தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 2 december 2014

LTTE- TROவினது சொத்துக்களை ஏலம் விடும் அரசாங்கம் பிரபாகரனின் சொத்துக்கள் என பிரச்சாரம்:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான 200 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை, ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானித்துள்ளது என தெற்கின் ஊடகங்கள அரசாங்கத்தின் செய்திகளை வெளியிட்டுள்ளன. இதனை தமிழ் ஊடகங்களும் அப்படியே பிரதி பண்ணி வெளியிட்டன. உண்மையில் இது யாருடைய சொத்து.
வெள்ளவத்தையில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டிடமொன்று, ஆடைத் தொழிற்சாலையொன்று, கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு முன்னால் அமைந்துள்ள பாரிய காணியொன்று, ட்ரோலர் ரக படகுகள் உட்பட சில படகுகள், என அடையாளப்படுத்தப்பட்டவை புலிகள் அமைப்பிற்கு சொந்தமானவை. இவை புலிகளின் ஆதரவாளர்களது பெயரில் வாங்கப்பட்டவை. அவற்றில் எந்த பதிவிலும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரோ அவரது குடும்ப அங்கத்தவர்களது பெயரோ இல்லை.
மற்றும் கொழும்பு உள்ள அச்சகம் யசீகரன் - மற்றும் திஸநாயகம் கைது செய்யப்பட்ட போது கைப்பற்றப்பட்ட யந்திரங்கள். அதிலும் அந்தக் கட்டடம் அவர்களால் வாடகைக்கு எடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அச்சகம் புலிகள் அமைப்பின் ஆதரவில் வெளிவந்த பத்திரிகைகளுக்குரிய அச்சகம். அவற்றிலும் பிரபாகரன் பெயரோ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர்கள் பெயரோ இல்லை.
இதேவேளை கொழும்பிலுள்ள முன்னணி வெளிநாட்டு வங்கியொன்றின் கணக்கிலிருந்த 5 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் சமாதான காலத்தில் சுனாமி நிதியத்திற்கு கிடைக்கப்பெற்ற பணம் TRO என்ற அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கணக்கு. அதுபோல் மற்றும் தேசிய வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டுள்ள மூன்று கோடியே 50 இலட்சம் ரூபாய் பணமும் சமாதான காலத்தில் சட்டரீதியாக புலிகளின் அமைப்பு உப அமைப்புகளின் பேரில் உருவாக்கப்பட்டவை. இவை இப்படி இருக்க புலிகள் அமைப்பின் தலைவரது சொத்துக்கள் 200 கோடி என அரசாங்கம் உருவாக்கிய செய்தியை தமிழ் ஊடகங்களும் அப்படியே வெளியிட்டமை தவறு என கொழும்பின் நிதி மற்றும் வங்கி சார்ந்த முக்கியஸ்த்தர் குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten