[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 11:09.01 AM GMT ]
தேர்தல் அதிகாரிகளும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் அச்சகத்தின் உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றி ஊழியர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாட்களில் ஒட்டுவதற்காக இந்த சுவரொட்டிகள் தயார் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்க்கட்சியினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahu5.html
மகிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வில்லை: மைத்திரிபால
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 12:09.36 PM GMT ]
நுகேகொடையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தபால் மூல வாக்களிப்பு தினத்திற்கு முன்னர் அரசாங்கத்தின் வேட்பாளரால் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட முடியாது போனது.
இதன் மூலம் அரச தரப்பு வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் எந்தளவு தோல்வியான நிலையில் உள்ளது என்பது புலனாகியுள்ளது.
மகிந்த ராஜபக்ஷ வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் 6 மாதங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டது. அரசாங்கத்தில் இருந்ததால் எனக்கு அது பற்றி தெரியும்.
மூன்றாவது கால நோக்கு என்ற பெயரில் அதனை தயாரித்திருந்தனர். இந்த நிலையில், உலகை வெல்லும் வழி என்ற பெயரில் அதனை வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் நாட்டை சாப்பிட்டு தற்போது உலகத்தை சாப்பிட முயற்சித்து வருகின்றனர் என மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahu7.html
திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 2,500 மில்லியன் ரூபா கோரும் மைத்திரிபால
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 12:16.30 PM GMT ]
போலி கையெழுத்துடன் உடன்படிக்கை ஒன்றை தயார் செய்து திஸ்ஸ அத்தநாயக்க தனக்கு அவதூறு ஏற்படுத்தியுள்ளதாக மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
இதற்கு இழப்பீடாக அத்தநாயக்க தனக்கு 2 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahvy.html
மகிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசிக்காத விமல் வீரவன்ஸ
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 12:22.30 PM GMT ]
மைத்திரிபால சிறிசேனவுக்கு சேறுபூசும் அமைச்சர் விமல் வீரவன்ஸ, மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தையும் படித்து பார்க்கவில்லை என சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மகிந்த சிந்தனை தேர்தல் விஞ்ஞாபனத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், மைத்திரிபால சிறிசேன நாட்டை காட்டிக்கொடுக்க போகிறார் என்று குற்றம் சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்.
அரசாங்கம் வெளியிடும் தேர்தல் விஞ்ஞாபனம் கடலையை பொதி செய்வதற்காக வெளியிடப்படுவதில்லை. அவற்றை விமல் வீரவன்ஸ வாசித்து தெளிவுபெற வேண்டும் எனவும் ஷிரால் லக்திலக்க கூறியுள்ளார்.
சிறிகொத்த மீதான தாக்குதலில் எனக்கு சம்பந்தமில்லை- விமல் வீரவன்ஸ
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்த மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுடன் தனக்கு எந்த தொடர்புமில்லை என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய அமைப்புகளில் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன் தேசிய அமைப்புகளின் ஒன்றியத்திற்கும் தேசிய சுதந்திர முன்னணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த அமைப்பு தேசிய சுதந்திர முன்னணியின் கீழ் இயங்கும் அமைப்பல்ல.
அவர்களில் செயற்பாடுகளில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் போது நான் அவற்றில் கலந்து கொள்வதுண்டு என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahvz.html
ஜனாதிபதி என்னிடம் பிரச்சாரம் செய்யுமாறு கோரவில்லை: மறுக்கும் சங்கக்கார
[ வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2014, 11:39.48 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலில் தனக்காக பிரச்சாரம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்காரவுக்கு பணம் கொடுக்க முயன்றதாக செய்திகள் வெளியான நிலையில் அதனை சங்கக்கார மறுத்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் ஃபான் பேஜில் ( official Facebook fan page) அவர் பதிவு செய்துள்ள தகவலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக இணையத் தளங்களில் இந்தச் செய்தி பரவி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தகவலைக் கேட்டதும் தான் அதிர்ச்சியுடன் அதிருப்தியும் அடைந்ததாக குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.
இது முற்றிலும் தவறான தகவல் என குறிப்பிட்ட சங்கக்கார, தனது பெயரை யாரும் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahu6.html
Geen opmerkingen:
Een reactie posten