தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 december 2014

கருணாவுக்கு மகிந்தவின் மற்றுமொரு காருண்யம்!!

பிரதியமைச்சர் நிஷாந்தவை கைது செய்ய உத்தரவு
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 08:21.24 AM GMT ]
பிரதியமைச்சர் நிஷாந்த முதுஹெட்டிகம மற்றும் அவரது சாரதி மெத்சிறி சாமிந்த ஆகியோரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
பத்தேகம மாஜிஸ்திரேட் நீதிமன்றம், பொலிஸ் மா அதிபருக்கு இன்று இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வதுரம பிரதேச கூட்ட அரங்கொன்றுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பிலேயே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
http://www.tamilwin.com/show-RUmszCRYKaix7.html
பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க எதிரணிக்கு தாவுகிறார்?
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 09:10.04 AM GMT ]
பிரதிஉயர்கல்வி அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க,  பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்காக அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளார்.
அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்களில் 60 வீதமானவர்கள் திருடர்கள் என பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க அண்மையில் கூறியிருந்தார்.
அத்துடன் அருங்காட்சியக கொள்ளை சம்பவத்துடன் ஜனாதிபதிக்கு தொடர்பிருப்பதாக கூறியதன் மூலம் அவர் சர்ச்சைகளுக்கு உள்ளானார்.
உக்குவளை வேகொடஹெல ரத்வத்தே வளவில் சந்திரிக்கா தலைமையில் நடைபெற்ற இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றில் ஏக்கநாயக்க அவரது அவரது மருமகளுடன் கலந்து கொண்டதாக அப்போது ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
அரசாங்கத்தை தொடர்ந்தும் விமர்சித்து வந்த அவர், பொது வேட்பாளராக போட்டியிடவும் தயார் என கூறியிருந்தார்.
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் செயற்பாடுகளை தொடர்ந்தும் விமர்சித்து வந்த அவர், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியில் இருப்பதாகவும் சிரேஷ்ட அரசியல்வாதியாக தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
பல முறை கட்சி மாறிய அனுபவம் கொண்டுள்ள நந்திமித்ர ஏக்கநாயக்க இம்முறையும் கட்சி தாவ தயாராகி வருவதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahoy.html
கருணாவுக்கு மகிந்தவின் மற்றுமொரு காருண்யம்
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 09:20.29 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவரும் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதனின் மாமனார், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கட்டணம் செலுத்தும் போது பெரும் மோசடி ஒன்றை செய்துள்ளதாக தெரியவருகிறது.
மட்டக்களப்பை சேர்ந்த கே. சத்திரசேகரம் என்ற கருணாவின் மாமனார் கடந்த 17 ஆம் திகதி வைத்தியசாலையின் 14 விடுதியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு உதவியாக மனைவி மற்றும் ஒரு யுவதி வைத்தியசாலையில் தங்கியிருந்ததுடன் அவர்களுக்கு 13 மற்றும் 14 கட்டில்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இவர்களுக்கு தேவையான உணவு வைத்தியசாலையில் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் வைத்தியசாலையில் இருந்து வெளியேறும் போது கருணாவின் மாமனாருக்காக மாத்திரம் 16 ஆயிரத்து 215 ரூபா செலுத்தப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் பணிப்பாளரது நேரடியான உத்தரவின் பேரில் இவை நடந்துள்ளன.
வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ஒருவருக்கு உதவியாக தங்கும் நபர்களுக்கு கட்டில்கள் ஒதுக்கப்படுவதில்லை. அப்படி ஒதுக்க வேண்டுமாயின் நோயாளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யப்பட்டு கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
எனினும் கருணா, ஜனாதிபதி மகிந்தவின் அணியில் இருப்பதால், அவருக்கு வைத்தியசாலையின் வழமையான நடைமுறை பின்பற்றப்படவில்லை. இதன் காரணமாக வைத்தியசாலைக்கு சுமார் 32 ஆயிரம் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahoz.html

Geen opmerkingen:

Een reactie posten