[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 03:03.41 AM GMT ]
தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் சார்பில், ரத்தன பண்டார என்பவர் இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கை நேற்று தாக்கல் செய்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டு முறை அதிபராகப் பதவி வகித்தவர் என்றும், அவர் மூன்றாவது முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
18வது அரசியலமைப்புத் திருத்தம், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும், பொதுமக்களிடம் அதுகுறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
அரசியலமைப்பின் படி, இதுகுறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
எனவே, 18வது திருத்தச்சட்டத்துக்கு அமைய, மூன்றாவது தடவை போட்டியிடுவதில் இருந்து மகிந்த ராஜபக்சவைத் தடை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZku7.html
அழிந்து போகும் எம் இனத்தை எழுந்து நிற்க வழிசமைப்போம்: கிழக்கு மா.உ த.கலையரசன்
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 03:27.11 AM GMT ]
அம்பாறை மாவட்டம் இராணமடு இந்து மகாவித்தியாலயத்தில் கா.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றுவிக்கும் மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சைக்கான செயலமர்வு கருத்தரங்கு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் தலைமையில் நேற்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன், நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் எஸ்.குணரெட்ணம் மற்றும் அன்பே சிவம் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.
அதன் போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாக வரவேண்டியவர்கள். இங்கே இருக்கின்ற ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் கல்வியில் உயர்ந்து துறைசார் பட்டங்களை பெற்று திணைக்களங்களில் பணியாற்ற வேண்டும்.
கடந்த காலங்களில் நாம் எந்த திணைக்களத்திற்கு சென்றாலும் அங்கு தமிழர்களும் உயர்பதவியில் இருப்பார்கள் ஆனால் இன்று சற்று நிலைமை மாறியுள்ளது கடந்த கால யுத்த சூழலை காரணம் காட்டி மாறி மாறி வந்த அரசுகள் வேண்டுமென்றே நம்மை ஓரம் கட்டி வந்தனர்.
கல்வி கற்பதற்கு கூட முடியாத நிலையில் வாழ்ந்த நாம் தற்போதும் கூட முன்னேறுவதற்கு பல தடைகள் விதிக்கின்றனர்.
கல்வியால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை எமது சுயமுயற்சியினால் நாம் தேடல்கள் மூலம் பலவகையான விடங்களை அறிந்து கொள்ள முடியும்.இன்று இங்கே நடைபெறுகின்ற இந்த செயலமர்வும் உங்களுக்கு பல நன்மைகளையே தரும்.
தற்போது விஞ்ஞான வளர்ச்சியால் எமது வீட்டிற்குள் இருந்தே உலகத்தை பார்க்க முடிகின்றது. இலத்திரனியல் சாதனங்களால் மாணவர்கள் கெட்டு விடும் வாய்ப்பே இருப்பதாக பலர் கூறுகின்ற போதும் நான் அதற்கு எதிராகவே இருக்கின்றேன்.
ஏன் என்றால் அதில் நிறைய விடயங்கள் மாணவர்களுக்கு தேவையாக இருக்கின்றது. நல்ல விடயங்களுக்கு மட்டும் இப்படியான விடங்களை பயன்படுத்துவதற்கு மாணவர்களாகிய நீங்கள் முயற்சிக்க வேண்டும்.
பாலுடன் நீரை கலந்து பாத்திரத்தில் வைத்தால் அன்னப்பறவை பாலை மட்டுமே பருகும் இவ்வாறு மாணவர்களாகிய நீங்களும் பழகிக்கொள்ளவேண்டும்.எந்த விடயத்திலும் நல்லதை மட்டுமே எடுத்து கொள்ளுங்கள் நல்லவர்களாகவே வாழலாம்.
க.பொ.த சாதாரண தரப்பரீட்சை முடிந்தால் சரி என்று காலத்தை வீணே கழிக்காமல் உயர்தரம் கற்று பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்ற உறுதியுடன் எதிர் காலத்தில் கல்வியுடன் எமது கலை கலாசாரத்திலும் கவனம் எடுத்து அழிந்து போகும் எம் இனத்தை எழுந்த நிற்க ஒற்றுமையாய் செயல்படுவோம் எனவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkv0.html
மட்டக்களப்பில் சுகாதார சான்றிதழின்றி நடத்தப்பட்ட உணவு விடுதிகளுக்கு அபராதம்!
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 04:01.56 AM GMT ]
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கடந்த வாரம் வெட்டுக்காடு பகுதியில் உணவு விடுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சுகாதார சான்றிதழை கொண்டிராத ஐந்து உணவு விடுதியாளர்களுக்கு எதிராக நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்போது இரு உரிமையாளர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபா வீதமும் மேலும் இரு உரிமையாளர்களுக்கு தலா ஆறாயிரம் ரூபா வீதமும் தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அதில் ஒருவர் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு வேறு ஒரு தினம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர் கூறினார்.
வெட்டுக்காடு பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதார நலனை கருத்தில்கொண்டு தொடர்ச்சியாக இவ்வாறான திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkv1.html
Geen opmerkingen:
Een reactie posten