தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 8 augustus 2014

ஜனாதிபதியின் தேர்தல் பிரசார பொறுப்புகள் யோசித ராஜபக்ஷவின் நிறுவனத்திற்கு! !

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அவரது மகன் யோசித ராஜபக்ஷவின் மெகேன்டா விளம்பர நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
2005 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் பிரசாரங்களுக்கான விளம்பர பொறுப்புகள் ட்ரைஹெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
அமைச்சர் சரத் அமுனுகமவின் மகள் வருணி அமுனுகம மற்றும் கொழும்பு பங்குச் சந்தையின் முக்கியஸ்தரான திலித் ஜயவீர ஆகியோர் இந்த நிறுவனத்தின் பணிப்பாளர்களாவர்.
இந்த நிலையில், இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார பொறுப்புகள் மீடியா பெக்டரி விளம்பர நிறுவனத்தின் கீழ் இயங்கும் மெகேன்டா விளம்பர நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் நடைபெறும் பிரதான வைபவங்களுக்கான பொறுப்புகள் பாடகர்களான பாத்தியா, சந்துஷ் ஆகியோருக்கு சொந்தமான பீ அன்ட் எஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் தொடர்பான பொறுப்புகள் மெகேன்டா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் பிரசார நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிலர் விமர்சித்துள்ளனர்.
மெகேன்டா நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான பிரசான் சுப்ரமணியம் புலம்பெயர் தமிழர்களுடன் சம்பந்தப்பட்டவர் என்பதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
யோசித ராஜபக்ஷ மெகேன்டா நிறுவனத்தின் உத்தியோகபூர்வமற்ற உரிமையாளர் எனக் கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyITcLdmo7.html

Geen opmerkingen:

Een reactie posten