ஒன்றாக இருந்து பாலப்பம் சாப்பிட்டு விட்டு என்னை ஏமாத்தினார் மைத்திரி: மகிந்த மக்கள் முன் புலம்பினார் !
[ Dec 25, 2014 10:42:40 AM | வாசித்தோர் : 5665 ]
கடந்த நவம்பர் மாதம் 19ம் திகதி ஒரு நல்ல விருந்து நடந்தது. இரவுவேளை நடந்த அந்த விருந்தில் பாலப்பம், மற்றும் சலாட் போன்ற நல்ல உணவுகள் இருந்தது. மைத்திரி அதனை என்னும் சேர்ந்து சாப்பிட்டார். ஆனால் 2 தினங்கள் கழித்து எனக்கு எதிராக போட்டியிட இருப்பதாக அறிவித்தார். இவனை எப்படி நம்புவது ? இவன் கையில் எப்படி ஜனாதிபதி பொறுப்பை கொடுப்பது ? இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார் மகிந்தர். நேற்று முன் தினம் மேல் மாகாணத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசும்போதே மகிந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதனை நான் சற்றும் எதிர்பார்கவில்லை என்றும், இது ஒரு பெரும் துரோகம் என்றும் அவர் கூறியுள்ளதோடு, மக்களே இப்படி பாலப்பம் சாப்பிட்டு ஏமாத்திய ஒரு ஆளை நீங்கள் எப்படி நம்புவீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது எல்லாம் மகிந்தர் மேடை ஏறினால், நாட்டின் வளர்ச்சி குறித்தோ இல்லை அபிவிருத்தி குறித்தோ பேசுவது இல்லை மாறாக தான் அடைந்த அதிர்சியை தான் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி வருகிறார். இவருடன் ஒன்றாக உட்கார்ந்து பாலப்பம் சாப்பிட்டால், என்ன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று இலங்கை சட்டம் சொல்கிறதா ? இல்லையே. ஆனால் மகிந்தருக்கு இதனை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பது மட்டும் நன்றாகப் புலப்படுகிறது. கடந்த சில நாட்களாக மைத்திரிக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள், அவருக்கான மக்கள் ஆதரவை மேலும் பெருகச் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/1723.htmlதன்னை ஒரு நல்ல மகாராணி என்று நிரூபித்தார் எலிசபெத் ராணி !
[ Dec 25, 2014 10:57:25 AM | வாசித்தோர் : 10470 ]
கிருஸ்மஸ் தினமான இன்று, பிரித்தானிய மகாரணி எலிசபெத் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு TV மூலமாக வாழ்த்துக்களை சொல்லவும் உள்ளார். இதேவேளை அவர் சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கை, அவரை ஒரு படி மேலே உயர்த்தி உள்ளது எனலாம். கிருஸ்மஸ் தின வாழ்த்து அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ள விடையம் என்னவென்றால், ஆபிரிக்காவில் எபொல்லா நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் சிக்கிரம் குணமடையவேண்டும்.
மேலும் என் நெஞ்சத்தை தொட்டவிடையம் என்னவென்றால், இது கொடிய நோய் என்று கூடப் பாரமல் சிலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகிறார்கள். அவர்கள் போற்றத்தக்கவர்கள் என்று மகாராணி கூறியுள்ளார்.
மேலும் உலகப் போரில் உயிரிழந்தவர்களையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அத்தோடு பிரித்தானியாவில் உள்ள மக்கள் செல்வச் செழிப்போடு நன்றாக வாழவேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார். அலங்கரிக்கப்பட்ட கிருஸ்மஸ் மரம் முன்னால் நிற்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. மேலும் முதலாம் உலகப்போரில் உயிர் நீத்த வீரர்களின் படங்களையும் அவர் தன் பின்னால் வைக்க மறக்கவில்லை. பிரித்தானிய மகாராணியின் கிருஸ்மஸ் வாழ்த்துச் செய்தி முதன் முதலாக 1957ம் ஆண்டு ஒளிபரப்பாகி இருந்ததும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1724.html
Geen opmerkingen:
Een reactie posten