[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 02:27.36 AM GMT ]
இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை மூலம் நியாயம் வழங்கப்பட வேண்டுமென பிரித்தானிய தமிழ்ர் பேரவை பல்வேறு தளங்களில் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமாக இந்திய அரசின் அமைச்சர்களையும் பாரதீய ஜனதா கட்சியின் பிரமுகர்களையும் அண்மையில் பிரித்தானிய தமிழர் பேரவையின் பிரமுகர்கள் டெல்லியில் சந்தித்தார்கள்.
அந்த சந்திப்பின் போது இந்திய அமைச்சர் பொன். ராதாகிருஸ்ணன் அவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இந்த காணொலியில் காணலாம்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKahxy.html
போர்க்குற்ற விசாரணைகள் குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை: அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 03:10.19 AM GMT ]
சர்வதேச ரீதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நடத்தப்பட்டு வரும் போர்க் குற்றச் செயல் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையிடம் அண்மையில் கோரியிருந்தார்.
சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டியது அவசியமானது என அவர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
எனினும் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.
உள்நாட்டு ரீதியில் விசாரணை நடத்தப்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் எனவும் சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை எனவும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதி இலங்கை தொடர்பான சர்வதேச நிபுணர் குழுவின் அறிக்கை மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்கத்கது.
விசாரணைகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் அறிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRaKahxz.html
13வது திருத்தம் தொடர்பில் மைத்திரியின் நிலைப்பாடு என்ன?- வெளியிட கோருகிறார் வீரவன்ச
[ வெள்ளிக்கிழமை, 26 டிசெம்பர் 2014, 03:44.47 AM GMT ]
மேலும் வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படுமா? இல்லையா? 13வது திருத்தத்தில் உள்ளடங்காத எல்லை மீறிய அதிகாரம் கொண்டு வரப்படுமா? இல்லையா? என்பதற்கான பதிலையும் உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தநிலையில், ரணில் – மைத்திரி ஒப்பந்தம் உண்மையாகும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளருக்கே விரைவில் ஆதரவு வழங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்;
ரணில் – மைத்திரிக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டதாக அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவினால் வெளியிடப்பட்ட ஒப்பந்தம் போலியானது என கூறுகின்றனர். எனினும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பம் உண்மையானதா என்பதனை பொலிஸாரே தீர்மானிப்பர்.
குறித்த ஒப்பந்தம் போலியானது எனில் அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட கூற்றுக்களை நிறைவேற்றுவதா? இல்லையா? என்பதனை பொது வேட்பாளரோ அல்லது வேறு எவருமோ நாட்டுக்கு கூறவில்லை. மேற்குறித்த கேள்வியிலிருந்து தப்பித்து கொள்ளவே எதிரணியினர் முயற்சி செய்கின்றனர்.
எனவே வடக்கிலிருந்து இராணுவம் குறைக்கப்படுமா? இல்லையா? அதி பாதுகாப்பு வலயத்தில் மீள் குடியேற்றம் செய்யப்படுமா? இல்லையா? அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் பலப்படுத்தப்படுமா? இல்லையா? என்ற கேள்விகளுக்கு எவரும் பதில் கூறுவதாக தெரியவில்லை.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஐக்கியம் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் எந்தவொரு நிலைப்பாட்டினையும் கூறவில்லை.
இதற்கு பதிலாக இரகசிய ஒப்பந்தத்தின் ஊடாக அவற்றினை உள்ளடக்கியுள்ளனர். இந்த ஒப்பந்தத்தினை வெளியிட்டால் பெரும்பான்மையினரின் வாக்கு கிடைக்கப் பெறாமல் போய்விடும் என்ற அச்சமே அதன் காரணமாகும்.
எனவே தமிழ் வாக்குகளை மையமாக கொண்டு இந்த இரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே இது தொடர்பிலான உண்மையான ஒப்பந்தம் வெளியிடப்பட வேண்டும். எவ்வாறாயினும் ஒப்பந்தத்திற்கு அமைவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் பொது வேட்பாளர் சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எதிரணியின் பொது வேட்பாளருக்கு சவால் விடுக்கிறோம். ரணில் - மைத்திரி ஒப்பந்தம் போலியானது எனில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது நிலைப்பாட்டினை உடனடியாக வெளியிட வேண்டும்.
மேலும் வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படுமா? அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் இல்லாத எல்லை மீறிய அதிகாரம் கொண்டு வரப்படுமா ? என்பது தொடர்பிலான தனது நிலைப்பாட்டை மைத்திரிபால சிறிசேன தெளிவுபடுத்த வேண்டும்.
எனவே எதிரணியின் செயற்பாடுகள் அனைத்தும் வாக்குகளை இலக்கு வைத்து மக்களது கண்களில் மண்ணை தூவும் செயலாகும்.
இதேவேளை பொது வேட்பாளரின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய கருத்து கணிப்பு நடத்தப்பட போவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை பொது வேட்பாளர் நீக்க போவதில்லை. ஜனாதிபதி முறைமை நீக்குவதாயின் நாட்டில் கருத்து கணிப்பு நடத்தப்பட வேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmszCRaKahx2.html
Geen opmerkingen:
Een reactie posten