தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 1 december 2014

தமிழ் மக்களின் ஆதரவை தேடும் சிங்கள பேரினவாதம்!!



பேஸ்புக்கில் பாராட்டுப் பெற்ற நவீன் - ஆளும் கட்சியிலிருந்து இன்னும் பலர் எதிர்க்கட்சிக்கு இணைந்து கொள்வார்கள்
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 10:24.01 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தமை தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் தனது பேஸ்புக் கணக்கில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழ்த்துக்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மீண்டும் எனது அரசியல் தாய் வீட்டுக்கு வந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
நுவரெலியா மாவட்டத்திற்கு தேவையான வசதிகளை வழங்குமாறு நான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரிடம் விடுத்த கோரிக்கை கவனத்தில் எடுத்து கொள்ளப்படவில்லை என்பதால், நான் மன குழப்பத்தில் இருந்தேன் எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியிலிருந்து இன்னும் பலர் எதிர்க்கட்சிக்கு இணைந்து கொள்வார்கள்: நவீன்
ஆளும் கட்சியிலிருந்து இன்னும் பலர் எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ள உள்ளதாக, அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்து எதிர்க் கட்சியில் இணைந்து கொண்ட நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள ஆயத்தமாகி வருகின்றனர். பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.
வெளிப்படைத்தன்மையுடைய ஜனாதிபதி முறைமை ஒன்று உருவாக்கப்படும். என்னைப் பற்றிய கோவைகள் ஏதேனும் இருந்தால் அதனை 24 மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றேன் என தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlx5.html

வடக்கில் மீன் வளத்தை அள்ளிச் செல்லும் சீன மீனவர்கள்
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 10:46.31 AM GMT ]
சீன மீனவர்கள், இலங்கை மீனவர்கள் போல் வேடமிட்டு வடபகுதி கடலில் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடக்கில் மீனவர்கள் பெருமளவில் மீன்வளத்தை இழந்து வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட வடக்கு, கிழக்கு மீனவர் ஒத்துழைப்பு அமைப்பின் இணைப்பாளர் அன்டனி ஜேசுதாசன்,
இந்திய ட்ரோலர் மற்றும் இந்திய மீனவர்கள் வடக்கில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த காரணத்தினால், கடந்த காலங்களிலும் வடபகுதி மீனவர்கள் தமது கடல் வளத்தை இழந்தனர்.
தற்போது சீன மீன்பிடியாளர்களினால், வடபகுதி மீனவர்கள் தமது மீன்வளத்தை இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சீன மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி உபகரணங்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிநவீன மீன்பிடி உபகரணங்களாகும்.
இந்த மீன்பிடி படகுகளுக்கு அருகில் இலங்கை மீனவர்கள் எவருக்கும் செல்ல முடியாது. அவர்கள் தினமும் பெருந்தொகை மீனை பிடிக்கின்றனர்.
இதனால், வடபகுதி மீனவர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். அத்துடன் இலங்கை மீனவர்கள் போல் வேடமிட்டு சீன மீனவர்கள் இலங்கை கடலில் மீன்பிடிக்க வருகின்றனர்.
இதனால், சீன மீனவர்களை அடையாளம் காணமுடியாது என்பதால், அவர்களை கைது செய்வது தொடர்பான விடயத்தில் கடற்படையினர் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் அன்டனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlx6.html
தமிழ் மக்களின் ஆதரவை தேடும் சிங்கள பேரினவாதம்!!
[ திங்கட்கிழமை, 01 டிசெம்பர் 2014, 10:54.00 AM GMT ]
இன்று இலங்கை அரசாங்கத்தையும் எதிர் அணியையும் சற்று சிந்திக்க வைக்க கூடிய அளவுக்கு தமிழர்களின் வாக்கு பலம் ஒரு பாரிய சக்தியாக மாறியுள்ளதை அனைவரும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
ஆனால் இதில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் இனத்துக்கு எந்தவிதமான தீர்வும் கிடைக்கப் போவதில்லை என்ற உண்மையும் இன்றைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து தெளிவாக விளங்குகின்றது.
இவற்றுக்கு மேலாக இலங்கையில் நடக்கும் குடும்ப ஆட்சிக்கு ஒரு முற்று புள்ளி வைப்பதே இந்த பிளவுகளுக்கு முக்கிய காரணாக அமைகின்றதே தவிர வேறு ஒரு முக்கிய விடயங்களும் இதில் இருப்பதாக தெரியவில்லை.  ஆனால் இன்று தமிழர்களின் ஒற்றுமை ஒரு பாரிய கேள்வி குறியாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது .
தனித் தனியாக கருத்துக்களை தெரிவிக்கும் போது எதோ ஒரு கெட்ட காலம் வருவதற்கான அறிகுறிகளே கூடுதலாக காணப்படுகின்றது .
அது போன்று இன்று அரசாங்கமும் பாரிய பண வலையை வீசிக்கொண்டு இருக்கும் வேளையில் இவர்களின் இந்த ஒற்றுமை அற்ற தன்மையானது சிங்கள பேரினவாதத்துக்கு மேலும் வழி கோலக் கூடும்.
இந்த நேரத்தில் தமிழர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். நடக்கின்ற இந்த ஆட்டத்தில் வெறும் பார்வையாளர்களாகவே மட்டும் இருக்க வேண்டும்.
இந்த ஆட்டம் எமக்கு நடந்த கொடுமைகளுக்கு கடவுள் கொடுத்த ஆட்டமே. இதை நாம் மிகவும் சிறந்த முறையில் அமைதி காப்பவர்களாக இருக்க வேண்டும் .
வீண் வெற்று பேச்சு கருத்துகளால் எமது எதிர்காலமே பாதிக்க கூடிய வாய்ப்புகள் வரக் கூடும்.
அது போன்று ரணில் போன்ற ஒரு அரசியல் தலைவர் கடந்த காலங்களில் எமது தமிழர்களுக்கு செய்த துரோகம் நினைவில் இருக்க வேண்டும்.
அன்றைய அந்த பிளவின் விளைவை நாம் யாவரும் அறிந்துள்ளோம். அது அவரின் திறமை என்று கூட சொல்ல முடியும்.
போராட்டத்தில் எவ்வாறு ஒரு பிளவை ஏற்படுத்தி இன்று எம் இனம் சிதைவடைவதற்கு காரணமக இருந்தாரோ அது போன்று இன்று அரசாங்கத்துக்கு வைத்த ஆப்பு அரசாங்கத்துக்குள்ளே இருந்து ஒரு பொது வேட்பாளர்.
இதை எமது தலைமைகள் சற்று சிந்திக்க வேண்டும். இது போன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்த ரணில் போன்றவர்கள் ஆட்டத்தை தொடங்க கூடும்.
எம் இனம் இனி மேலும் ஏமாறக் கூடது. இன்று அரசியல்வாதிகளை விட மக்கள் சற்று சிந்திக்க வேண்டிய காலம் இது.
பணத்துக்கும் பதவிக்கும் அலையும் அரசியல்வாதிகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம்.
எவன் வந்தாலும் எமக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. எமது விடிவுக்காக எம் மக்கள் பலம் வாக்கு பலத்தை சிந்தித்து செயல் பட வேண்டும் .
எமது வாக்கு பலம் யார் அரசமைப்பது என்று சொல்ல வைக்க வேண்டுமானால் எழுத்து மூலம் எமக்கான தீர்வினை தரக் கூடிய ஒருவருக்கு செல்வதே சிறந்து.
கடந்த கால அரசியல்வாதிகளால் இது வரைக்கும் தீர்வினை தர முடியாதவர்கள் இனியும் தருவார்கள் என்று நம்பினால் அது முட்டாள் தனமானது.
இன்று ஒரு தேரர் தமிழர்களுக்கு தீர்வினை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் கடந்த காலங்களில் அரசாங்கத்துக்குள் இருக்கும் போது வராத இந்த ஒரு அக்கறை இப்போது அவருக்கு வந்துள்ளது .
இதில் ஒன்று தெளிவாக விளங்குகின்றது இன்று ஆட்சி அமைக்க வேண்டுமானால் தமிழர்களின் வாக்கு மிக முக்கியம் என்பதை சிங்கள பேரினவாதம் புரிந்துள்ளது.
இவற்றுக்கு சோரம் போகும் சில தமிழ் அரசியல்வாதிகள் இதுவரைக்கும் செய்த துரோகங்களுக்கு நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதை சிறந்த முறையில் கையாள வேண்டும்.
எது எவ்வரானாலும் தமிழன் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்பதை சிங்கள பேரினவாதத்துக்கு எடுத்து சொல் தமிழா!

எஸ் .கே
http://www.tamilwin.com/show-RUmszCTVKZlx7.html

Geen opmerkingen:

Een reactie posten