தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 december 2014

ஜனாதிபதித் தேர்தலில் நான்தான் வெற்றி பெறுவேன்- மைத்திரிபாலவின் ஏறாவூர் அலுவலகம் எரிப்பு!



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெறப்போவது ஆய்வறிக்கைகளில் இருந்து தெளிவாகத் தெரிவதாக புதிய ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
தற்போதைய அரசாங்கம் தோல்வியை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று தெஹிவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபாலவின் ஏறாவூர் அலுவலகம் எரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் அமைக்கப்பட்டிருந்த எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அலுவலகம் எரிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் வந்த சில ஆயுதம் தரித்த கும்பலொன்று இந்த அலுவலகத்தின் மீது பெற்றோல் குண்டு வீசி, அடித்து உடைத்து எரித்ததாக அலுவலகத்தில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாக்குதல் மேற்கொண்டவர்கள் 2 துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் சகிதம் வந்தனர் என பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது. சம்பவ நேரம் அலுவலகத்தில் 11 பேர் இருந்தனர் எனவும் அவர்கள் துப்பாக்கிகளுடன் வந்ததால் தாங்கள் தப்பித்து ஓடினர் எனவும் அலுவலகத்தில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahs2.html

Geen opmerkingen:

Een reactie posten