தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 augustus 2014

157 பேரில் இந்தியர்கள் இருந்தால் ஏற்றுக் கொள்ளத் தயார்: இந்தியா அறிவிப்பு (செய்தித் துளிகள்)!!!

சிறையிலிருந்து கொண்டே போதைப்பொருள் வர்த்தகம்: தடுக்கும் நடவடிக்கையில் கோத்தபாய
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 01:46.11 AM GMT ]
சிறையில் இருந்து கொண்டே மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
சிறையில் தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகள் செல்லிடப்பேசிகளின் மூலம் இவ்வாறு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கைதிகள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதனை தடுப்பது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஏற்கனவே பல தடவைகள் அழைத்து ஆலோனை வழங்கியுள்ளேன்.
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் ஆலோசனைகள் உரிய முறையில் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து கண்காணிக்கப்பட உள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் பொலிஸார் அது தொடர்பிலான தகவல்களை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்குமாறு புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறையில் இருந்துகொண்டே போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களை கட்டுப்படுத்த சகல வழிகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோத்தபாய ராஜபக்ச சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnr4.html
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளைக் காரியாலயமாக செயற்படும் வெளிவிவகார அமைச்சு
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 01:53.04 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளைக் காரியாலயமாக வெளிவிவகார அமைச்சு செயற்பட்டு வருவதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
வெளிநாடுகளில் தூதுவர்களாக பணியாற்றி வரும் 49 தூதுவர்களில் 35 பேர், அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டவர்கள் என கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சு கட்டுபாடற்ற ஒரு நிறுவனமாக செயற்படுகின்றது.
அரசாங்கத்தின் சார்பில் குரல் கொடுத்த சரத் கொஹன்காகே இன்று தூதுவர்.
ஜனாதிபதியின் சகோதரர் ஒன்பது ஆண்டுகளாக மியன்மாரில் தூதுவர்.
அமெரிக்காவில் தூதுவராக கடமையாற்றியவர் ஜனாதிபதியின் உறவினராவார். இவருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
ஜனாதிபதியின் துணைவியார் ஷிராந்தியின் சகோதரர் ஸ்ரீமால் விக்ரமசிங்க இன்று வியன்னாவின் தூதவர்.
மாகாணசபை உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்வது போன்றே, ஆளும்கட்சி உறுப்பினர்களின் பிள்ளைகள் இன்று வெளிவிவகார சேவையில் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர்.
வெளிவிவகார சேவையில் கடமையாற்றி வரும் ரவீந்திரன் மீள அழைக்கப்பட்டுள்ளார்.
ராஜதந்திர சேவையைச் சேர்ந்த 70 பேர் வரையில் வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றி வருகின்றனர்.
வெளிவிவகார அமைச்சின் உத்தியோகத்தர்கள் வீதியில் திரியும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை மோசமானது.
பலஸ்தீனம் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
வொசிங்டனுடன் இரகசிய கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்படுகின்றது.
நிபுணர் குழு நியமிக்கப்பட்டமை குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவில்லை என அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnr5.html
157 பேரில் இந்தியர்கள் இருந்தால் ஏற்றுக் கொள்ளத் தயார்: இந்தியா அறிவிப்பு (செய்தித் துளிகள்)
[ வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014, 02:51.02 AM GMT ]
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ளதாக கூறப்படும் 157 தமிழர்களில் இந்தியர்கள், இருந்தால் அவர்களை ஏற்றுக்கொள்ள தயார் என்று இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியாவின் பாண்டிச்சேரியில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாக கூறப்படும் இந்த 157 பேரையும் ஏற்றுக்கொள்ளத்தயார் என்று இந்தியா ஏற்கனவே அறிவித்திருந்தது.
எனினும் தற்போது இந்தியர்கள் அதில் இருந்தால் என்ற வசனத்தை பயன்படுத்தியுள்ளது.
முன்னதாக இந்திய அதிகாரிகள் படகில் இருந்து இறக்கப்பட்ட அகதிகளை விசாரணை செய்ய முற்பட்டவேளையில் அகதிகள் அதற்கு இடம்தரவில்லை.
இதனையடுத்தே இந்திய அரசாங்கம் தமது நாட்டவர் குறித்து மாத்திரம் கருத்தை வெளியிட்டுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அக்பருதீன் இதனை நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தியர்களை தவிர்ந்த ஏனையவர்கள் தொடர்பில் அகதிகள் சாசனத்தில் கையொப்பமிட்ட நாடு என்ற வகையில் இந்திய சட்டங்களுக்கு உட்பட்ட விதத்தில் இருப்பார்களானால் அவர்களையும் ஏற்றுக்கொள்ளத்தயார் என்று அக்பருதீன் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அதிகாரியின் உளவு நடவடிக்கை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்- இந்தியா
இந்தியாவில் உள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய அதிகாரி ஒருவர் உடந்தையாக இருந்த சம்பவம் தொடர்பில் இந்திய உரிய பொறிமுறையை கடைப்பிடிக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அக்பருதீன் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் குற்றச்சாட்டை அடுத்து இலங்கையில் செயற்பட்டு வந்த பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரக அதிகாரி சுபைர் சித்தீக் பாகிஸ்தானுக்கு திருப்பியழைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயம் என்பதால் இந்தியா உரிய மார்க்கத்தில் விடயத்தை கையாளும் என்று அக்பருதீன் குறிப்பிட்டுள்ளார்.
கடன் அட்டை முறைகேடு! மூன்று வெளிநாட்டவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
கடன் அட்டை முறைக்கேடு தொடர்பில் மூன்று வெளிநாட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு துருக்கியர்கள் மற்றும் ஒரு உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் ஆகியோருக்கு எதிராகவே நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இவர்கள் மூவரும் கடந்த மாதம் கொழும்பு 7 இல் உள்ள தன்னியக்க கருவியில் முறைகேடான கடன் அட்டைகளை பயன்படுத்திப பணம் பெற்ற போது கைது செய்யப்பட்டனர்.
இதன்போது அவர்களில் சுமார் 12.4 மில்லியன் ரூபாய்கள் இருந்து மீட்கப்பட்டன.
வாஸ் குணவர்தனவின் சிறை அறையில் இரண்டு சிம் அட்டைகள்
கொலை குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் சிறை அறையில் இருந்து இரண்டு சிம் அட்டைகளை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது வெளியில் உள்ள நபர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் என்ற தகவல் நீதிமன்றத்தில் தெரியவந்ததை அடுத்து, சிறை அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இந்த சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சிறை அறையில் வாஸ் குணவர்தனவும் அவரது மகன் ரவிந்து ஆகியோர் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடைகளுக்கு மத்தியில் இந்த சிம் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கைப்பற்றிய சிம் அட்டைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyITbLdnr7.html

Geen opmerkingen:

Een reactie posten