தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 december 2014

கோட்டபாயவுக்கு டோஸ் கொடுத்துள்ளார் இந்திய பாதுகாப்பு செயலாளர் அஜித் குமார் டோவல் !

'சமுத்திர நலனுக்கான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைவின் முக்கியத்துவம' எனும் தொனிப்பொருளில் காலி, லைட் ஹவுஸ் ஹோட்டலில் 'காலி பேச்சுவார்த்தை 2014' எனும் சர்வதேச கடற் பாதுகாப்பு மாநாடு, நேற்று முன் தினம் திங்கட்கிழமை (01.12.14) காலை ஆரம்பமானது. இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தலைமை உரையாற்றியுள்ளார் இந்திய பாதுகாப்பு செயலாளர் அஜித் குமார் டோவல். இக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் மரியாதை நிமிர்த்தம் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இதில் தமது கடல் பிராந்தியத்தை பாதுகாக்க இந்தியா உதவவேண்டும் என்று கோட்டபாய திடீர் என ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆனால் கதை வேறுமாதிரியாக திரும்பியுள்ளது. இவர்கள் பேசிக்கொண்டு இருக்கையிலேயே சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல் தொடர்பான விடையங்கள் பேச்சும் ஆரம்பமாகிவிட்டது.
சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல் எரிபொருள் நிரப்பவும், நல்லெண்ண அடிப்படையிலும் தான் இலங்கை வருவதாக கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தெரிவித்த கருத்தை ஏற்க மறுத்துவிட்டார் இந்திய பாதுகாப்பு துறை செயலாளர் என்று அறியப்படுகிறது. இப்பேச்சுவார்த்தைகளின் போது உடன் இருந்த இந்திய அதிகாரி ஒருவரே மேற்கண்ட செய்திகளை தெரிவித்துள்ளார். காரசாரமான விவாதம் இடம்பெற்றதாகவும், கோட்டபாய ராஜபக்ஷவின் முகம் கடுமையாக மாறியதை தான் அவதானித்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் சென்றுவரும் விடையத்தை இந்தியா அவ்வளவு சுலபமாக விட்டுவிடாது அல்லவா ?
http://www.athirvu.com/newsdetail/1561.html

Geen opmerkingen:

Een reactie posten