தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 december 2014

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!



மஹிந்தவுக்கு எதிராக வழக்கு! வாபஸ் பெற மறுக்கும் இராணுவ வீரர்
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 07:22.38 AM GMT ]
கடந்த கால யுத்தத்தில் ஊனமுற்ற இராணுவ வீரர் ஒருவர் சில காலங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இது பற்றி தெரியவருவதாவது, யுத்தத்தில் ஊனமுற்ற இராணுவத்தினருக்கு அவர்கள் ஓய்வு பெறும்வரை மாதாந்த சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் இராணுவ தலைமை கட்டளை தளபதி என்ற காரணத்தாலுமே ஜனாதிபதிக்கு எதிராக இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை வாபஸ்பெற வற்புறுத்திய போதும் மனுதாரர் மறுத்துவிட்டதாக தெரியவருகின்றது. இதனால் இவ் வழக்கு இழுபறி நிலையில் உள்ளது.
இதேவேளை போரில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுமென்று அரசு அறிவித்த போதும் அப்படி எதுவும் செய்யப்படவில்லை என்று தெரிய வருகின்றது.
இராணுவத்தின் சாதனையை காட்டி வாக்குகளை பெற்ற ஜனாதிபதி,தமக்கு அநீதி இழைப்பதாக போரில் பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkw0.html

யாழில் காற்பந்தாட்ட தொழில்நுட்ப பயிற்சி நிலையம் திறந்து வைப்பு!
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 06:56.22 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த யாழ் காற்பந்தாட்ட தொழில்நுட்ப பயிற்சி நிலையம் மற்றும் மைதானம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
இதற்கான நிதியுதவி சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது. செலவிடப்பட்ட தொகை 100 மில்லியன் ரூபாவாகும்.
யாழ்ப்பாணம் அரியாலையில் அமைந்துள்ள இந்த மைதானத்தினை சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் ஜோசவ் செப் பிளட்டர் அவர்கள் உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.
வடமாகாணத்தில் காற்பந்து விளையாட்டினை ஊக்குவிக்கும் நோக்கில் சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் மற்றும் ஜேர்மன் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இந்த அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் றஞ்சித் ரொட்ரிக்கோ, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்த அளுத்கமேக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கைக்கான ஜேர்மன் உயர்ஸ்தானிகர் ஜுர்ஜன் மொர்ஹாட்டி, மற்றும் மாகாண அமைச்சர்கள் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkwz.html
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!
[ புதன்கிழமை, 03 டிசெம்பர் 2014, 06:43.16 AM GMT ]
முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு பகுதியில் இராணுவத்தினரால் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப் பகுதியில் துப்பாக்கிகள் இரண்டும், துப்பாக்கி ரவைகளும், விமானத்தைத் தாக்கியழிக்கும் ஏவுகணைகள் இரண்டும், மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த பகுதியில் நேற்று நடத்திய தேடுதலின்போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினர் நடாத்திய தேடுதலின் போது ஆறு மிதிவெடிகளும் அடையாளம் காணப்படாத எண்ணெய்த் தாங்கிகள் ஒன்பதும் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszCTXKZkwy.html

Geen opmerkingen:

Een reactie posten