தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 december 2014

மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை: தொண்டமான்

சீரற்ற காலநிலை காரணமாக 21,000 குடும்பங்கள் பாதிப்பு
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 06:36.49 AM GMT ]
நாட்டில் ஏற்பட்டிருக்கும் நீரற்ற காலநிலை காரணமாக 21,894 குடும்பங்களின் 77,032 பேர் பாதிக்கப்பட்டளளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
அவர்களை 298 பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதே வேளை மேலும் 574,727 பேர் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaix0.html

பாலாவி காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம்! பொலிஸாரால் முற்றுகை
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 07:09.35 AM GMT ]
கொடிகாமம், பாலாவி காட்டுப்பகுதியில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் திடீரெனச் சுற்றிவளைக்கப்பட்டு முற்றுகையிடப்பட்டதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலாவி காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்வது தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம். சிந்தக்க பண்டாரவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று குறித்த இடத்திற்குச் பொலிஸார் சென்றுள்ளனர்.
குறித்த இடத்திற்கு இரண்டு குழுக்களாக சென்றதாக தெரிவித்த பொலிஸார், பாலாவி மயானத்தை அண்டிய இடமொன்றில் பற்றை மறைவில் நெருப்புப் புகைமூட்டம் காணப்பட்டது.
குறித்த அடையாளத்தை வைத்து அங்கு சுற்றி வளைத்ததாக குறிப்பிட்டனர்.
இதனையடுத்து, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட கச்சாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் மூவர் தலைமறைவாகிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கசிப்புக் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களும்,21 லீற்றர் ஸ்பிரிட், 180 லீற்றர் கோடா, 2 கிலோ ஈஸ்ட் ஆகியவற்றைக் கைப்பற்றியதாக குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaix1.html
மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை: தொண்டமான்
[ புதன்கிழமை, 24 டிசெம்பர் 2014, 07:14.44 AM GMT ]
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என கால்நடை வள மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளோம். இந்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் கிடையாது.
மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை. ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிபதி மஹிந்தராஜபக்சவிற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பூரண ஆதரவினை வழங்கும் என அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கணபதி கனகராஜ், எஸ்.பிலிப் உள்ளிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்க போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை: தொண்டமான்
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தாம் ஆதரிக்க போவதாக பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையுமில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இலங்கையில் தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவு வழங்குமாறு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தமது கட்சியிடம் கோரிக்கை விடுத்த போதிலும் தாம் அதனை நிராகரித்ததாகவும் தொண்டமான் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான இன்றைய அரசாங்கம் மலையகத்தில் துரித அபிவிருத்தியை மேற்கொண்டுள்ளது. தோட்டத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாகுறை, உட்பட இளைஞர், யுவதிகளின் வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களின் வீடு மற்றும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் முடிந்தால், நுவரெலியா மாவட்டத்தில் வெற்றியீட்டி காட்டட்டும்.
இந்த சவால் ஜனவரி 9 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் மூலம் காட்டப்படும். முழுத் தோட்டத் தொழிலாளர் சமூகமும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCRYKaix2.html

Geen opmerkingen:

Een reactie posten