மகிந்தவின் இரகசிய கோப்புகள் தயாரானது! சம்பிக்க
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக்கூறியுள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகுகின்றவர்களின் இரகசிய கோப்புகளை கொண்டிருப்பதாகவும், எனினும் அதனை அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப் போவதில்லை என்றும் ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் வழங்கும் வகையிலேயே அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைக் கூறியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/88467.html
இலங்கை, இந்தியா உயர்ஸ்தானிகராலயம் முறுகல் நிலையில்…
இதற்கான உடன்படிக்கை இந்திய பிரதமருக்கும், சிறிலங்காவின் ஜனாதிபதிக்கும் இடையில் நேரடியாக இடம்பெற்றுள்ளது. அத்துடன் மகிந்தராஜபக்ஷவே நரேந்திரமோடியை தொடர்பு கொண்டு குறித்த மீனவர்களை விடுவிப்பதாக கூறி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சட்டரீதியாக குறித்த மீனவர்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகரகம் இறுதியில் அவமானப்படும் வகையில், அதன் மேன்முறையீட்டு மனுவை மீளப்பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
இதுஇவ்வாறிருக்க, வடமாகாணத்துக்கான புகையிரத பாதை 100 சதவீதம் பூர்த்தியாகாத நிலையில், இந்திய உயர்ஸ்தானிகரகத்துக்கே தெரியாமல், யாழ்ப்பாண் வரையான புகையிரத சேவையை ஆரம்பிக்கும் நிகழ்வை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. இந்த வேலைத்திட்டத்துக்கான நிதியை வழங்கிய இந்திய அரசாங்கத்தின் உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, இந்த நிகழ்வுக்காக சாதாரண விருந்தாளியாக அழைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துடன், குறிப்பாக மகிந்தராஜபக்ஷவுடன் இந்திய உயர்ஸ்தானிகரகம் முரண்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/88464.html
மகிந்தவால் மோடியிடம் ம.தி.மு.க விலகல்?
இதற்கு பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் வைகோ நாவை அடக்காவிட்டால், தமிழ் நாட்டில் அவர் நடமாட முடி யாது. அவரை அடக்குவது எப்படி என்று ஒவ்வொரு பா.ஜ.க. தொண்டனுக்கும் தெரியும் என்று கூறினார்.
வைகோவை மிரட்டும் வகை யில் ராஜா பேசியதற்கு தமிழக அரசையல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி வைகோவை பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விரட்ட வேண்டும் என்று அடிக்கடி டுவிட்டர் பக்கத்தில் கூறி வருகிறார். இந்த நிலையில் பா.ஜ.க.வில் உள்ள மற்ற தலைவர்களின் பேச்சும் வைகோவுக்கு எதிராகவே உள்ளது. இதன் காரணமாக பா.ஜ.க. ம.தி.மு.க. உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
வைகோவை மிரட்டும் வகை யில் ராஜா பேசியதற்கு தமிழக அரசையல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி வைகோவை பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விரட்ட வேண்டும் என்று அடிக்கடி டுவிட்டர் பக்கத்தில் கூறி வருகிறார். இந்த நிலையில் பா.ஜ.க.வில் உள்ள மற்ற தலைவர்களின் பேச்சும் வைகோவுக்கு எதிராகவே உள்ளது. இதன் காரணமாக பா.ஜ.க. ம.தி.மு.க. உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் பாராளு மன்றத் தேர்தல் நடந்த போது, பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில், தமிழ்நாட்டில் இருந்து முதன் முதலாக சென்று அந்த அணியில் சேர்ந்தது வைகோவின் ம.தி.மு.க.தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தேர்தல் முடிந்து, மோடி பதவி ஏற்பு விழாவுக்கு ராஜ பக்சே அழைக்கப்பட்ட நாள் முதலே பா.ஜ.க. & ம.தி.மு.க. இடையிலான மோதல் தொடங்கி விட்டது.
இதையடுத்து இலங்கை தமிழர் பிரச்சினை, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினைகளில் பா.ஜ.க., ம.தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு அதிகரித்தது. குறிப்பாக சிங்கள தலைவர் களுடனும், சிங்கள அரசு டனும் பா.ஜ.க. மூத்த தலை வர்கள் அன்னியோன்யமாக பழகுவதை ம.தி.மு.க.வின ரால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையை பெற்றுக் கொடுக்கும் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு நடந்து கொண்டது போலவே பா.ஜ.க. அரசும் நடந்து கொள்வது ம.தி.மு.க.வினரை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. மேலும் ராஜபக்சேவே மீண்டும் அதிபராக வர வேண்டும் என்று பிரதமர் மோடியே விரும்புவது ம.தி. மு.க.வினரிடம் உச்சக்கட்ட வெறுப்பை ஏற்படுத்தி இருக் கிறது. எனவே பா.ஜ.க. கூட் டணியில் இருந்து விலகி, எதிர்போராட்டங்களில் ஈடுபட ம.தி.மு.க.வினர் தயாராகி உள்ளனர்.
’பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வைகோ விலக வேண்டும்’ என்று தமிழருவி மணியன் கோரிக்கை விடுத் துள்ளார். எனவே 2016-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட் டணியில் வைகோ இடம் பெற மாட்டார் என்ற எண் ணம் வலுத்து வருகிறது. டாக்டர் ராமதாசின் பா.ம.க. ஏற்கனவே 2016 தேர்தலில் தங்கள் தலைமை யில் புதிய அணி உருவாக்கப் போவதாக கூறியுள்ளது. எனவே தற்போது தமிழக பா.ஜ.க. அணியில் விஜயகாந்தின் தே.மு.தி.க. மட்டுமே உள்ளது.
நேற்று நாகர் கோவிலில் பேட்டில் அளித்த வைகோ பா.ஜனதாவைச் சேர்ந்த வாஜ்பாய், அத்வானி ஆகியோர் மிகப்பெரிய தலைவர்கள். அவர்களுடன் கூட்டணியில் க்கும்போதும், இல்லாதபோதும் நான் பழகியிருக்கிறேன். அவர்களது கண்ணியமான அணுகுமுறையில் ஒரு சதவீதம்கூட மோடியிடம் இல்லை.என கூறி யது குறிப்பிட தக்கது.
http://www.jvpnews.com/srilanka/88521.html
Geen opmerkingen:
Een reactie posten