தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 december 2014

மைத்திரிபால ஜனாதிபதியானால் வடக்கு இராணுவ முகாம்கள் அகற்றப்படும்!- ஞானசார தேரர்

பொது வேட்பாளருக்கான கொழும்பு பிரசாரக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு?
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 01:01.19 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் சார்பில் கொழும்பு ஹைட்பார்க்கில் நாளை நடைபெறவுவுள்ள பிரசாரக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொது வேட்பாளர் கருத்தை முன்கொண்டு வந்த அதில் வெற்றி கண்டுள்ள மாதுளுவாவே சோபித தேரர் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க, ஜேவிபி யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஹெல உறுமய முன்னாள் அமைச்சர் அத்துரலியே ரத்தன தேரர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பியான எம் ஏ சுமந்திரன் உட்பட்டோர் உரையாற்றவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlvy.html
ஆளும் கட்சி அமைச்சர்கள் பங்கேற்காத காரணத்தினால் செய்தியாளர் சந்திப்பு ரத்து
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 01:53.30 AM GMT ]
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பங்கேற்காத காரணத்தினால் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ள சம்பவம் கொழும்பில் நேற்று நடைபெற்றுள்ளது. 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செய்தியாளர் சந்திப்பொன்று நேற்று கொழும்பில் நடத்தப்படவிருந்தது. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் எவரும் பங்கேற்காத காரணத்தினால் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டியூ. குணசேகர மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகச் செயலாளர் முஸம்மில் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
முற்பகல் 11.30 செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படவிருந்த போதிலும், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த 12.30 வரையில் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்கவில்லை.
அதன் பின்னர் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை செய்தியாளர் சந்திப்பிற்கு அழைத்து வர எடுக்கப்பட்ட முயற்சியும் தோல்வியடைந்தது.
சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் ஆளும் கட்சியின் செய்தியாளர் சந்திப்பினை ரத்து செய்ய நேரிட்டது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்த கட்சி உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால், சந்திப்பு ரத்து செய்யப்பட்டமை எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlv0.html
மைத்திரிபால ஜனாதிபதியானால் வடக்கு இராணுவ முகாம்கள் அகற்றப்படும்!- ஞானசார தேரர்
[ ஞாயிற்றுக்கிழமை, 30 நவம்பர் 2014, 11:39.27 PM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு எதிராக செயற்படும் எதிரி சக்திகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் நிலவி வரும் அச்சுறுத்தல்கள் குறித்து அம்பலப்படுத்தப்படும்.
நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் அச்சுறுத்தல்கள் குறித்து மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பொது வேட்பாளர் ஐரோப்பிய நாடுகளிடம் பணம் திரட்டி வருகின்றார்.
வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுவதற்கு முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தேர்தலில் மைத்திரிபால வெற்றியீட்டினால் முகாம்கள் அகற்றப்படலாம், இந்த சூழ்ச்சித் திட்டங்கள் குறித்து எதிர்காலத்தில் மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்த போதிலும் ஆளும் கட்சியின் தேர்தல் பிரச்சார மேடைகளில் ஏறி பிரச்சாரம் செய்யப் போவதில்லை என கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBQUKZlu4.html

Geen opmerkingen:

Een reactie posten