[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 07:17.14 AM GMT ]
வீதி நாடகக் கலைஞர்களையும், ஹம்பாந்தோட்டை நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரையும் தாக்கியதாக நகரசபைத் தலைவர் எராஜ் பெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
வீதியின் எதிர்ப்பு என்ற தொனிப்பொருளில் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக நகரங்கள் கிராமங்கள் தோறும் வீதி நாடகக் கலைஞர்கள் வீதியில் நாடகம் அரங்கேற்றி மக்களை விழிப்புணர்வடையச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் அண்மையில் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவிருந்த நாடகத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதுடன், கலைஞர்கள் தாக்கப்பட்டனர்.
தாக்குதல் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்திருந்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஹம்பாந்தோட்டை நகரசபையின் தலைவர் எராஜ் பெர்னாண்டோ கைது செய்பய்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மேலும் நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களை பொலிஸார் இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
நகரசபைத் தலைவரை 200000 சரீரப் பிணையின் அடிப்படையில் பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.
ஏனைய சந்தேக நபர்களுக்கும் தலா 200000 ரூபா சரீரப் பிணையின் அடிப்படையில் பிணை வழங்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaix3.html
தோல்விக்கு துவளாத வைர நெஞ்சம் கொண்டவர்கள் தீவக மக்கள்: .சிறீதரன் எம்பி
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 07:30.45 AM GMT ]
ஊர்காவற்துறை புளியங்கூடல் மக்களுடனான சந்திப்பு புளியங்கூடல் சனசமூக நிலையத்தலைவர் பூ.சிறீதரன் தலைமையில் இடம் பெற்றது.
இதில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கிராம மக்களுக்கு பசுமைத்தேசம் திட்டத்தின் கீழ் விதை தானியங்களையும் வழங்கி வைத்ததோடு மக்களின் வாழ்வியல் தொடர்பான பிரச்சனைகளையும் கேட்டறிந்து பதிலுரைத்தார்.
போரின் வடுக்கள் மாறாத தோற்றத்தை தாங்கி நிற்கும் தீவக மண்ணின் நிலமைகளைப் பார்க்கும் போது மிகவும் துன்பமாக இருக்கிறது.
தீவக உறவுகள் உலகெலாம் பரவி தம் மண்சார்ந்த பெருமைகளை காத்து புகழின் எல்லையை அடைந்திருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள நிலைமைகள் மிகவும் துன்பத்தை தருவதாக இருக்கிறது.
அடிப்படை வசதிகள் எதுவுமே அற்ற நிலையிலேயே எதனையும் சுயமாக சிந்தித்து செயலாற்ற முடியாதவர்களாக இம்மண்ணுக்குரிய சுதேசிகளான தமிழர்கள் வாழ்கிறார்கள்.
இத்தனை அவலங்கள், துன்பங்களுக்கு காரணமாக இருப்பவர் தர்ம தேவதையால் தண்டிக்கப்படுவர்.இதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை எனவும் சிறீதரன் எம்.பி மேலும் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் புளியங்கூடல் சனசமூக நிலையத்தலைவர் திருவருள், கமக்கார அமைப்பின் தலைவர் ஜெகன் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaix4.html
Geen opmerkingen:
Een reactie posten