[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 01:36.01 PM GMT ]
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மற்றும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஆதரவாளர்களிடம் கருத்துக்களை அறியும் விஷேட பொதுக்கூட்டமொன்று இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.
நிகழ்வில் தொடர்ந்தும் பேசிய அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
தனிநபராக இருந்து கொண்டு இந்த மாவட்டத்திற்கு செய்த அபிவிருத்தியை விடவும் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினரை கூடவே அழைத்துச் சென்றால் செய்த அபிவிருத்தியை விடவும் மேலும் பல அபிவிருத்திகளைச் செய்த முடியும்.
இந்த நம்பிக்கையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் என்னுடன் சேர்ந்து ஹூனைஸ் பாருக்கையும் நானே வேட்பாளராக களமிறக்கி எனக்கு மாத்திரம் வாக்களிக்காமல் அவருக்கும், நான் உட்பட மற்றய வேட்பாளருக்கும் வாக்களிக்க வேண்டும் என நான் அன்று கேட்ட போது எதுவிதமான மறுப்புக்களையும் தெரிவிக்காமல் நீங்கள் எங்கள் மூவருக்கும் வாக்களித்தீர்கள்.
அவ்வாறு நீங்கள் வாக்களித்து எனக்கு அடுத்து தெரிவான ஹீனைஸ் எம்.பி கட்சிக்கும், எனக்கும் சொல்லாமல் இரவோடு இரவாக எதிரணியோடு இணைந்து கொண்டுள்ளார்.
எனவே, நான் சொன்னதைக் கேட்டு வாக்களித்தவர்கள் என்னைக் கண்டு எமது மாவட்டத்திற்கு விமோசனத்தைப் பெற்றுத்தருவார் என்று நம்பி நீங்கள் சொன்னதற்கு இணங்க அந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு நாங்கள் வாக்களித்தோம்.
ஆனால் அவர் இப்படி பிழையான முடிவை எடுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று வன்னி மாவட்டத்திலுள்ள மக்கள் பலர் என்னிடம் வந்து ஆதங்கப்பட்டார்கள்.
எனவேதான் என்னுடைய வேண்டுகோளை ஏற்று அவருக்கு வாக்களித்த மக்களிடம் அவர் செய்த பிழையான முடிவுக்காக மன்னிப்புக் கோருகிறேன்.
எனவேதான் என்னுடைய வேண்டுகோளை ஏற்று அவருக்கு வாக்களித்த மக்களிடம் அவர் செய்த பிழையான முடிவுக்காக மன்னிப்புக் கோருகிறேன்.
இன்று நாங்கள் ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் எமது கட்சியின் ஆதரவாளர்களிடையே ஆலோசனைகளைக் கேட்டு எதிர்வரும் 6ஆம் திகதிக்குள் இறுதி முடிவை எடுக்க வேண்டும்.
யுத்தத்தினால் முற்றாக அழிந்து போன எமது முல்லைத்தீவு மாவட்டத்தை ஏனைய மாவட்டங்களைப் போல கல்வி, சுகாதாரம், வீதி, மின்சாரம், தொழில்வாய்ப்பு உள்ளிட்ட அபிவிருத்தியில் முன்னேற்றத்தை செய்ய வேண்டும் என்பதற்காக அன்று எதிர்க்கட்சிகளுடன் இருந்த அரசியல் பிரமுகர்கள் சிலர் என்னுடன் இணைந்து கொண்டார்கள்.
அவர்களின் இணைவானது எமது கட்சிக்கு மேலும் பலத்தை சேர்த்தது. இனவாதம், மதவாதம், பிரதேசவாதங்களுக்கு அப்பால் செயற்படும் எமது கட்சியானது ஒரு ஜனநாயகக் கட்சியாகும்.
கட்சியிலுள்ளவர்களினதும், கட்சியின் போராளிகளினதும் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்று செயற்படும் கட்சியாகும்.
போரினால் முற்றாக அழிந்து போன இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்தது மட்டுமன்றி, படித்துவிட்டு தொழில் வாய்ப்பின்றி இருக்கின்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறோம்.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எமது மாவட்டத்தின் அபிவிருத்திக்காக நிதியை ஒதுக்கிய, எமது பிள்ளைகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்கிய மஹிந்த ராஜபக்ஷவையா ஆதரிப்பது அல்லது அவருடன் சேர்ந்து கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து எமது கட்சி தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது எனத் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkt0.html
ஹெல உறுமயவுக்கும் எனக்கும் எந்தவித இரகசிய உடன்படிக்கைகளும் இல்லை: மைத்திரிபால
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 01:59.27 PM GMT ]
ஜாதிக ஹெல உறுமயவுக்கும் தனக்குமிடையில் எந்தவித இரகசிய உடன்படிக்கைகளும் இல்லையென பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜாதிக ஹெல உறுமயவின் ஜனாதிபதித் தேர்தல் குறித்த தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மைத்திரிபால சிறிசேன இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டால், சகல பாதுகாப்புத் தரப்பினருடையவும் கௌரவத்தைப் பாதுகாப்பேன்.
அவர்களுக்குரிய இடத்தை வழங்குவேன். பாதுகாப்புப் படையினர் அணிந்துள்ள சீருடையின் கண்ணியத்தைப் பாதுகாப்பேன்.
சமையல் வேலை தொடக்கம் கடமைக்குப் புறம்பான பல்வேறு வேலைகளில் பாதுகாப்புப் பிரிவினர் உட்படுத்தப்படுகின்றனர்.
இதற்கு ஒரு போதும் தான் இடமளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkt1.html
கொழும்பில் ஜப்பானின் இரண்டு கடற்படைக் கப்பல்கள்!
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 02:45.06 PM GMT ]
இலங்கையின் அழைப்புக்கிணங்க இரண்டு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு சென்றுள்ளன.
ஹருசேம் டிடி 102 மற்றும் அமாகிரி டிடி 154 என்ற கப்பல்களே கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளன.
இந்த இரண்டு கப்பல்களும் நேற்று கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்தன.
காலியில் நடைபெற்ற சர்வதேச கடல்பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு இந்தக்கப்பல்கள் கொழும்புக்கு சென்றுள்ளன.
இந்த இரண்டு கப்பல்களும் நாசகாரி கப்பல்களாகும். இவையிரண்டும் முறையே 151 மீற்றர் மற்றும் 137 மீற்றர் நீளத்தை கொண்டவையாகும்.
இதில், ஹருசேம் 4550 தொன் நிறையை கொண்டது. ஆமாகிரி 3550 தொன் நிறையை கொண்டது.
இந்த இரண்டு கப்பல்களிலும் 390 கடற்படையினர் பயணம் செய்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZkt2.html
Geen opmerkingen:
Een reactie posten