தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 december 2014

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் கல்வியை அழித்தால் போதும்!: கலையரசன் மா.உ



மாணவர்களுக்கு பரிசில்களும் பாராட்டுக்களும் வழங்கும் போது அவர்கள் மேலும் பல சாதனைகளை படைக்கத் தூண்டும். அதுதான் எமது சமூகத்திற்கு பாரிய வெற்றியாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
நாவிதன்வெளிப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 15 ஆம் கிராமம் உதயதீபம் மேம்பாட்டு அமைப்பு பிரதேசத்தில், சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சாதனை படைத்த மாணவர்களும் அவர்களை வழிநடாத்திய ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்,
ஒரு இனத்தினை முற்றாக அழிக்க வேண்டுமானால் அவ்வினத்தின் கல்வியினை அழித்தால் அவ் இனம் அழிந்ததற்குச் சமனாகும். ஆகையால் தமிழ்ச் சமூகம் முன்னேற வேண்டும். அதற்கு இன்று கல்விதான் முதுகெலும்பாக இருக்கிறது இதனை யாரும் எளிதில் மறந்து விடமுடியாது.
கடந்த கால யுத்த சூழ்நிலையினால் தமிழ்ச் சமூகமே அதிகமாக பாதிக்கப்பட்டது. அதிலும் கல்வியே பெரிதும் இழக்கப்பட்டது. இன்று ஓரளவிற்கு முன்னேற்றம் கண்டுவருவது பாராட்டுக்குரியது. இதற்கெல்லாம் கற்பிக்கும் ஆசிரியர்களினதும் புத்திஜீவிகளினதும் பொது அமைப்புக்களினதும் பங்கு மிகவும் முக்கியமாக இருந்து வருவது பாராட்டிற்குரிய விடயமாகும்.
குறிப்பாக சொல்லப்போனால் இந்த நாவிதன்வெளிப்பிரதேசம் பலவழிகளிலும் பாதிக்கப்பட்ட பிரதேசம். இப்பிரதேசத்தில் கல்விகற்கும் மாணவர்கள் இன்று பெரும் சாதனை படைத்து வருவது எனக்கு பெரும் சந்தோசமாக இருக்கிறது.
இன்று சாதனைகள் படைத்த மாணவர்களை இத்தோடு விட்டுவிடாது. பல்கலைக்கழகம் வரைச் சென்று அதற்கு அப்பாலும் சாதனை படைக்க வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதற்காக நானும் பல உதவிகளைச் செய்ய இருக்கின்றேன்.
ஏன் என்றால் எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் வைத்திய கலாநிதிகளையும் பொறியியலாளர்களையும் சட்டமேதைகளையும் உருவாக்க வேண்டும் அப்போதுதான் நாவிதன்வெளிப்பிரதேசம் சுவீட்சம் நிறைந்ததாக மாற்றமடையும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlx3.html

Geen opmerkingen:

Een reactie posten