தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 december 2014

அடுத்த ஜென்மத்தில் பேயாக வந்தேனும் ராஜபக்சவை பழிவாங்குவேன்: கிராம்பே தேரர்

சீனாவுக்கு இரத்தினக் கற்களை கடத்த முயற்சித்த இருவர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 05:54.23 AM GMT ]
சட்டவிரோதமான முறையில் இரத்தின கற்களை கடத்திச் செல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் - சாங்காய் நோக்கிச் செல்லவென விமான நிலையத்தில் காத்திருந்த பம்பலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.
இவர்களது பயணப் பைகளில் இருந்து 218 இரத்தின கற்கள் மீட்கப்பட்டதாகவும் அதன் நிறை 548 கரட் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தின கற்களின் பெறுமதி 54 லட்சத்திற்கும் அதிகம் என கணிப்பிடப்பட்டுள்ளது.
இரத்தின கற்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் இருவரும் தலா ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkr3.html
நல்ல மனிதர்களையே மக்கள் விரும்புகின்றனர்!
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 06:04.01 AM GMT ] [ வலம்புரி ]
நல்ல மனிதர்கள் என்போர் யார் என்பதற்கு நிபந்தனைப்படுத்தப்பட்ட வரையறை கிடையாது. நல்லவர்கள் என்போர் எல்லோருக்கும் நல்லவர்களாக இருப்பர். இனம், மதம், மொழி என்ற பாகுபாடுகளினூடாக அவர்கள் ஒருபோதும் பக்கம் சார்வதில்லை.
நல்ல சிங்களவர்கள், தமிழர்களை கொல்ல வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க மாட்டார்கள்.
அதேபோல் நல்ல தமிழர்கள், சிங்களவர்களை அழிக்க வேண்டும் என எண்ணவும் மாட்டார்கள்.
எனவே, நல்ல மனிதர்களிடம் மானிட உணர்வு மட்டுமேயிருக்கும். விலங்கின இயல்பு அவர்களிடம் இருப்பதில்லை.
விலங்குகள் மட்டுமே ஒன்றையொன்று தாக்கி உயிர் வாழும் தன்மை கொண்டவை. எனினும் மனிதர்களிடமும் இத்தகைய தன்மை காணப்படுமாயின் அது விலங்கின இயல்பு உண்டென்பதே பொருள்.
எல்லா மனிதர்களும் நல்லவர்களாக வாழவேண்டும் என்பதே பொது விருப்பம். மனிதர்களை நல்லவர்களாக ஆக்கும் பொருட்டு சமயம் தோற்றுவிக்கப்பட்டது.
காலத்துக்குக் காலம் ஞானிகளும் யோகிகளும் இந்த மண்ணில் பிறந்து அறக்கருத்துக்களை முன்வைத்தனர். அந்த அறக் கருத்துக்களை மக்களிடம் முன்னெடுத்துச் செல்லும் பணி சமயங்களின் பொறுப்பாயிற்று.
சமயத் தலைவர்கள் ஆன்மீகத்தை மக்களிடையே பரப்பி புனிதமான மானிடத்தை பாதுகாக்க தலைப்பட்டனர். இத்தகையதொரு ஒழுங்கு படுத்தப்பட்ட நெறிமுறையில் மானிடம் புனிதமடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
மனிதர்களில் அனைவரும் புனிதர்களாக வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முழுமை பெறவில்லையாயினும் சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, அன்னை திரேசா, காமராஜர், ஆபிரகாம் லிங்கன் என்ற புனிதர்கள் மனிதர்களோடு வாழ்ந்து போயினர். இன்னும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
எந்த நாட்டில் புனிதர்கள் வாழ்கிறார்களோ அந்த நாட்டில் ஏதோ ஒரு வகையில் அமைதி, சமாதானம், அன்பு, இரக்கம் என்பன மானிடத்தை பக்குவப்படுத்தி வருகின்றன. எனினும் துரதிர்ஷ்டவசமாக எங்கள் இலங்கை மண்ணில் புனிதர்களான மனிதர்களை எங்கும் காண முடியவில்லை.
அமைதியை, சமாதானத்தை ஏற்படுத்த வேண்டிய சமயத் தலைவர்கள் மிக மோசமான இனவாதமும், மதவாதமும் கொண்டு நாட்டில் வன்முறையினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
குறிப்பாக பெளத்த மத பீடத்தில் இருப்பவர்களில் பலர் மதவாதம் கொண்டவர்களாக இருப்பது சமய அடிப்படையை வேரறுத்து விடுவதாகும்.
மக்களிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க வேண்டிய சமய நிறுவனங்கள் அமைதியாக இருக்கின்ற மக்களிடம் வன்முறையை, இனவாதத்தை தூண்டும் பணியைச் செய்தால் நிலைமை எங்ஙனம் அமையும்? என்பதை புரிந்து கொள்வதில் கடினமிருக்க முடியாது.
நம்நாட்டின் மதபீடங்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த அரசியலிலும் அரச அமைப்புகளிலும் நல்ல மனிதர்களுக்கு கடும்பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த நாட்டில் அமைதியை ஏற்படுத்த எவரும் விரும்பவில்லை.
இலங்கையைப் பொறுத்தவரை சிங்கள அரசியல் வாதிகள், தமிழ் அரசியல்வாதிகள், முஸ்லிம் அரசியல் வாதிகள் இருக்கின்றனர்.
ஆனால் நாட்டுக்குத் தேவையான இலங்கை அரசியல்வாதி இல்லவேயில்லை. அரசியலில் ஈடுபடுவோர் இனத்தின் அடிப்படையில் செயற்பட்டால் இனவாதம் ஒருபோதும் ஒழியமாட்டாது என்பது உறுதி.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkr4.html
அடுத்த ஜென்மத்தில் பேயாக வந்தேனும் ராஜபக்சவை பழிவாங்குவேன்: கிராம்பே தேரர்
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 06:21.37 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க முடியாவிட்டால் அடுத்த ஜென்மத்தில் பேயாக வந்தேனும் பழிவாங்குவேன் என ராமன்ய பீடத்தின் அனு நாயக்க தேரர் கிராம்பே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் வரையில் நாம் போராட்டத்தை கைவிடோம். இந்த ஜென்மத்தில் தோற்கடிக்க முடியாவிட்டால் அடுத்த ஜென்மத்தில் பேயாக வந்தேனும் பழி வாங்குவேன். இது ஆச்சரியமான ஓர் விடயம்.
அண்ணன்மார், தம்பிமார், மகன்மார், மருமகன்மார் மற்றும் வயிற்றில் இருப்பவர்களுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற அரசாங்கமொன்று  இதுவரை  இருந்ததில்லை.
மைத்திரிபாலவின் ஜாதகம் நன்றாக உள்ளது.ராஜபக்ஷவின் ஜோதிடம் நன்றாக இல்லை.ராஜபக்ஷக்கள் தோல்வியடைய தொடங்கியுள்ளனர். எல்லோரும் இணைந்து போராட வேண்டியது அவசியமாகின்றது.
ஆளும் கட்சியின் தலைவர்களது முகங்கள் கருகி சுருங்கிப் போயுள்ளன என கிராம்பே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். அண்மையில் பொலனறுவையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkr5.html

Geen opmerkingen:

Een reactie posten