[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 02:15.38 PM GMT ]
பொது எதிர்க்கட்சியினர் சர்வதேச சதித்திட்டகாரர்கள் என அரசாங்கத்தின் பேச்சாளர்கள் குற்றம் சுமத்தி வருவது குறித்து ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச சதித்திட்டம் ஒன்று இருப்பதாக நினைத்து கொள்வோம். அப்படியான அந்த சதித்திட்டத்தின் இலங்கையில் இருக்கும் முகவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.
அவர்தான் சந்தோஷமாக நல்ல நேரம் பார்த்து ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும் அறிவிப்பில் கையெழுத்திட்டார்.
ஜனாதிபதியே மக்கள் முன் வந்து இதே ஜனாதிபதித் தேர்தல் ஒன்று வரப் போகிறது என்று கூறினார். இல்லை என்றால், ஜனாதிபதித் தேர்தலை நடத்த இன்னும் இரண்டு வருடங்கள் எஞ்சியிருக்கிறது.
தற்போது பேசும் இந்த சர்வதேச சதித்திட்டம் அப்போது ஜனாதிபதிக்கு தெரியவில்லையா?
ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் ஜனாதிபதித் தேர்தலை கோரியதா?. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கோரினரா?. அல்லது புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதித் தேர்தலை கோரினார்களா?
நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ளாது நம்பிக்கையான ஒருவருக்கு நாட்டை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி கூறுகிறார்.
அவர் கூறுவது போன்று நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கப்படுகிறது என்றால், அவர்தான் நம்பிக்கையை மீறியுள்ளார்.
தனக்கு அதிகாரத்தை பெறுவதற்காகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்துகிறார். இந்த தேவைக்காகவே சர்வதேச சதித்திட்டம் பற்றி பேசி வருகிறார் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajr6.html
இலங்கையின் அபிவிருத்தியை சோஷலிசம் என்றால் அது பெரிய நகைச்சுவை: சம்பிக்க
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 03:07.53 PM GMT ]
இலங்கையில் மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்திகள் ஒரு தரப்பினருக்கு மாத்திரமே நன்மையை தருகின்றன. இதனை சோஷலிசம் என்று கூறினால், அது பெரிய நகைச்சுவையாகவே இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்துரைத்த அவர்,
இலங்கையி;ல் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள், தரம் மற்றும் செலவு என்ற அடிப்படையில் பார்க்கும் போது பொருளாதாரத்துக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த திட்டங்கள், நாட்டின் நலனை நோக்கி முன்னெடுக்கப்படவில்லை. புத்தளம் அனல் மின்சார நிலையம் மற்றும் அதிவேக பாதைகள் என்பன பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களால் முன்னெடுக்கப்படுகின்றன.
இதில், வெளிநாட்டு பணியாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் வறுமையான மக்களுக்கு நன்மைகள் கிடைக்கவில்லை என்றும் ரணவக்க குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszCRVKajsy.html
இலங்கையின் நீதித்துறையில் பிந்திய வியக்க வைத்த செயல்
[ ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2014, 02:48.49 PM GMT ]
ஹைகோப் நிறுவனத்தின் மூலம் இலங்கையின் இராணுவ தளபாட கொள்வனவில் ஊழல் தொடர்பாக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன நீதிமன்றத்தினால் கடந்த வாரம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமையானது இலங்கையின் நீதித்துறையில் அரசியல் செல்வாக்கின் தாக்கத்தை தெளிவாக காட்டியுள்ளது.
எனினும் இந்த பிணை அனுமதியானது, இலங்கையின் தேர்தல் களத்தில் சரத் பொன்சேகா ஆதரவளிக்கும் மைத்திரிபாலவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது
இது அரசாங்கத்துக்கு தெரியாமல் இல்லை. எனினும் கேகாலை மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் பொறுப்புக்களில் இருந்து விலகி ஆளும் கட்சியில் சேர்ந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹசான் திலகரட்னவை திருப்திப்படுத்துவதற்காகவே தனுன பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார.
தனுன திலகரட்ன, சரத் பொன்சேகாவின் மருமகனாவார். ஹசான் திலகரட்னவின் ஒன்றுவிட்ட சகோதரராவார்.
எனினும் தனுன திலகரட்ன, தற்போது சரத் பொன்சேகாவுடன் நிரந்தர பகையை கொண்டுள்ளார்.
எனவே அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே தனுனவின் பிணை அமைந்துள்ளது.
என்றாலும் அது அரசியலில் சரத்பொன்சேகா ஆதரவளிக்கும் மைத்திரிபாலவுக்கு சாதகமான நிலையை தோற்றுவித்துள்ளது.
தனுன திலகரட்ன, சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட வேளையில் ஆயுத ஊழல் தொடர்பில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் தேடப்பட்டு வந்தவராவார்.
எனினும் தற்போது அவரின் திடீர் பிரசன்னம், அத்துடன் பிணை அனுமதி என்பன இலங்கையின் நீதித்துறையில் பிந்திய வியக்க வைக்கும் செயலாக அமைந்துள்ளன.
தொடர்புடைய செய்தி- சரத் பொன்சேகாவின் மருமகன் தானுன திலகரட்ன பிணையில் விடுதலை
http://www.tamilwin.com/show-RUmszCRVKajr7.html
Geen opmerkingen:
Een reactie posten