தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 december 2014

ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிய சுவாமியை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?: வைகோ!

ராஜபக்ச கடையை மூட வேண்டும்: ஜே.வி.பி.
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 03:12.31 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடையை மூட வேண்டிய காலம் உருவாகியுள்ளது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இரண்டு கடைகள் காணப்படுகின்றன. ஒன்று மஹிந்த ராஜபக்சவின் கடை மற்றையது மைத்திரிபால சிறிசேனவின் கடையாகும்.
மஹிந்தவின் கடையில் காலாவதியான பொருட்களே காணப்படுகின்றன. மஹிந்தவின் கடையில் பொருட்கள் விலை அதிகமானது. அதில் காணப்படும் இனிப்புக்களுக்குள் விசமுண்டு.
சர்வாதிகார ஆட்சி முறைமையை முடிக்குக் கொண்டு வர வேண்டும். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முயற்சி எடுக்கப்பட வேண்டும்.
ராஜபக்சவின் கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்த பின்னர், மைத்திரிபாலவின் கடையில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றிக் கொள்ள தொடர்ந்தும் போராடுவோம்.
நாட்டுக்கு நல்லாட்சி ஏற்படும் வரையில் போராட்டங்களை கைவிடப் போவதில்லை. மஹிந்தவின் கடையை மூடுவது சுலமானதல்ல.
தேர்தல்களில் ஜனாதிபதி தேர்தலுக்காகவே அதிகளவு பணம் செலவிடப்படுகின்றது.
பலவந்தமான முறையில் அச்சுறுத்தல்களை விடுத்து அடக்குமுறைகளை பிரயோகித்தே ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முயற்சிக்கப்படுகின்றது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுகோகொடை ஆனந்த சமரக்கோன் அரங்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkq6.html
ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிய சுவாமியை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?: வைகோ
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 03:37.07 AM GMT ]
தமிழ் இனத்தை அழித்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய சுப்பிரமணியம் சுவாமியை யாருமே கண்டிக்கவில்லை. பாஜகவில் யாருமே அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லையே. அவரது பேச்சை தமிழிசை செளந்தரராஜன் ஏற்கிறாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக கேட்டுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ இதுதொடர்பாக மேலும் கூறுகையில்,
அந்த மனிதர் பெயரை (சு. சுவாமி) உச்சரிக்கக் கூட விரும்பாதவன் நான். ராஜபக்சவால் திணிக்கப்பட்ட ஏஜண்ட்தான் சுவாமி.
அவர், ராஜபக்சவின் ஏஜண்டாக இராணுவ ஆலோசனை மாநாட்டுக்கு அனுப்பபட்டதும் கொலைகார ராஜபக்சவுக்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்றதும், படகுகளை பிடிக்கும் படி நான் தான் சொன்னேன் என்பதும், மீனவர்களை நான் தான் விடுவிக்க சொன்னேன் என்பதும் உங்கள் மவுத் பீசாக ஊதுகுழலாக பேசுகிறார் சுப்பிரமணிய சுவாமி.
நான் கேட்கிறேன் பிரதமர் நீங்களா சுப்பிரமணிய சுவாமியா. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனக் கூறிய சுவாமியை ஏன் ஒருவரும் கண்டிக்கவில்லை.
சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் என்.டி.ஏ வை விட்டு மதிமுக வெளியேற வேண்டும் அல்லது தூக்கி எறியப்படுவீர்கள் கெட் அவுட் என்கிறார்.
நான் கேட்கிறேன் பாஜக தலைவர் இவரா அமீத் ஷாவா.
டுவிட்டரில் என்னை மிரட்டியவர் வீட்டை மதிமுக தொண்டர்கள் முற்றுகையிட உள்ளதாகவும் அப்படி நடந்தால் சுப்ரீம் கோர்ட்டில் சொல்லி சகோதரி ஜெயலலிதா ஜாமீனை ரத்து செய்து விடுவதாக கூறுகிறார். 
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkq7.html

Geen opmerkingen:

Een reactie posten