[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 09:45.20 AM GMT ]
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்த குண்டர்கள் கட்சியின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
அமைச்சர் விமல் வீரவன்ஸவின் அமைச்சுக்குரிய நிறுவனங்களில் இன்று பணிக்கு வந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஊழியர்களை அரசியல் ஆர்ப்பாட்டத்திற்கு பயன்படுத்தியமை தொடர்பில் ஏனைய ஊழியர்கள் விமல் வீரவன்ஸவுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
ரணில் – மைத்திரி உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போர்வையில் அமைச்சர் விமல் வீரவன்ஸ, நடத்தி வரும் தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் என்று அமைச்சின் ஊழியர்களை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கண்ணில் படும் வகையில் வீரவன்ஸவின் குண்டர்கள் தாக்குதல் நடத்த பொல்லுகளையும் கையில் வைத்திருந்தனர்.
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான G18272 என்ற இலக்கம் கொண்ட வானில் ஊழியர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaho1.html
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு: இலங்கை தொழிலாளா் காங்கிரஸ் தெரிவிப்பு
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 09:56.22 AM GMT ]
இன்று கொட்டகலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் பின்வருமாறு…
கேள்வி - ஊடகவியலாளர் சந்திப்பு வைப்பதற்கான காரணம் என்ன ?
பதில் - சில வதந்திகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. நான் இந்தியா சென்று இந்தியாவிலிருந்து வேறு முடிவு ஒன்று தெரிவிப்பேன் என்று அவ்வாறான முடிவு எதுவும் இல்லை. இதை தெரிவிக்கவே இந்த சந்திப்பு. இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முழுமையாக ஆதரிப்பதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முடிவாகும். அவற்றை வெற்றிபெற செய்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையாக பணிகளில் ஈடுப்பட்டுள்ளது.
கேள்வி - ஆதரவு தெரிவிக்குமாறு எதிரணியிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்ததா?
பதில் - சில பேர் ஆதரவு தெரிவிக்குமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் ஏற்கனவே நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியதால் எங்களின் முடிவில் மாற்றம் இல்லையென நான் தெரிவித்தேன்.
கேள்வி - இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து சில உறுப்பினர்கள் எதிரணிக்கு சென்றுள்ளார்களா?
பதில் - இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து யாரும் செல்லவில்லை. அப்படியே யாரும் எதிரணிக்கு சென்றால் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு.
கேள்வி - மலையகத்தை சேர்ந்த சில அரசியல்வாதிகள் முடிந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றிசெய்யுமாறு சாவல் விடுகின்றனர். இது சம்மந்தமாக நீங்கள் எதுவும் கருத்து தெரிவிக்கின்றீர்களா?
பதில் - இதற்கான பதில் 9ம் திகதி முடிவு தெரிந்துவிடும்.
கேள்வி - ஜனாதிபதி தேர்தலுக்கு மலையக மக்களின் ஆதரவு யாருக்கு என உங்களுக்கு தெரியுமா?
பதில் - மலையக மக்கள் முழுமையாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுடனும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் கைகோர்த்து நிற்கின்றார்கள்.
கேள்வி - மலையக மக்களுக்கு எதுவும் கூற விரும்புகின்றீர்களா?
பதில் - பொய் வதந்திகளை நம்பாதீர்கள். கட்டுபாடாக ஒற்றுமையாக இருந்தால் நம்ம சமூகம் ஏனைய சமூகத்துடன் சரிசமமாக வாழலாம் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.
கேள்வி - சில இடங்களில் மாடிவீடு திட்டம் வேண்டாம் என்று கூறுகின்றார்கள்.
பதில் - மாடிவீடு திட்டத்தை பற்றி சில பேர் அதை சரியாக புரிந்து கொள்ளாததால் இதை பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. உதாரணமாக அரசியல்வாதிகள் மாடிவீட்டில் இருக்கலாம். ஒரு தோட்ட தொழிலாளி மாடிவீட்டில் இருக்க கூடாதா? மாடிவீடு என்பது கீழ் பகுதியில் வரவேற்பறை, சமயலறை, மலசலகூடம் மேல் மாடியில் இரண்டு படுக்கையறைகள் இதுவே அதில் அடங்கும்.
கேள்வி - எதிர்கட்சி தமிழ் உறுப்பினர்கள் இதை மாடி லயம் என வர்ணித்துள்ளார்கள் இது சம்மந்தமாக நீங்கள் எதுவும் தெரிவிக்க விரும்பிகின்றீர்களா?
பதில் - அவர்கள் எப்படி வேணாலும் வர்ணிக்கட்டும். (ஆகாதா பொண்டாட்டியின் கை பட்டா கூத்தம் தான்;, கால் கூத்தம் தான்)
கேள்வி - மக்களுக்கு காணி உரிமை உறுதியாக கிடைக்குமா?
பதில் - நிச்சயமாக கிடைக்கும்.
கேள்வி - கடந்த ஜனாதிபதி தேர்தலை விட இம்முறை ஜனாதிபதி தேர்தல் கடும் போட்டியாக இருக்கின்றதா?
பதில் - ஊடகங்கள் சொல்லுவதை தான் கேட்கின்றோம். எங்களுக்கு தெரியவில்லை.
கேள்வி - மலையகத்தில் பொருத்தவரையில்?
பதில் - மலையகத்தை பொருத்தவரையில் மக்கள் தெளிவாகவுள்ளனர்.
கேள்வி - வடக்கு இந்தியாவம்சாவளி மக்கள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்?
பதில் - வடக்கு இந்தியாவம்சாவளி மக்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனே இருக்கின்றனர்.
கேள்வி - இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் உதயா அவர்கள் எதிரணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரியவருகின்றது. இதை பற்றி உங்களுக்கு தெரியுமா?
பதில் - நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரியும். முழுமையாக தகவல் கிடைக்கும் வரை இதை பற்றி தற்போது எனக்கு கூற முடியாது.
கேள்வி - மலையக மக்கள் முன்னணியின் பிளவு குறித்து எதுவும் கூற விரும்புகின்றீர்களா?
பதில் - அதை நீங்கள் அவர்களிடம் தான் கேட்கனும்.
கேள்வி - மலையக மக்கள் முன்னணியின் பிளவு குறித்து எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலையீடு இல்லையா?
பதில் - மற்றவர்களின் வீட்டிற்கு செல்வதில்லை. எங்களின் சமூகத்தையும் வீட்டையும் பார்ப்பதே எங்களின் நோக்கம்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaho2.html
Geen opmerkingen:
Een reactie posten