[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 06:24.20 AM GMT ]
கல்கிஸ்சை பொலிஸார் இந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். மாத்தறை வித்தானந்தெனி பிரதேசத்தை சேர்ந்த 20 வயதான யுவதியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
யுவதிக்கு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறியுள்ள நபர், கல்கிஸ்சை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடல் அட்டைகளுடன் 4 பேர் மன்னாரில் கைது
மன்னார் - சிலாவத்துறை கடலில் கடல் அட்டைகளை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக எடுத்துச் சென்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடல் அட்டைகளை எடுத்துச் சென்ற இரண்டு படகுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினர், மீன்பிடி மற்றும் நீரியல் வள அதிகாரிகள் நேற்றிரவு மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் உலர்த்தப்பட்ட 667 கிலோ கிராம் கடல் அட்டைகளை இரண்டு படகுகளில் எடுத்துச் சென்றுள்ளனர்.
படகுகளில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு வெளியிணைப்பு இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
புத்தளம் மாவட்டம் கல்பிட்டியை சேர்ந்த இந்த சந்தேக நபர்களான இவர்கள் இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmr4.html
அவுஸ்திரேலியா செல்லும் படகு அகதியின் அவலம்- ஆஸி. குடிவரவுத் திணைக்களத்தில் விசா மோசடி
[ சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2014, 06:36.49 AM GMT ]
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இடமில்லை என்று அவுஸ்திரேலியா சொல்லுகின்றது.
ஈழத்திலிருந்து மாத்திரமல்ல ஈரான், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற பல நாடுகளிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவுக்குள் செல்ல முற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அவுஸ்திரேலிய அரசு தனது நாட்டின் கதவுகளை இறுக மூடிய பொழுதும் உலகக் கடலில் நின்று அகதிகளின் கைகள் தட்டிக்கொண்டுதான் இருக்கின்றன.
ஆபத்திற்குள்ளும் துயரத்திற்குள்ளும் நின்று கதவை தட்டிக்கொண்டு அடைக்கலம் கோருவது எவ்வளவு துயரமானது? அவர்கள் சொந்த நாட்டில் வாழ முடியாத நிலமையிலேயே வருகிறார்கள் என்கிற செய்திதான் இந்த உலகத்திற்கு வழங்கப்படுகிறது.
ஆனால் தமிழர்கள் அகதியாக செல்கின்ற நாடு முழுவதிலும் மிகவும் பின்தள்ளப்பட்ட நிலைமையே காணப்படுகின்றது. உண்மையில் இந்த படகு பயணமானது மிகவும் உயிர் பாதுகாப்பற்ற ஒரு பயணமாகவே அமைகின்றது.
எவ்வளவோ துயரத்துக்கு மத்தியிலும் படகு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் நிம்மதி அற்ற வாழ்க்கையைத்தான் படகு அகதிகள் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள்.
அவுஸ்ரேலியா அரசாங்கம் கடந்த 2012 ம் ஆண்டு ஆவணி மாதம் தனது அகதி கொள்கையில் பாரிய மற்றதை கொண்டு வந்தது அதாவது தனது சட்ட திட்டங்களை மிகவும் கடினப்படுத்தியது.
இதன் காரணமாக வருகின்ற அகதிகளுக்கு நிபந்தனை மூலம் வீசா வழங்கப்பட்டது அது மட்டுமின்றி தனது நாட்டை விட்டு தனது அண்மித்த தீவுகளான 3 தீவுகளுக்கு மாற்றும் நடவடிக்கையில் தீவிரப்படுத்தியது.
இங்கு அந்த நிபந்தனை விசாவில் வாழ்வது என்பது மிகவும் ஒரு பாரிய சவாலாக அமைந்தது அரசாங்கம் 14 நாட்களுக்கு 450 டொலர்களை வழங்குகின்றது அதில்தான் இவர்கள் வீட்டு வாடகையில் இருந்து அனைத்து செலவுகளும் செய்ய வேண்டும்.
இந்த பணத்தினை வைத்து இங்கு செலவு நடத்துவதா இல்லை குடும்பத்துக்கு அனுப்புவதா என்ற கேள்விக்கு தள்ளப்படுகின்றார்கள்
காரணம் இவர்களுக்கு தொழில் புரியும் அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது ஆகவே இவர்களில் அதிகமானவர்கள் இரண்டும் கெட்ட நிலையில் வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள்
இதன் காரணமாக இவர்கள் ஒரு நேரம் சாப்பிட்டு ஒரு சிறிய தொகை பணத்தை தனது குடும்பத்துக்கு அனுப்புகின்றனர்.
இப்படிப்பட்ட வாழ்க்கை தான் இன்று அவுஸ்திரேலியாவில் உள்ள எமது தமிழர்களின் நிலையாக உள்ளது.
சில வேளைகளில் எமது தமிழர்கள் இவர்களை வைத்து [தவித்த முயல் அடிக்கின்ற என்று சொல்லுவார்கள் ]அது போன்று எம்மவர்கள் வர்த்தகத்தில் பெரிதும் நல்லநிலையில் உள்ளவர்கள் இவர்களை குறைந்த சம்பளத்துக்கு வேலை வாங்குவது இது போன்று வேதனை அடையக்கூடிய விடயங்களும் இருக்கின்றன.
இதில் ஒன்றை சொல்ல வேண்டும் இந்த அபொட் அரசாங்கம் ஒரு மனிதாபிபமான முறையில் செயற்படவில்லை இந்த அரசாங்கம் இவர்களுக்கு தொழில் செய்யும் வாய்ப்பை கொடுத்தாள் இந்த அரசாங்கத்துக்கு இலாபம் தான் ஏற்படும்.
காரணம் இவர்கள் தொழில் புரியும் போது அரசாங்கத்துக்கு கட்டாயம் வரிப் பணம் கட்ட வேண்டும் வரிப்பணம் கட்டும் போது அரசாங்கத்துக்கு எந்தவிதமான நஷ்டமும் ஏற்பட போவதில்லை ஆனால் அகதிகளின் வருகையை தடுப்பதற்காக இவர்கள் அணைத்து விடயத்திலும் மிகவும் கரிசனை யற்று நடக்கின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்கையில் இலங்கையில் உள்ளவர்கள் இந்த பயணத்துக்காக கடன்பட்டு வீட்டை அடகு வைத்து உள்ள நகைகள் என இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து இன்று அவர்களும் நடு வீதிக்கு வருகின்ற நிலைமைதான் அதிகமாக காணப்படுகின்றது
இந்த அவுஸ்திரேலியா பயணம் என்பது படகில் வரும் எவருக்கும் ஒரு போதும் நல்ல ஒரு எதிர்காலம் ஏற்ப்படும் என்பது இனி நடக்காத ஒரு விடயமாக மாறிவருகின்றது.
இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கமும் அவுஸ்திரேலியா அரசாங்கமும் நல்லதொரு உடன் பாட்டை கொண்டிருக்கின்றது காரணம் தமிழர்கள் அவுஸ்திரேலியா வரும் போதும் பணம் கொடுக்க வேண்டும் அதுபோன்று திருப்பி அனுப்பும் போதும் அரசாங்கம் இலாபம் அடைகின்றது.
அகவே தமிழர்கள் சிந்திக்க வேண்டிய காலம் கடல் பயணம் அகதிகளின் இறுதி பயணமாகவே அமைகின்றது.
அவுஸ்ரேலிய குடிவரவுத் திணைக்களத்தில் விசா மோசடி
குடிவரவுத் திணைக்களத்தில் விசா மோசடிகள் நிகழ்ந்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில், திணைக்களத்தின் பிரதானி அதனை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார்.
Immigration Skilled Migration Visa என்றழைக்கப்படும் திறன் மிக்கவர்களுக்கான 90 சதவீத விசாக்களில் மோசடிகள் நிகழ்ந்ததை திணைக்களத்தின் ஆவணங்கள் சுட்டிக்காட்டுவதாக பெயார்ஃபெக்ஸ் நிறுவனத்தின் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியுள்ளன.
2008ஆம் ஆண்டு தொடக்கம் மோசடிகள் இடம்பெற்றதாக பத்திரிகை செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானியர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட விசா விண்ணப்பங்களிலும் இதே அளவிலான மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, தேசிய பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய மோசமான விளைவுகள் குறித்து கரிசனைகள் எழுந்திருப்பதாக ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
திணைக்களத்தின் செயலாளர் மார்ட்டின் பொவெல்ஸ் கருத்து வெளியிடுகையில், தமது அமைப்பு மோசடிகளைக் கட்டுப்படுத்த சகல முயற்சிகளையும் எடுத்து வருகிறது என்றார்.
எனினும், வெளிநாட்டவர்கள் எப்படியாவது அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முனைவதால் இது மிகவும் சவாலான விடயமாக மாறியிருக்கிறதென அவர் கூறினார்.
எவ்வாறேனும், மோசடிகள் பற்றிய தகவல்களைக் குறிப்பிடும் ஆவணங்கள் எவ்வாறு செய்தியாளர்களின் கைகளுக்கு கிடைத்ததென விசாரிக்கப் போவதாகவும் குடிவரவுத் திணைக்களத்தின் செயலாளர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyITdLdmr6.html
Geen opmerkingen:
Een reactie posten