தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 december 2014

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை பாராட்டு!!

அலரி மாளிகையின் தேர்தல் பிரச்சாரப் பொறிமுறைமையில் வீழ்ச்சி!– மைத்திரிபால
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 03:19.24 AM GMT ]
அலரி மாளிகையின் தேர்தல் பிரச்சாரப் பொறிமுறைமையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
அலரி மாளிகையில் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்குப் பொறுப்பாக செயற்பட்டு வரும் அதிகாரிகள் ஒவ்வொருவராக விலகிச் செல்கின்றனர்.
அரசாங்கத்திலிருந்து நான் விலகியதனைத் தொடர்ந்து பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
ஆளும் கட்சி என்னுடைய இழப்பினை தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த காலங்களைப் போன்று வலுவான ஓர் தேர்தல் பிரச்சாரப் பொறிமுறைமயை காண முடியவில்லை என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkvy.html


ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை பாராட்டு
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 03:26.41 AM GMT ]
ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கும் ஐரோப்பிய நீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.
நீதிமன்றின் தீர்ப்பானது புலிகளுக்கு ஆதரவான ஐரோப்பிய செயற்பாட்டாளர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறெனினும், நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ய எடுத்தத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றோம்.
புலிகளுக்கு எதிராகவும், புலிச்செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம் 16ம் திகதி புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக ஐரோப்பிய நீதிமன்றம் அறிவித்திருந்தது.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkvz.html
கல்வியமைச்சர் நாட்டை விட்டு வெளியேற ஆயத்தம்?
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 04:17.10 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலில் மகிந்த போட்டியிடும் இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் குழுவின் முக்கியஸ்தரான அமைச்சர் பந்தல குணவர்த்தன திடீரென வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்ள தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அரசின் முக்கிய அமைச்சர்கள் சிலர் வேதனையுடன் இருப்பதாகவும், இவரின் விஜயத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவரின் வெளிநாட்ட விஜயத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இதேவேளை, மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்காக பெற்றோர்களையும், மாணவர்களையும் வெளி இடங்களுக்கு அழைத்து பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkv2.html

Geen opmerkingen:

Een reactie posten