[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 04:03.09 AM GMT ]
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலுக்கு இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் காரணமாகிவிட்டது என ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சீனா அரசிடமிருந்து இலங்கை பெற்ற அத்தனை திட்டங்களுக்கான கடனை திரும்பி செலுத்த முடியாவிட்டால் அந்த திட்டங்கள் அனைத்தும் சீனாவிற்கு சொந்தமாக்கப்படும் என்று அமைச்சர்கள் தெரிவித்தமையே இந்தியாவின் சந்தேகத்தை அதிகரித்ததற்கான காரணம்.
இலங்கையில் சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் முதலானவற்றின் கடனை செலுத்தாவிட்டால் இவைகள் அனைத்தும் சீனாவிற்கு சொந்தமாக்கப்படும்.
இதனால், இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான அச்சுறுத்தலுக்கு இலங்கை அரசின் செயற்பாடுகள் காரணமாகிவிட்டது.
இதன் காரணமாகவே இந்திய பாதுகாப்பு ஆலோசகரின் இப்போதைய விஜயம் மிக முக்கியத்துவம் பெறுகின்றது.
பாதுகாப்பு ஆலோசகர்கள் விஜயம் வழமையானதாக இருப்பது சகஜம். ஆனால் இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகள், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையுமென இந்தியா கருதுவதற்கு இந்த அரசின் செயற்பாடுகள் முக்கிய காரணமாகிவிட்டது.
இப்பொழுது ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் காலகட்டத்தில் பாதுகாப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்தும் சம்பவமாகவே இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkry.html
முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரியை ஆதரிக்கும் சாத்தியம்! அரசின் மீது நம்பிக்கையில்லை என்கிறார் ஹசன் அலி
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 05:25.53 AM GMT ]
குறிப்பிட்ட சந்திப்பின் போது கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தாமை என்பன பற்றி ஜனாதிபதியிடம் விளக்கப்பட்டது.
அத்துடன், பொது பலசேனாவின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக் காட்டப்பட்டன.
வடக்கு கிழக்கில் முஸ்லிம்களின் காணிகள் அபகரிப்பு உட்பட பிரச்சினைகள் பற்றி விளக்கப்பட்டன.
அரசு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமை என்பன தொடர்பில் கவலை வெளியிடப்பட்டது.
அரசு வழங்கிய உறுதிமொழிகள் வழங்கப்படாமையினால் சமூகம் அதிருப்தியடைந்துள்ளதாகவும் ஜனாதிபதியிடம் எடுத்து விளக்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரஸின் முறைப்பாடுகளை செவிமடுத்த ஜனாதிபதி இவை தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டினை தெரிவிக்காமையினால் முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியடைந்துள்ளதாக அறியக்கிடைக்கிறது.
இதன்போது, ஜனாதிபதி முஸ்லிம்களின் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்து பேசி தீர்வுகள் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்புக்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ச ஏற்பாடு செய்யவுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்களையடுத்து ஜனாதிபதியின் மீது நம்பிக்கையிழந்துள்ளார்கள்.
கட்சியின் ஒரு அமைச்சரைத் தவிர ஏனையோர் பொது அபேட்சகர் மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்க வேண்டும் என உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அரசியல் உயர்பீடம் கூடி வெளியிடப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி இது தொடர்பில் கூறுகையில்,
அரசுடனான முஸ்லிம் காங்கிரஸின் உறவு தொடர்ந்து அருகி வருகிறது.
அரசு உறுதி மொழிகள் வழங்கினாலும் அவை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இல்லை.
அரசுடன் இணைந்து போகும் சாத்தியக் கூறுகள் குறைவு.
இது எனது சொந்தக் கருத்தாகும். கட்சியின் தீர்மானத்தை நாம் நாகரீகமாக வெளியிட வேண்டும், அதுவரை பொறுமை காக்க வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkrz.html
கிழக்கு மாகாண சபையில் இன்றும் மோதல்! சபையின் நடவடிக்கைகள் ஜனவரி வரை ஒத்திவைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 05:28.55 AM GMT ]
கிழக்கு மாகாண சபையின் அமர்வை நேற்று மாலை 7.30 வரை ஒத்திவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் சபை நடவடிக்கைகளை இரவு 8 மணி வரை தொடர்வதற்காக 30 நிமிட நேரத்தை கோரியபோதிலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதற்கு இணங்காததால் சபையை இன்று காலை வரை ஒத்திவைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இன்று வழமைபோன்று சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது, இரண்டு தரப்பினரும் நேற்றைய சம்பவங்களை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கியதாக ஆரியவத்தி கலப்பத்தி தெரிவித்தார்.
பொருத்தமற்ற வகையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதால் தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி சபை நடவடிக்கைகளை ஜனவரி மாதம் 12ஆம் திகதி வரை ஒத்திவைத்து சபையிலிருந்து வெளியேறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புபட்ட செய்தி
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkr0.html
ஜாதிக ஹெல உறுமய மைத்திரிபாலவிற்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு!
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 05:38.54 AM GMT ]
உத்தியோகபூர்வமாக இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வெட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கப் போவதாக கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.
தேசிய ரீதியாக வெளியிடப்பட்ட கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இவ்வாறு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkr1.html
தமிழ் வைத்திய அதிகாரி நியமனம்: மத்திய சுகாதார அமைச்சு பாராமுகம்
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 05:51.30 AM GMT ]
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக அங்குள்ள வர்த்தகர்கள் பிரதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்ததை தொடர்ந்து, பிரதியமைச்சர், ஞாயிற்றுக்கிழமை மாலை அங்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது வைத்தியசாலையை பார்வையிட்ட பிரதி அமைச்சர் அங்குள்ள அதிகாரிகளிடம் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்துகொண்டார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார்.
இவ்வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
எதிர்வரும் சனிக்கிழமை 6ம் திகதி ஸ்ரீபாத யாத்திரை பருவகாலம் ஆரம்பமாகின்றது.
இதன்போது ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் இந்த வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைக்காக வரவேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கமுடியாத நிலையிலே இவ்வைத்தியசாலை காணப்படுகின்றது.
இந்த வைத்தியசாலையில் உயர் அதிகாரியாக தமிழர் ஒருவர் இருப்பதன் காரணமாக இவ்வைத்தியசாலை, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்படுகின்றதா? என்ற சந்தேகமும் எனக்குள் எழுகின்றது.
வைத்தியசாலையின் இந்நிலைமைக்கு மத்திய மாகாண சுகாதார அமைச்சரும் மத்திய மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளும் காரணமாக இருக்கின்றார்கள்.
நாங்களும் இந்த நாட்டில் வாழ்கின்றவர்கள் என்பதை பலரும் மறந்து விடுகின்றார்கள். வைத்தியசாலையின் தேவைக்கு ஏற்ப எஸ்பிரின்கள் கூட இல்லை என்று கேள்விப்படும் போது வேதனையாக உள்ளது.
வைத்தியசாலையில் கட்டிடங்கள் மாத்திரமே கம்பீரமாக நிற்கின்றன. ஆனால் உள்ளே ஒன்றும் இல்லை. சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கு ஏற்ப இவ்வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லை, சிற்றூழியர்கள் இல்லை, அம்பியுலன்ஸ் வாகனம் இல்லை, பாதை மிகவும் மோசமாக உள்ளது, இங்குள்ள மின் உயர்த்தி, கடந்த ஒரு வருடமாக செயற்பாடத நிலையில் உள்ளது.
இதன் காரணமாக நான்கு மாடி கொண்ட இந்த வைத்தியசாலையில் நோயாளர்களை கொண்டு செல்வதில் பாரிய சிரமங்களை வைத்தியர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. இவ்விடயம் தொடர்பாக மத்திய மாகாண ஆளுநர் மற்றும் மத்திய அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன்.
இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.
மேலும் மத்திய அரசாங்கத்தின் மூலம் உடனடியாக அம்புலன்ஸ் வாகனம் ஒன்றையும் பெற்றுத் தருவதாக அவர்கள் கூறியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்சினை தொடர்பாக பிரதேசவாசிகள் கருத்து தெரிவிக்கையில்,
இந்த வைத்தியசாலை கட்டிடத்தில் வசதிகள் இருந்தாலும் கூட வைத்தியர்களின் குறைபாடுகள் அதிகமாகவுள்ளது.
அதேபோல இந்த பிரதேசத்தை பொருத்தமட்டில் இலட்சக்கனக்கான மக்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசம் ஆகும். நோயாளிகளை இங்கு கொண்டு வரும் போது நோயாளிகளுக்கான தகுந்த சிகிச்சையின்மை காரணமாக ஏனைய வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkr2.html
Geen opmerkingen:
Een reactie posten