தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 december 2014

தமிழர்களில் ஒரு பொது வேட்பாளர்! இடம் கொடுக்குமா சிங்கள பேரினவாதம்!

மைத்திரியும் சந்திரிக்காவும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர்: ஞானசார தேரர்
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 02:10.16 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதி தேர்தல் மிகவும் தீர்மானம் மிக்கது.  மக்கள் மதிநுட்பத்துடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
யார் தேர்தலில் தோற்றாலும் அது பௌத்த பிக்குகளை பாதிக்காது. எனினும் நாட்டை பிளவுபடுத்தும் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
நாட்டில் நிலவும் அரசியல் குழப்ப நிலைமையைப் பயன்படுத்தி சிலர் தங்களது நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்த முயற்சிக்கின்றனர்.
சந்திரிக்கா குமாரதுங்க மைத்திரி என்ற பெயரைப் பயன்படுத்தி அகே வைரய திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை அரங்கேற்ற முயற்சிக்கின்றார். (அகே வைரய என்ற திரைப்படம் வயது வந்தர்வகளுக்கு மட்டுமான ஒர் திரைப்படமாகும். பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவர் ஆண்களை பழிவாங்குவதே இந்த திரைப்படத்தின் கதைப் பின்னணியாகும். இந்த திரைப்படம் பற்றியே கலகொடத்தே ஞானசார தேரர் செய்தியாளர் சந்தப்பில் உதாரணம் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.)
நாட்டை பாதுகாத்த தலைவரை சிறைப்படுத்தி வெளிநாட்டு சக்திகளின் தேவகைளை பூர்த்தி செய்ய முயற்சிக்கப்படுகின்றது.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தீர்மானம் அரசியல் ரீதியானது.
ஜனாதிபதி தேர்தலை கருத்திற்கொள்ளாது நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு தீர்மானம் எடுத்துள்ளது.
ராஜபக்ச பற்றி நல்லதோ கெட்டதோ தெரிவிக்கக் கூடிய காலம் இதுவல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZku3.html
சந்திரிக்காவின் நடவடிக்கைகளுக்கு ஐ.தே.க எதிர்ப்பு?
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 02:14.37 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் சில நடவடிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை சுயாதீனமான முறையில் தீர்மானங்களை எடுக்க சந்திரிக்கா அனுமதிப்பதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே சந்திரிக்காவை, ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் நேரடியாக பங்கேற்கச் செய்வதனை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொலனறுவையில் நடைபெற்ற முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சந்திரிக்கா பங்கேற்கவில்லை.
பொது மேடைகளில் கூடிய அளவு சந்திரிக்காவை பங்கேற்காமல் செய்ய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள், ரணில் விக்ரமசிங்கவிடம் கோரியுள்ளனர்.
தனிப்பட்ட குரோதத்தையும் துவேசத்தையும் வெளிப்படுத்தும் வகையிலேயே சந்திரிக்கா பண்டாரநயாக்க குமாரதுங்க மேடைகளில் கருத்துக்களை வெளியிடுவதாகவும் இது எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில தரப்பினருக்கு பிடிக்கவில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZku4.html
தமிழர்களில் ஒரு பொது வேட்பாளர்! இடம் கொடுக்குமா சிங்கள பேரினவாதம்!
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 02:31.41 AM GMT ]
இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் நீண்டகால அரசியல் வாழ்க்கையில் உள்ளவர்கள் ஒருவரே ஜனாதிபதியாக போட்டியிடலாம் என்பதே அந்த சட்டமாகும்.
அந்த வகையில் தற்போது நடக்கும் இந்த தேர்தல் யுத்தமானது வெறுமனே சிங்கள் பேரினவாத்துக்கு மட்டுமே சார்ந்தது.  இதில்  எந்தவிதமான நன்மைகளும் தமிழர்களுக்கு கிடைக்கப் போவதில்லை.
இன்று சிங்கள் மக்கள் மத்தியிலும் பாரிய திண்டாட்ட சூழ்நிலையை உருவாக்கியுள்ளதையும் காணக் கூடியதாகவுள்ளது .காரணம் மைத்திரி போன்ற அரசியல் வாதிகள் சொந்த இடத்திலும் சரி அரசியல் வாழ்விலும் சரி ஒரு நல்ல பெயர் இல்லை என்பதை மிகவும் தெளிவாக விளங்குகிறது.
அது போன்று ரணில் இவ்வளவு காலமும் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு இன்று அரசாங்கத்துக்குள் இருந்து ஒரு பொது வேட்பாளரை இறக்கியமை மிகவும் அவதானிக்க வேண்டிய விடயமாக உள்ளது.
இந்த நடவடிக்கை காரணமாக தங்களுடைய கட்சிக்குள்ளும் சில பாரிய பிரச்சினை உருவாகி உள்ளது, சஜித் போன்றவர்கள் நாளடைவில் அரசுடன் இணையும் சாத்தியமும் காணப்படுகின்றது.
உண்மையான நிலையை சொல்லப் போனால் இன்று தமிழ் தலைமைகள் சிந்திக்க வேடியுள்ளவர்களாக உள்ளார்கள்.
இந்த தேர்தல் யுத்தமானது அரசாங்கத்தில் கடந்த 9 வருடங்களாக இருந்த அதே கூட்டமே இன்று எதிரணியாக மாறியுள்ளது.
ஒரே ஒரு வித்தியாசம் ரணில் போன்ற சிறந்த பிரிவினைவாதி இதில் முக்கிய புள்ளியாக இருப்பதுதான்.
தமிழ் தலைமைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழர்கள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தினால் தற்போது நடக்கும் இந்த தேர்தல் யுத்தத்தில் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மாறமுடியும்.
அதை விடுத்து ஒரு பொதுவான நபருக்கு ஆதரவை வழங்கப் போனால் மிகவும் பாரிய நெருக்கடிக்குள் தமிழ் மக்கள் தள்ளப்படுவார்கள்.
காரணம் இந்த தேர்தலில் எத்தனை கட்சிகள் கூட்டு சேர்ந்தாலும் சிங்கள மக்கள் மனதில் யுத்த வெற்றி பாரிய பங்கினை மஹிந்தவுக்கு வழங்கும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
இன்று இலங்கையில் குடும்ப ஆட்சி இருந்தாலும் சரிக்கு சமன் அபிவிருத்தியும் மஹிந்த அரசாங்கம் செய்துள்ளது, அனைவரினது எண்ணமும் இந்த குடும்ப ஆட்சிக்கு முற்று புள்ளி வைப்பதே.
அது போன்று தேச துரோகம் செய்த ரணில் மைத்திரி கூட்டணிக்கு மக்கள் ஆதரவு சற்று குறைந்தே காணப்படுகின்றது.
ரணில் தனது கட்சியில் இருந்து ஒருவரை நியமித்திருந்தால் ஒரு வேளை நிலைமை மாறியிருந்திருக்கும் சந்தர்பங்கள் கூடுதலாக காணப்படுகின்றது.
இன்று மஹிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முதல் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்க்கான காரணம் இதுவே இந்த அரசில் உள்ளவர்களின் நம்பிக்கை இன்மையே.
பாராளுமன்ற தேர்தல் முதலில் நடத்தியிருந்தால் அனைத்தும் மாறிவிடக் கூடும் என்ற பயம் மஹிந்தவின் மனதில் ஏற்பட்டுவிட்டது.
இந்த தேர்தல் யுத்தத்தில் தமிழ் தலைமைகளின் முடிவானது எதிர் வரும் 5 ஆண்டு காலத்துக்கு தமிழ் மக்களின் நிலைமயை நிர்ணயிக்கும்.
ஒரு வேளை தமிழர்கள் சார்பில் ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு கூடுதலான வாக்குகள் பெற்று தமிழர்களின் பொது வேட்ப்பாளர் எந்த நபருக்கு அதரவு வழங்கினால் அவர்தான் ஜனாதிபதி ஆகலாம் என்ற நிலைப்பாடு வந்தால் எமது உரிமைக்கான ஒப்பந்தம் மூலம் தீர்வினை பெரும் வாய்ப்பு உருவாகலாம்.
சில வேளைகளில் சிங்களவர்களின் வாக்குகளும் தமிழர்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
அது போன்று மண்ணில் மடிந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது பதவியில் இருக்கும் போதே பழி வாங்குவது செத்த பாம்பை அடித்து எந்த பயனும் இல்லை.
அதை விடுத்தது பொதுவாக யாருக்காவது ஆதரவு வழங்கப் போனால் பாரிய பிரச்சினைக்கு தமிழ் தலைமைகளை விட மக்கள் எதிர்நோக்கக் கூடும்.
இந்த தேர்தலை பொறுத்தவரையில் மஹிந்த வெற்றி பெறுவதற்க்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளது.
எத்தனை பேர் அரசை விட்டு வெளியே சென்ற போதும் இதுவரைக்கும் எந்த விதமான பாதகமான விளைவுகளும் இடம்பெறவில்லை.
ஆகவே இன்றைய கால கட்டத்தில் தமிழ் தலைமைகள் மிகவும் சிந்தித்து தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகள் சும்மா இருந்த இவர்கள் இனிவரும் 5 ஆண்டுகளுக்கு இது போன்று தனி பொது வேட்பாளரை நிறுத்தி பார்ப்பது சிறந்தது.
யாருக்கு ஆதரவு அளித்தாலும் ஒன்றும் ஆகப் போவதில்லை என்று தெரிந்தும் எமது தமிழர்களின் வாக்குப்பலம் ஜனாதிபதியை தீர்மானிக்க வேண்டும் என்பதை சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டுவதற்கு சிறந்த சந்தர்ப்பம் இதுவே.
இதிலாவது தமிழ் தலைமைகள் ஒன்று சேர்ந்து உங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம் .
எஸ் கே
shashi.batti@gmail.com
http://www.tamilwin.com/show-RUmszCTXKZku5.html

Geen opmerkingen:

Een reactie posten