கிளிநொச்சியில் வெள்ளத்தால் 2000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு! சி.சிறீதரன் எம்.பி நேரில் சென்று பார்வை
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 02:44.48 PM GMT ]
தற்பொழுது நாடு முழுதும் பெய்துவரும் கடுமையான மழை காரணமாக ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தால் ஏராளம் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பள்ளிகள் கோயில்கள் பொதுநோக்கு மண்டபங்களில் தஙகியுள்ளன.
கிளிநொச்சியிலும் பெய்துவரும் மழைகாரணமாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டு பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ள நிலையில் இவர்களை இன்று பா.உறுப்பினர் சி.சிறீதரன் நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளை கேட்டறிந்துள்ளார்.
அத்துடன் இவர்களுக்கான நிவாரண ஏற்பாடுகள் தொடர்பாக பல்வேறு உதவும் தரப்புக்களோடு தொடர்களை மேற்கொண்டு உதவிகளுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
கிளிநொச்சியில் பெய்துள்ள பெருமழை காரணமாக பெருங்குளங்களின் வான்பாயும் பரப்புக்களை அண்டியுள்ள பெரும்பாலான குடும்பங்களும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வாழும் குடும்பங்களும் மற்றும் சீரற்ற வீட்டு வசதிகளை கொண்டுள்ள குடும்பங்களுமென இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ளனர்.
பா.உறுப்பினர் சி.சிறீதரன் இன்று பார்வையிட்டுள்ளார்.
கிளிநொச்சி பன்னங்கண்டி இந்து த.க.வித்தியாலத்தில் தங்கியுள்ள 48 குடும்பங்களை சேர்ந்த 103 பேரும், கிளிநொச்சி பரந்தன் புனித அந்தோனியார் வித்தியாலயத்தில் தங்கியுள்ள 34 குடும்பங்களை சேர்ந்த 108 பேரும், கிளி புளியம்பொக்கணை நாகேந்திரபுரம் அ.த.க.பாடசாலையில் தங்கியுள்ள 124 குடும்பங்களை சேர்ந்த 446 பேரும், கிளி கலவெட்டித்திடல் நாகேஸ்வரா வித்தியாலயத்தில் தங்கியுள்ள 84 குடும்பங்களை சேர்ந்த 191 பேரும், கிளி தர்மபுரம் நெசவு நிலையத்தில் 31 குடும்பங்களை சேர்ந்த 103 பேரும்,
கிளி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் 13 குடும்பங்களை சேர்ந்த 139 பேரும் கிளி முரசுமோட்டை அ.த.க.பாடசாலையில் 20 குடும்பங்களை சேர்ந்த 75 பேரும் பரந்தன் சிவபுரம் இராகுலன் முள்பள்ளியில் 46 குடும்பங்களை சேர்ந்த 122 பேரும் கிளி கண்டாவளை மகா வித்தியாலயத்தில் 92 குடும்பங்களை சேர்ந்த 280 பேரும் உமையாள்புரம் பொதுநோக்கு மண்டபத்தில் 18 குடும்பங்களை சேர்ந்த 42 பேரும் தங்கியுள்ள நிலையில் இவர்களை பா.உறுப்பினர் சி.சிறீதரன் இன்று பார்வையிட்டுள்ளார்.
மேலும் கனகராயன் ஆற்று ஓரங்களில் வசிக்கும் கண்டாவளையின் மேலும் பல குடும்பங்கள் இடப்பெயர்வை சந்தித்துள்ளனர்.
அத்துடன் கிளிநொச்சி ஆனைவிழுந்தான் அக்கராயன் முட்கொம்பன் ஸ்கந்தபுரம் கண்ணகைபுரம் பொன்னகர் கனகாம்பிகைகுளம் உள்ளிட்ட கரைச்சி கண்டாவளை பூநகரி பளை என பிரதேச செயலர் பிரிவுகளில் வெள்ள அனர்த்தம் காரணமாக மக்கள் தம் வீடுகளை விட்டு வெளியேறி பாதிப்புற்றுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பா.உறுப்பினர் சி.சிறீதரனோடு வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் நகுலேஸ்வரன், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் தவபாலன், கட்சி செயற்பாட்டாளர் ராசன் உட்பட கட்சி செயற்பாட்டாளர்களும் சென்றிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahqz.html
இ.போ.சபை ஊழியரின் தபால் மூல வாக்குச் சீட்டு திருட்டு
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 03:32.35 PM GMT ]
இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர் ஒருவரின் தபால் மூல வாக்கு, வேறு ஒருவரினால் சட்ட ரீதியற்ற முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர் ஒருவரின் தபால் மூல வாக்குச் சீட்டே இவ்வாறு சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவரது வாக்குரிமை மீறப்பட்டமை குறித்து குறித்த ஊழியர், திவுலப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தான் இன்று காலை வாக்களிப்பு நிலையத்துக்கு வந்தபோது திரும்பிச் செல்லுமாறு ஒரு குழு தன்னிடம் வற்புறுத்தியது.
பின்னர் தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவரிடம் தெரிவித்து விட்டு, வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்றபோது, தனது வாக்குச் சீட்டு ஏற்கனவே வேறு ஒருவரினால் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது எனவும் குறித்த டிப்போ ஊழியர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahq1.html
தமிழர்கள் ஒவ்வொரு வாக்கையும் கவனமாக கையாளவேண்டும்- உலக தமிழர் பேரவை
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 03:57.09 PM GMT ]
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலக தமிழர் பேரவை இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
பேரவை இன்று வி;டு;த்துள்ள அறிக்கை ஒன்றில், சுதந்திரத்துக்கு பின்னர் தமிழர்கள், பெரும்பான்மை தேர்தல் முறையினால் தமது உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழ் மக்கள் நடைமுறை தேர்தல் முறையின் கீழ் தமது ஜனநாயக உரிமைகளை காக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் சிவில் சமூக அமைப்பும் இதனையொத்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசினால் சிங்களவர்களின் வாக்குகளை இழந்து விடலாம் என்று வேட்பாளர்கள் எண்ணும் போது எவ்வாறு அவர்கள் பதவிக்கு வரும் போது தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பார்கள் என்று தமிழ் சிவில் சமூகம் கேள்வி எழுப்பியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRYKahq2.html
Geen opmerkingen:
Een reactie posten