தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 december 2014

தயவு செய்து பாப்பரசரை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த வேண்டாம்: கார்தினால் கோரிக்கை!

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இன்று இலங்கை வருகிறார்! சீன போர்க்கப்பல்கள் குறித்து பேசுவார்!
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 02:30.31 AM GMT ]
சர்வதேச கடல்பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் இன்று இலங்கை வருகிறார்.
அப்போது, கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை தலைவர்களுடன் பேச்சு நடத்துவார் என தெரிகிறது.
இந்திய பெருங்கடல் பகுதியில் சீன போர்க்கப்பல்களின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஒன்று கடந்த செப்டம்பர் 7-ந் திகதி முதல் 13-ந் திகதி வரையும், அக்டோபர் 31-ந் திகதி முதல் நவம்பர் 6-ந் திகதி வரையும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் அது டீசலில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் என்றும், எரிபொருள் நிரப்புவதற்காகத்தான் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது எனவும் இலங்கை கூறியது.
எனினும் இந்த விவகாரத்தை இந்தியா மிகவும் தீவிரமாக எடுத்துள்ளது.
இது குறித்து கடந்த வாரம் பாராளுமன்றத்தில் பேசிய வெளிவிவகாரத்துறை இணை மந்திரி வி.கே.சிங், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் சீனாவின் பங்களிப்பு அதிகரித்து வருவதையும் அப்போது அவர் எடுத்துக் கூறினார்.
முன்னதாக கொழும்பு துறைமுகத்தில் சீன போர்க்கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்ட விவகாரம் குறித்து இலங்கையிடம் தனது அதிருப்தியை கடுமையாக இந்தியா தெரிவித்து இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வந்திருந்த பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சவிடம், இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் சர்வதேச கடல்பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான மாநாடு இலங்கையில் நடக்கிறது.
இதில், ‘காலி பேச்சுவார்த்தை 2014’ என்ற தலைப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் முக்கியமான உரையாற்றுகிறார். இதற்காக அவர் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கு முதல் முறையாக வருகை தருகிறார்.

மாநாட்டில் கலந்துகொள்ளும் அவர், பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்து பேசுகிறார். மேலும் அந்த நாட்டு எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.
அப்போது சீன போர்க்கப்பல் நடமாட்டம் குறித்த இந்தியாவின் கவலையை அவர்களுடன் பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlv4.html
பதாகைகளை அகற்றாத பொலிஸ் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: பெப்ரல்
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 02:35.05 AM GMT ]
சட்டவிரோதமான முறையில் வைக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சாரப் பதாகைகளை அகற்றாத பொலிஸ் நிலையங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெப்ரல் அறிவித்துள்ளது. 
உள்ளுராட்சி மன்ற சுற்றாடல் சட்டங்களுக்கு புறம்பான வகையில் நாடு முழுவதிலும் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தாத பொலிஸ் நிலையங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பதாகைகளை வைப்பதற்கு வரி அறவீடு செய்து அதற்கான வரி இலக்கமொன்று வழங்கப்பட வேண்டும். எனினும் அநேகமான பதாககைகள் அவ்வாறு உள்ளுராட்சி மன்ற சட்டங்களுக்கு அமைய வைக்கப்படவில்லை.
இதனால் பாரியளவில் வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளதுடன் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பதாகைகள் சுவரொட்டிகளை அகற்றும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ள போதிலும், அவர்கள் தமது கடமையை உரிய முறையில் செய்வதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlv5.html
தயவு செய்து பாப்பரசரை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த வேண்டாம்: கார்தினால் கோரிக்கை
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 02:54.17 AM GMT ]
தயவு செய்து பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்ட இரண்டு புதிய தபால் தலைகள் வெளியிடும் நிகழ்வு நேற்று நீர்கொழும்பு புனித மேரி தேவாலயத்தில் நடைபெற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தபால் தொலைதொடர்பு அமைச்சர் ஜீவன் குமாரதுங்க உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
நீதியான முறையில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துமாறு அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளிடம் கோருகின்றேன்.
சுயாதீனமான தேர்தல்களுக்கு எவரும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
மக்கள் அமைதியான முறையில் வாக்களிப்பதற்கு உரிய பின்னணியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் வன்முறைகள் இடம்பெறுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தயவு செய்து உங்களது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள பாப்பரசரை பயன்படுத்த கூடாது என கார்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlv6.html

Geen opmerkingen:

Een reactie posten