தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 december 2014

சிங்கள சமூகத்திடம் மன்னிப்பு கோருகின்றேன்: அஸ்வர்

பதுளையில் மண்சரிவு - ஐவர் பலி! 14 பேர் மாயம்
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 04:32.54 AM GMT ]
பதுளையில் இடம்பெற்ற இருவேறு மண்சரிவுகளில் இருவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை, அங்தெனிய மற்றும் அதையண்டிய பிரதேசங்களில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவுகளில் 07 பேரைக் காணவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பதுளையில் இடம்பெற்ற இருவேறு மண்சரிவு சம்பவங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பிறிதொரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண் சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 க உயர்வு! 14 பேரைக் காணவில்லை
பதுளை ரில்பொல என்னும் இடத்தில் ஏற்பட்ட மண் சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 14 பேரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஐந்து பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது. வீடுகளின் மீது பாரியளவில் மண் சரிந்து வீழ்ந்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, மண் சரிவில் சிக்குண்ட பெண் தாதியொருவர் தம்மை காப்பாற்றுமாறு வெளியில் இருப்பவர்களுக்கு தொலைபேசி மூலம் அடிக்கடி அழைப்பினை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பதுளை வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் தாதி ஒருவரே இவ்வாறு உதவி கோரி வருகின்றார்.
இராணுவத்தினரும் மீட்புப் பணியில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszCRaKahx7.html
சிங்கள சமூகத்திடம் மன்னிப்பு கோருகின்றேன்: அஸ்வர்
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 04:04.58 AM GMT ]
பெரும்பான்மை சிங்கள சமூகத்திடம் மன்னிப்பு கோருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஊடக விவகார ஆலோசகருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
தேசிய பட்டியல் ஆசனத்தைப் பெற்றுக் கொண்டு ஆளும் கட்சியிலிருந்து எதிர் கட்சியில் இணைந்து கொண்ட அமீர் அலியின் நடவடிக்கை வெட்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய துரோக செயலை அமீர் அலி மற்றும் ரிசாட் பதியுதின் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு விஷயங்களை மேற்கொண்டு சகல வரப்பிரசாதங்களையும் அனுபவித்து இறுதியில் கட்சி தாவுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
நன்றி மறந்து இவ்வாறு இறுதித் தருணத்தில் கட்சித் தாவுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. முஸ்லிம் சமூகத்தவன் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட சிங்கள மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.
இஸ்லாமிய மதத்தின் அடிப்படையில் இவ்வாறான துரோகிகளுக்கு அல்லா தண்டனை விதிப்பார்.
வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளாது கட்சி தாவியிருக்க வேண்டுமென அஸ்வர் தெரிவித்துள்ளார்.
அஸ்வரின் தேசிய பட்டியல் ஆசனமே அமீர் அலிக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRaKahx5.html

Geen opmerkingen:

Een reactie posten