தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 december 2014

உரிமையில்லாத சலுகைகளை பெற்றுக்கொண்டு என்ன பயன்?: கிழக்கு மா.உ பிரசன்னா இந்திரகுமார்!

அலரி மாளிகையில் மாதாந்த உணவுக்கு மாதம் 25 மில்லியன் ரூபா செலவு: சந்திரிக்கா
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 05:22.51 AM GMT ]
அலரி மாளிகைக்கான மாதாந்த உணவுச்செலவு 25 மில்லியன் ரூபா என்றும், அதைவிட பழங்களுக்காக மாதம் தோறும் 5 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில், ஹைட் பார்க்கில் நேற்று நடந்த பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 அலரி மாளிகைக்கான மாதாந்த உணவுச்செலவு 25 மில்லியன் ரூபா என்றும், அதைவிட பழங்களுக்காக மாதம் தோறும் 5 இலட்சம் ரூபா செலவிடப்படுவதாகவும் தகவல் வெளியிட்டார்.
ஊழல்மிக்க ராஜபக்ச அரசாங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்மை விட்டுச் செல்வதை தடுப்பதற்காக அவர்களுக்கு 250 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் சந்திரிக்கா குற்றம்சாட்டினார்.
“எங்களைத் தேசத் துரோகிகள் என்றும், 100 நாட்களுக்குள் நாட்டை புலிகளிடம் கொடுக்கப் போவதாகவும் அரசாங்கம் பரப்புரை செய்கிறது.  ஆனால் தேசத் துரோகிகள் எம்மத்தியில் இல்லை. துரோகிகளை அரசாங்கத்தில் வைத்திருப்பது ராஜபக்ச ஆட்சி தான்.
பெருமளவு பொதுமக்களை கொன்று குவித்த கருணாவை அமைச்சராக வைத்திருக்கிறார். புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் குமரன் பத்மநாதனுக்கு முக்கிய பிரமுகர்களுக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன” என்றும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
“இந்த பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் 9வது இடத்தில் தந்தையும், 14வது இடத்தில் மகனும் இருக்கின்றனர் என்று மகிந்த ராஜபக்சவையும், நாமல் ராஜபக்சவையும் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்தி:
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkv3.html

பொகவந்தலாவ வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 05:35.54 AM GMT ]
பொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட தாதிமார்களும், ஊழியர்களும் நேற்று மாலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தனக்கு அச்சுறுத்திய நபர்களை இனங்கண்டு கைது செய்ய வேண்டுமென கோரியே இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ வைத்தியசாலை வைத்திய அதிகாரி கே.எஸ்.ஜயசூரிய தெரிவிக்கின்றார்.
லொய்னோர்ன் தோட்டத்தில் நேற்று மண்சரிவினால் உயிரிழந்த இருவரின் சடலத்தின் பிரேத பரிசோதனையை பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் செய்யுமாறு கோரி பொதுமக்கள் வைத்தியசாலைக்கு செல்லும் பாதையை நேற்று பிற்பகல் 1.30 மணியிலிருந்து மறித்து செய்த ஆர்ப்பாட்டத்தினால் பொகவந்தலாவ- பலாங்கொடை பிரதான வீதி தடைப்பட்டிருந்தது.
நேற்று பிற்பகல் பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு வந்த சிலர் தனக்கும் சக அதிகாரிகளுக்கும் அச்சுறுத்தியதாகவும் இந்த இரண்டு சடலத்தின் பிரேத பரிசோதனை இந்த வைத்தியசாலையிலேயே செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகவும் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அத்தோடு தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 30 பேருக்கு சிகிச்சையளிப்பதாகவும் மேலும் அவசர சிகிச்சைகளை மட்டும் மேற்கொள்ளவுள்ளதாகவும் வைத்திய அதிகாரி இதன்போது தெரிவித்தார்.
தனக்கும் சக அதிகாரிகளுக்கும் அச்சுறுத்திய நபர்களை பொகவந்தலாவ பொலிசார் கைது செய்யும் வரையும், அத்தோடு வைத்தியசாலைக்கும் தனக்கும் சக அதிகாரிகளுக்கும் தாதிமார்களுக்கும் ஊழியர்களுக்கும் பொலிசார் பாதுகாப்பு வழங்கும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பொலிசாரிடம் வினவியபோது,
வைத்தியர்களை அச்சுறுத்திய நபர்களை இனங்கண்டுள்ளதாகவும் அவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரி கே.எஸ். லொக்குஹோவாகம பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு நேற்று இரவு வருகை வந்து இரண்டு சடலங்களின் பிரேத பரிசோதனைகளையும் மேற்கொண்டு சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkv4.html
தொடரும் சீரற்ற காலநிலை! ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 05:46.53 AM GMT ]
இலங்கையில் பல பாகங்களில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலேயே மண் சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண் சரிவுகள் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கண்டி பஹிரவகந்த பகுதியில் மண் சரிவு ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக சுமார் 35 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமது குடியிருப்புகளில் இருந்து வெளியேறி நேற்றிரவு முழுவதும் கண்டி பேராதனிய வீதியில் தஞ்சமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பஹிரவகந்த பகுதியில் மண் மேடொன்று சரிந்து வீதியில் விழுந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய தமது அதிகாரிகள் இன்று குறித்த பகுதிக்கு சென்று மண் சரிவு அபாயம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை வடக்கில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பல மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkv5.html
கொழும்பில் இருந்து யாழிற்கு 300 சீனி மூடைகளுடன் சென்ற பாரவூர்தி மாயம்
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 06:09.05 AM GMT ]
கொழும்பிலிருந்து யாழிற்கு 300 சீனி மூடைகளுடன் சென்ற பாரவூர்தியைக் காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30ஆம் திகதி முதல் காணவில்லையென சீனி மூடைகளின் உரிமையாளர்கள் நேற்று கோப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதியை சேர்ந்த இரண்டு வர்த்தகர்கள் இணைந்து பாரவூர்தியொன்றில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சீனி மூடைகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
பாரவூர்தியின் சாரதியும், உதவியாளரும் புத்தளம் வரை தொடர்பில் இருந்ததாகவும் அதன் பின்னர் அவர்களுடனான தொடர்பு அற்றுப்போனதாகவும் உரிமையாளர்கள் தங்கள் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkv6.html
உரிமையில்லாத சலுகைகளை பெற்றுக்கொண்டு என்ன பயன்?: கிழக்கு மா.உ பிரசன்னா இந்திரகுமார்
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 06:34.03 AM GMT ]
இன்று அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் பிள்ளையான், ஹிஸ்புல்லா போன்ற தமிழ் முஸ்லீம் அரசியல்வாதிகள் தங்கள் இருப்புகளை இன்னும் வலுப்படுத்தி கொள்ள கிடைத்திருக்கும் துருப்புச் சீட்டு தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை திட்டித் தீர்த்து கொண்டுதான் அவர்கள் இந்த அரசாங்கத்தை குளுமைப்படுத்துகின்றனர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
அண்மையில் மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன், பொருளாதார பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா போன்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றி வெளியிட்ட விமர்சனங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் கூறுகையில்,அண்மையில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் அவரை தோற்கடிப்பதற்காக இந்திய அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 10 கோடி ரூபா வழங்கியதாக கூறியிருக்கின்றார்.
அவருக்கே தெரியும் அவரை இந்திய அரசாங்கமோ தமிழ் தேசிய கூட்டமைப்போ தோற்கடிக்கவில்லை. மக்களே தோற்கடிக்கச் செய்தனர் என்று அவ்வாறு இருக்கும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினை திட்டி திட்டியே இவர்கள் தங்கள் அரசியலை நடாத்தி கொண்டிருக்கின்றார்கள்.
இந்தியாவின் அரசியல் முறைமையில் தோற்றுவிக்கப்பட்டதே இந்த மாகாண சபை முறைமை அதிலே தான் இவர் முதலமைச்சராக சிறிது காலம் இருந்தார். அது மட்டுமல்லாது இவர் இருந்த காலத்தில் கூட இந்திய அரசாங்கத்தால் கிழக்கு மாகாண மக்களுக்கென்று பல நன்மைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் அவை மக்களுக்கு சென்றடைந்தனவா என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இவரை தோற்கடிக்க வேண்டிய தேவை இந்திய அரசாங்கத்திற்கும் இல்லை தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இல்லை.
இந்தியா மேலும் மேலும் எமது மக்களுக்காக பல நன்மைகளை மேற்கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றது. நாங்கள் ஒருபோதும் பணத்தை கொண்டு அரசியல் செய்வதில்லை. மக்களின் மனதை வென்றுதான் அரசியல் செய்கின்றோம்.
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினை குறை கூறுகின்றவர்கள் மக்கள் மனதை வென்றிருந்தால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். அது போலவே அண்மையில் பொருளாதார பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு  முஸ்லீம் காங்கிரஸையும் இனவாத அரசியல் செய்ய துண்டுகின்றது என்று கூறிருக்கின்றார்.
நான் நினைக்கின்றேன் அவர் இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் போக்கு பற்றி அறியாதவராய் இருந்திருக்கின்றார் என்று. ஏனெனில் நாம் ஒரு போதும் இனவாத அரசியல் செய்யவில்லை இனத்தின் உரிமைக்காகவே அரசியல் செய்கின்றோம்.
அதுமட்டுமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு போதும் சலுகைளுக்காக அரசியல் செய்யும் கட்சியல்ல. எமது சந்ததிகளின் நன்மைக்காகவே இன்றுவரை அரசியல் மேற்கொள்கின்றோம். சலுகைகளுக்காக கொள்கைகளை மாற்றுகின்றவர்கள் அல்ல.
உரிமை இல்லாமல் கிடைக்கின்ற சலுகைகளை பெற்றுக் கொண்டு என்ன பயன் இருக்கப் போகின்றது. இவர்கள் கூறுகின்றனர் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்காக என்ன செய்ய போகின்றது என்று ஆம் எம்மால் பாதை போட முடியாது அபிவிருத்தி செய்ய முடியாது தான். ஆனால் எமது மக்களின் உரிமைகளை கேட்டு போராட முடியும்.
ஆனால் அது அவர்களால் முடியாது ஏனெனில் இந்த அரசாங்கத்தை எதிர்த்து அவர்களால் ஒரு துரும்பை கூட நகர்த்த முடியாது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பினை குறை கூறுவதற்கு அருகதையற்றவர்களே இவர்கள் என்றும்  தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkv7.html

Geen opmerkingen:

Een reactie posten