என் தாயை தவறாகப் பேசுவதா?- நடிகர் விஜய் கண்டனம்
இலங்கையை கண்டித்து சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகர்கள் ஆவேசமாக பேசினார்கள். நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பேசியதாவது:
முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழக மீனவர் நலனுக்காக குரல் கொடுக்கிறார். மத்திய அரசுக்கும் கடிதங்கள் எழுதுகிறார். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கையை போர்க் குற்றவாளி நாடக அறிவிக்க வேண்டும் என்றும் அதன் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளார்.
இதற்காக முதல்வரை பற்றி இலங்கை அரசு இணையதளத்தில் அவதூறு வெளியிட்டு இழிவு செயல் செய்துள்ளது. ராமநாதபுரம் மன்னருக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்க முதல்வர் முயற்சித்து வருகிறார். அது நடக்கும் இலங்கை தமிழர் மற்றும் மீனவர் பிரச்சினையில் புரட்சித்தலைவி எழுதும் கடிதங்களுக்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் உள்ளது. முதல்வரை அவமதித்த இலங்கை அரசை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக எச்சரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்.கே.செல்வமணி டைரக்டர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, நாடுகளிடையே நல்ல நட்புறவை ஏற்படுத்தவே தூதரகங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் நல்ல உறவை கெடுக்கும் செயலில் ஈடுபடும் இலங்கை தூதரகம் தேவை இல்லை. இதை அகற்ற வேண்டும். இலங்கை தூதரகம் உள்ள சாலைக்கு தமிழீழ சாலை என பெயர் சூட்ட வேண்டும் என்றார்.
நடிகர் விஜய் பேசும் போது, இலங்கை அரசு நமது முதல்–அமைச்சரை கேலியாக சித்தரித்து இணையதளத்தில் செய்தி வெளியிட்டது கண்டிக்கத்தக்கது. எங்கள் தாயை தவறாக பேசியது போல் உணர்கிறோம். இது ஒட்டு மொத்த தமிழர்களையும் வருத்தமடையச் செய்து உள்ளது என்றார்.
நடிகர் சிவகுமார் பேசும் போது, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது அல்ல. நமது மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் தாக்குவதை கண்டித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதுகிறார். இதை கொச்சை படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசும் போது, முதல்–அமைச்சரை இலங்கை அரசு இழிவு படுத்தியதை கண்டிக்கிறோம். இந்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. இலங்கையில் நடைபெறும் ராணுவ கருத்தரங்கில் நமது ராணுவ அதிகாரிகள் பங்கேற்க கூடாது என்றார்.
டைரக்டர் விக்ரமன் பேசும் போது, எத்தனையோ பெண்கள் தலைவர்களாக இருந்துள்ளனர். தெரசாவை அன்னை தெரசா என்றோம். சோனியாகாந்தி அன்னை சோனியா என்று அழைக்கப்படுகிறார். புரட்சித் தலைவியை அம்மா என்று அழைக்கிறோம். அம்மா என்று அழைக்கப்படும் தலைவியை இலங்கை அரசு கொச்சை படுத்தி உள்ளது. இது ஒட்டு மொத்த தமிழர்களையும் கொச்சைப்படுத்துவது ஆகும். எனவே இலங்கை தூதரகத்தை அகற்ற வேண்டும் என்றார்.
கலைப்புலி தாணு பேசும் போது, தாயை பழித்தவனை தாயே தடுத்தாலும் விடமாட்டோம் என்று தமிழ் திரையுலகமே ஒன்று திரண்டு இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. வருங்காலத்தில் தாயை பழித்ததற்கான தண்டனையை இலங்கை அனுபவிக்கும். அப்போது தமிழர்கள் மட்டும் காப்பாற்றப்படுவார்கள் என்றார்.
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது:–
பல காலமாக தமிழர்களை அழித்து வரும் சிங்கள அரசு அடுத்ததாக தமிழக மீனவர்களை கொடுமைபடுத்தியது. இப்போது அதையும் தாண்டி முதல்–அமைச்சரை கொச்சைப்படுத்தி உள்ளது. இது ஒட்டு மொத்த தமிழர்களையும் கொச்சைப்படுத்தும் செயல். இந்த பிரச்சினையில் புரட்சி தலைவி எடுக்கும் முடிவுக்கு திரையுலகம் எப்போதும் துணை நிற்கும் என்றார். நடிகர் கே.ராஜன் பேசும் போது, கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமல்ல என்ற பா.ஜனதா அரசை எதிர்க்கிறோம் என்றார்.
இலங்கை அரசைக் கண்டித்து அதிமுக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
முதல்வர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்து அதிமுக வழக்க றிஞர்கள் சென்னையில் ஆர்ப்பாட் டம் நடத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி பற்றி இணையதளத்தில் அவதூறு செய்தி வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்தும், அந்தச் செய்தியை வெளியிட்டவர் மற்றும் இணையதளத்தை நிர்வகிப்ப வர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அதிமுக வழக்கறிஞர்கள் சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான நவநீதகிருஷ் ணன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற வழக்கறிஞர்கள், இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அவதூறு செய்தி தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இதுதொடர்பாக நவநீத கிருஷ்ணன் கூறும்போது, ‘‘அவதூறு செய்தி வெளியிட்டவர் வெளிநாடுகளில் இருந்தாலும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். அந்தச் சட்டத்தை பயன் படுத்தி நடவடிக்கை எடுக்கும் படி டிஜிபியிடம் மனு கொடுத்துள் ளோம்’’ என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten