதமடைந்திருந்த யாழ். அச்சுவேலி கைத்தொழில் பேட்டை தற்போது புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவினால் இன்று காலை 11 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 
கடந்த 1990ம் ஆண்டு முதல் யுத்தம் காரணமாக இத் கைத்தொழில் பேட்டை சேதமடைந்து இருந்தது.
இந்த நிலையில், இந்திய மற்றும் இலங்கை அரசின் நிதி பங்களிப்புடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்திய அரசு சிறிய நன்கொடை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 225 மில்லியன் ரூபா நிதி உதவியையும் இலங்கை அரசு 50 மில்லியன் ரூபா நிதி உதவியையும் புனரமைப்பு பணிகளுக்காக அளித்திருந்தன.
இந்நிகழ்வில் இந்திய தூதுவர் வை.கே.சிங்கா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் வீரகுமார திஸாநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnpy.html
நான் அரசில் இணையப் போவதாக வதந்தி பரப்புவோர் அரசின் ஒப்பந்தகாரர்களே!- ரவி கருணாநாயக்க
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 07:02.08 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் தேவைகளை நிறைவேற்றும் ஒப்பந்தகார்களே தான் அரசாங்கத்தில் இணைய போவதாக வதந்திகளை பரப்பி வருவுதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் அரசாங்கத்தில் இணைய போவதாக இவர்கள் இதற்கு முன்னரும் பல முறை இப்படியான வதந்திகளை பரப்பி வந்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தீர்மானகரமான இடத்திற்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படியான கதைகளை கட்டவிழ்ந்து விட்டு அவர்கள் திருப்தியடைகின்றனர்.
இவ்வாறான நபர்களுக்கு பதிலளிக்க நான் தயாராக இருக்கின்றேன். எதிர்காலத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnpz.html
கரு, மங்கள, ரவி ஆகியோர் மீது கல்வீசி தாக்குதல் நடத்த திட்டம்
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 07:03.43 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க ஆகியோர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
 ஊவா மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட சஜித் பிரேமதாச தரப்பினர் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு ஊடக நிறுவனங்களில் தலைவர்களின் திட்டம் மற்றும் நிதியுதவியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மேற்படி முக்கிஸ்தர்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடவும் இந்த ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கரு ஜயசூரிய, மங்கள சமரவீர, ரவி கருணாநாயக்க ஆகியோர் ஊவா மாகாணத்தில் கலந்து கொள்ளும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கல்வீசி தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnp0.html
கச்சதீவு விவகாரம், யுத்தமொன்றுக்கு வழிவகுக்கும்! இந்திய சட்டமா அதிபர்
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 07:12.27 AM GMT ]
கச்சதீவு விவகாரத்தில் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் இந்திய- இலங்கை யுத்தமொன்றுக்கான சூழல் ஏற்படலாம் என்று இந்திய சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.
தலைமன்னாரை அண்மித்ததாக இருக்கும் கச்சதீவு இந்தியாவினால் நட்புறவு அடிப்படையில் கையளிக்கப்பட்டது. தற்போது தமிழக மீனவர்கள் கச்சதீவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கு ஆதரவாக தமிழகத்தின் ஆளும் அ.தி.மு.க.உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றையும் தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது இந்திய சட்ட மா அதிபர் முகுல் ரோகித்,  இந்தக் கோரிக்கைக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
1974ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமொன்றின் பிரகாரம் இலங்கையிடம் கச்சதீவு கையளிக்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் பெறுவதானால் இலங்கையுடன் யுத்தமொன்றுக்கு செல்ல வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்படலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நாடுளுக்கிடையிலான யுத்தமொன்றுக்கு வழிவகுப்பது நீதித்துறையின் பணி அல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். சமாதான சூழலை ஏற்படுத்துவதே நீதிமன்றத்தின் நோக்கம் என்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnp2.html

Geen opmerkingen:

Een reactie posten