தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 december 2014

அரச ஊடகங்கள் தொடர்பில் தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்: ஐ.தே.க கோரிக்கை

ஹக்கீமை தொடர்ந்தும் அரசாங்கத்துடன் வைத்திருக்கும் முயற்சியில் வெற்றி
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 04:28.27 PM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை தொடர்ந்தும் அரசாங்கத்துடன் வைத்திருப்பதில் அரசாங்கம் தற்காலிக வெற்றியை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹக்கீம், ஜனாதிபதி மஹி;ந்த ராஜபக்சவை சந்தித்து ஒருநாள் கழிந்த நிலையில் அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட்ட முக்கிய உறுப்பினர்கள் ஹக்கீமை சந்தித்துள்ளனர்.
இதில் ஜனாதிபதியின் ஆலோசகரும் ஹக்கீமின் நண்பருமான ஒருவரும் உள்ளடங்கியிருந்தார்.
குறி;த்த பேச்சுவார்த்தையின் பின்னர், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டில் மென்மைப் போக்கை கடைப்பிடிக்க ஹக்கீம் இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே தம்முடனான பேச்சுவார்த்தையின்போது தம்புள்ளை பள்ளிவாசல் விடயம் உட்பட்ட சர்ச்சைக்குரிய விடயங்களை உரியமுறையில் தீர்ப்பதாக ஜனாதிபதி ஹக்கீமிடம் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை ரவூப் ஹக்கீம் எதிர்வரும் 27ம் திகதியன்று வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
(மேலதிக இணைப்பு) யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து 27ம் திகதி அறிவிக்கப்படும்: மு.காங்கிரஸ்
யாருக்கு ஆதரளிப்பது என்பது குறித்து 27ம் திகதி அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதவரளிப்பது என்பது பற்றி அறிவிக்கப்படும் என கட்சியின் உறுப்பினர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணம் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த கருத்துக்கள் தொடர்பில் ஆராய்ந்து தலைவர் ஹக்கீம் இறுதித் தீர்மானம் எடுப்பார்.
பொதுபல சேனா போன்ற கட்சிகள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தொடங்கியுள்ளமை கட்சியின் நிலைப்பாட்டை மாற்றியமைக்கக் கூடிய வகையில் அமையாது என ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
சிங்கள இணையத்தளமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 http://www.tamilwin.com/show-RUmszCRYKahq3.html
அரச ஊடகங்கள் தொடர்பில் தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்: ஐ.தே.க கோரிக்கை
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 04:54.03 PM GMT ]
இலங்கையின் அரசாங்க ஊடகங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சார்பாக பிரசாரத்தில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளது.
அரசாங்க ஊடகங்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்துவதில் தேர்தல்கள் ஆணையாளர் தோல்வி கண்டுள்ளார்.
எனவே தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டியது அவசியம் என்று அந்தக்கட்சி கேட்டுள்ளது.
நடைமுறை ஜனாதிபதி தேர்தல் நடைமுறைகளை தொடர்ந்தும் மீறிவருகின்றமை வியப்பை அளிக்கிறது.
மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டைக்கூட நேற்று அரசாங்க ஊடகம் நேரடி ஒளிபரப்பு செய்தது அத்துடன் தனியார் ஊடகங்களும் அதனை ஒளிப்பரப்பின.
அதேநேரம், இந்த ஒளிபரப்பின் பின்னர் பல பாடல்கள் கட்டணம் செலுத்தப்படாமலேயே ஒளிபரப்பப்பட்டன என்று ஐக்கிய தேசியக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் மைத்திரிபால சிறிசேனவின் பழைய உரைகள் அடங்கிய விளம்பரங்கள் ஒளிபரப்பாவதை தேர்தல்கள் ஆணையாளர் தடை செய்திருந்தார்.
எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நேரடி ஒளிபரப்புக்களை தடுப்பதில் தேர்தல்கள் ஆணையாளர் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahq5.html

Geen opmerkingen:

Een reactie posten