[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 02:13.29 AM GMT ]
எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது அரசியல்வாதிக்கோ தனிப்பட்ட ரீதியில் ஆதரவளிக்கப்பட மாட்டாது என ஜமயதுல் உலமா சபையின் ஊடக செயலாளர் அல் செய்க் பாசில் பாருக் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை. எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எதிராக செயற்பட போவதுமில்லை.
எமது அமைப்பின் பெயரில் அரசியல் கட்சிகள் கருத்து வெளியிடுவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்வாதிகள் அல்லாவிற்கு பய பக்தியுடன் செயற்பட வேண்டும்.
குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் செயற்படக் கூடாது.
மக்களின் நலன்களை முதனிலைப்படுத்தி செயற்பட வேண்டியது அவசியமானது என அல் செய்க் பாசில் பாருக் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlv2.html
புதுக்குடியிருப்பில் பாரிய மனித புதைகுழி தோண்டும் பணி நாளை ஆரம்பம்
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 02:00.17 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட 80 பேருக்கும் மேற்பட்டவர்களின் சடலங்கள் இந்த பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் பரிசோதகர் துரைரட்னம் ஜெயரட்னம் உள்ளிட்ட 80 பேர் கொலை செய்யப்பட்டு புதைக்கபபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை முதல் மூன்று நாட்களுக்கு புதைகுழி தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவு, ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், ரஜரட்ட பல்கலைக்கழகம், காணி அளவை திணைக்களம், சட்ட வைத்திய திணைக்களம், அகழ்வாராய்ச்சி திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபடவுள்ளனர்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரிடம் நடத்திய விசாரணைகளின் போது பாரிய மனித புதைகுழி பற்றி குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வள்ளிபுரத்தில் புலிகள் சட்டவிரோத சிறைச்சாலை ஒன்றில் 80க்கும் மேற்பட்ட கைதிகளை தடுத்து வைத்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
நீதவானின் உத்தரவிற்கு அமைய புதைகுழிகள் தோண்டப்பட உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlv1.html
Geen opmerkingen:
Een reactie posten