[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 08:49.00 AM GMT ]
மன்னார், விடத்தல்தீவுப் பகுதியில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே வவுனியா பொலிஸாரால் நேற்று செய்யபப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வவுனியா நகரில் உள்ள அரச வங்கி ஒன்றில் பணத்தை வைப்பிலிடச் சென்றபோது பணத்தில் 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள் இருந்தமை வங்கி உத்தியோகத்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வங்கி நிர்வாகம் இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.
சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZks2.html
தமிழ் மக்களை பற்றி கூற இவருக்கு அருகதை இல்லை!- கல்முனை மாநகரசபை உறுப்பினர் அதிருப்தி
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 09:04.04 AM GMT ]
ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துரைக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்றுவரை கொச்சைப்படுத்தி அதனால் அரச தரப்பினரிடம் இருந்து ஆதாயத்தை பெற்று வரும் முன்னால் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் திடீரென அதுவும் தற்போது ஜனாதிபதி தேர்தல் ஒன்றிற்கான ஆயத்தங்கள் நடைபெற்று வரும் இந்தக் காலகட்டத்தில் இவ்வாறான அறிக்கையினை விடுவது பற்றி ஆழமாக சிந்திக்கவேண்டி உள்ளது.
உண்மையில் இந்த அறிக்கையினை இவர்தான் விட்டாரா அல்லது வெளியிட்ட ஊடகவியலாளர் யாருக்கோ எழுதியதை தவறாக இவரது பெயரில் பிரசுரித்தாரா என்று நினைக்க வேண்டியுள்ளது.
எமது தமிழ் மக்களை பற்றி கூறும் அருகதை இவருக்கு எப்படி வந்தது. கூரைமேல் ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக நினைப்பது வியப்பாக இருக்கின்றது.
இவரது கடந்த கால செயற்பாடுகளை இந்த சந்தர்ப்பத்தில் மீட்டு பார்க்க வேண்டியுள்ளது.
இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஆளும் தரப்புக்கு தாவியதில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை ஆளும் தரப்புடன் இணைப்பதற்கு கடந்த சில நாட்கள் வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் செயலாற்றியமையையும் நினைத்து பார்க்க வேண்டியுள்ளது.
நாவிதன் வெளி தவிசாளர்களை அரச பக்கம் ஈர்ப்பதற்கு பல்வேறு வழிகளில் முயற்சித்து முடியாத தருணத்தில் அவர்களின் ஜுவனோபாயங்களில் தலையிட்டு அவர்களை பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடைய செய்வதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருந்தார்.
இதனை அப்பகுதியில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் இவர் வெளிப்படையாகவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இது மாத்திரம் அன்றி ஆலையடிவேம்பு திருக்கோயில் போன்ற பிரதேசங்களிலும் இவரது இந்த செயற்பாடு தொடர்ந்து இருந்தது.
இவைகள் கைகூடாத நிலையில் சீச் சீச் இந்த பழம் புளிக்கும் எனும் நரியின் நிலைமையில் இன்று இவரது கருத்து அமைந்துள்ளது.
இதைவிட வட்டமடு பிரச்சினை கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தல் போன்ற பல பிரச்சினைகளிலும் தலையிட்டு அம் மக்களை நட்டாற்றில் தள்ளி விட்டு அவர்களின் நிர்க்கதியான நிலைமைக்கு காரணமானவர்களில் இவரும் ஒருவர்.
வட்டமடு பிரச்சினை எழுந்த போது அங்கே சென்ற எமது 2 மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நான் உட்பட ஏனைய என் கட்சியினரையும் பார்த்து பௌத்த துறவியுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் வந்தால் இந்த வட்டமடு பிரச்சினை வெற்றியளிக்காது என நேரடியாகவும் பண்ணையாளர்களை கொண்டும் கூறினார்.
தற்போது அப் பண்ணையாளர்கள் எம்மோடு தொடர்பு கொண்டு தங்களை நடுக்கடலில் இவர் தள்ளி விட்டதாக மனவருத்தப்படுகின்றனர்.
கடந்த 2011ம் ஆண்டு நடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலிலும் 2013 ம் ஆண்டு நடந்த மாகாணசபை தேர்தலிலும் ஆயுதமுனையில் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு காரர்களை மிரட்டியதை மறந்து விட முடியுமா?
நாவிதன் வெளி பிரதேச சபையின் உப தவிசாளராக இருந்த ஒருவரை கட்சிக்கு எதிராக செயற்பட வைத்து தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவரின் உளறல் கூட சிலரை தான் நம்பி நட்டாற்றில் விடப்பட்டுள்ளதாகவும் மனவருத்தப்படுவதாக அறிய முடிகின்றது.
இவரது கடந்த கால செயற்பாடுகளுக்கு ஒரு மன்னிப்பு அளித்து கடந்த மாகாணசபை தேர்தல் காலத்தில் எமது தலைமைகள் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க முன்வந்த போதும் அதனை உதாசீனப்படுத்தி கட்சியின் செயற்பாடுகளை அழிப்பதற்கும் தேசியத்திற்கும் எதிராக முழுமையாக செயற்பட்ட இவரது உதட்டிலிருந்து இவ்வாறான வார்த்தைகளை அறிக்கைகள் மூலம் விடுவதால் மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல.
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதால் எந்த பிரயோசனமும் இல்லை என்பதனையும் இந்த இடத்தில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன் எனக் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZks4.html
மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 10:09.39 AM GMT ]
தேர்தல் செயலகத்தில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் சார்பிலேயே மைத்திரிபால சிறிசேனவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZks6.html
பொகவந்தலாவையில் மக்கள் ஆர்ப்பாட்டம்: பிரதான வீதியில் பரபரப்பு
[ செவ்வாய்க்கிழமை, 02 டிசெம்பர் 2014, 11:16.27 AM GMT ]
பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு பாதுகாப்பு இல்லை என கோரி மேற்படி வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரிகள் உட்பட வைத்தியர்கள் தாதிமார்கள், ஊழியர்கள் கடமையிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாக பொகவந்தலாவ வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூரிய தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCTWKZks7.html
Geen opmerkingen:
Een reactie posten