தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 9 augustus 2014

மன்னார் மாந்தையில் ஆணைக்குழுவின் இரண்டாவது அமர்வு ஆரம்பம்

யாழில் ஆயுததாரிகளின் கைவரிசை: தாயும் மகளும் காயம்
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 06:57.53 AM GMT ]
யாழ். கச்சாய் தெற்கு பகுதியில் அமைந்துள்ள வர்த்தகர் ஒருவரின் வீடொன்றில் புகுந்த கொள்ளையர்கள் தாயையும் மகளையும் கத்தியால் வெட்டி காயப்படுத்திவிட்டு பணம், நகை என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
நேற்று நள்ளிரவு குறித்த வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் வர்த்தகரைக் கட்டிவைத்து வீட்டிலுள்ள பொருட்களைக் கொள்ளையிட்டுள்ளனர்.
இதனை அங்கிருந்த தாயும் மகளும் அவதானித்ததும் கூச்சலிட்டுக் கத்தியுள்ளனர். அவர்கள் இருவரையும் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய கொள்ளையர்கள் நகை, பணம் என்பவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் கச்சாய் தெற்கைச் சேர்ந்த குமாராசாமி சிவபாக்க்கியம் (வயது 55) அவரது மகளான குமாராசாமி நிதர்சினி (வயது 22) ஆகியோர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmsy.html

ஆகேட் இன்டிபெண்டன்ட் கூத்து ! 300 மில்லியன் ரூபா பணம் விரயம்
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 08:36.59 AM GMT ]
கொழும்பில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட ஆகேட் இன்டர்நெஷனல் வர்த்தக தொகுதி திறப்பு விழாவிற்கு 300 மில்லியன் ரூபா பணம் விரயமாக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - 07ல் அமைந்திருந்த கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் முன்னைய அலுவலகத் தொகுதி மறுசீரமைக்கப்பட்டு ஆகேட் இன்டர்நெஷனல் என்ற பெயரில் வர்த்தகத் தொகுதியாக மாற்றியமைக்கப்பட்டது.
இதன் மறுசீரமைப்புக்கு 5000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வர்த்தகத் தொகுதியின் திறப்பு விழா அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்காக மட்டும் சுமார் 300 மில்லியன் ரூபா பணம் விரயமாக்கப்பட்டுள்ளது.
இதிலுள்ள இன்னொரு வேடிக்கை என்னவென்றால், நாமல் ராஜபக்ஷவுக்கு நெருக்கமான நடனக்குழுவினர் இந்த நிகழ்வில் மேடை நடனமொன்றை அரங்கேற்றியிருந்தனர்.
இந்த ஒரு நடனத்துக்காக மட்டும் 80 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருந்தது.
ஆகேட் இன்டர்நெஷனல் வர்த்தகத் தொகுதி சாதாரண பொதுமக்களுக்கு எட்டாத உயரத்தில் உள்ளது. அதிலுள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களின் பொருட்கள், சேவைகளும் உயர்ந்த விலைப்பட்டியலைக் கொண்டுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் கோத்தபாய ராஜபக்ஷவின் நன்மதிப்பை உயர்த்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்காக பெருந்தொகையான மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டிருப்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

மன்னார் மாந்தையில் ஆணைக்குழுவின் இரண்டாவது அமர்வு ஆரம்பம்
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 06:44.26 AM GMT ]
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் இரண்டாவது அமர்வு மன்னாரில் உள்ள மாந்தை பிரதேச செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான இந்த விசாரணை அமர்வில் 4 கிராம அலுவலகர் பிரிவைச் சேர்ந்த 60 பேர் சாட்சியமளிக்கின்றனர்.
அத்துடன் 15 புதிய முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
நாளை ஞாயிற்றுக்கிழமை மன்னார் பிரதேச செயலக பிரிவில் 60 பேரும், 4 ஆம் நாள் திங்கட்கிழமை மடு பிரதேச செயலக பிரிவில் 45 பேரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு சாட்சியமளிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmr7.html

Geen opmerkingen:

Een reactie posten